வெள்ளி, 22 ஜூலை, 2016

Kabali - கபாலி - உண்மையான பாமரனின் விமர்சனம்

இன்று காலை வரை  டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் , இன்றைக்கு மாலை தான் டிக்கெட் கிடைச்சது மகிழ்ச்சி , ஒரு வழியா முதல் நாள் காட்சி அதிகமாக  செலவு பண்ணாமல் டிக்கெட் கிடைச்சது மிக்க மகிழ்ச்சி , டிக்கெட் கொடுத்த என்னோட ஒரு நண்பன் .. நீ நண்பேன்டா....நன்றி சொல்லிக்கிறேன் .

இந்த படத்தை பற்றி என்ன எழுவதுன்னு தெரியல , நல்லா இருக்குன்னு சொன்னா, என்னை கலாய்ப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு, அதே நேரத்தில் நல்ல இல்லை என்று சொன்னால் நிறைய பேர் என்னை திட்டுவதற்கு நிறைய வாய்ப்புண்டு இருந்தாலும் என் மனதில் பட்டவை இருபார்வைகளில் சொல்லுகிறேன்.
இது ரஜினியின் கபாலி என்று சொல்வதை தாண்டி ரஞ்சித்தின் கபாலி என்று தான் சொல்லணும், ஏன்னா ரஜினியின் படம்ன்னு எதிர்பார்த்து போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் , ஏன்னா ரஜினியின் வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி இருக்கும் படம், அதிகமான பஞ்ச் வசனங்கள் , அதிரடி சண்டைகள் , டூயட்கள் , வேகமான காட்சி அமைப்புகள் ,ரஜினியின்  காமெடிகள் எதுவும் இதில் கிடையாது , இதனால் இந்த படம் பலபேருக்கு பிடிக்கவில்லை, ஆனால் என்னை பொறுத்தவரை தலைவர் இப்போது தான் , தன் வயதுக்கு ஏற்ப்ப சரியான கதை மற்றும் கதாபாத்திரத்தை எடுத்து உள்ளார் அதனால் தலைவர்க்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம். அளவான பஞ்ச் வசனங்கள் , அளவான ஹீரோயிசம்ன்னு பண்ணியிருக்காரு , வயசானாலும் உங்க ஸ்டைல் குறையவே இல்ல சார் .

படத்தின் கதை என்னனா வழக்கமான பழி வாங்கும் கேங்ஸ்டர் படம் தான், ஒரே ஒரு வித்தியாசம் நடக்கும் இடம் மலேசியா அவளோதான், படத்தில் பெரிய திருப்பங்கள் என்று எதுவும் இல்லை அனைத்தும் ஒரு சராசரி ரசிகன் யூகிக்க கூடிய காட்சிகள் தான் அமைச்சிருக்காங்க,அது பல பேருக்கு ஏமாற்றம் தான் 

எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் என்னன்னா , ரஞ்சித் ஒரு கேங்ஸ்டர் படத்தோட usual rule உடைச்சிருக்கார் தான் சொல்லனும் ,குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்க ஒரு character ரொம்ப பறந்து பறந்து சண்டை போட்டு காப்பாற்ற முடியாது அதனால realisticah சண்டைகள் வச்சிஇருக்கார் இருந்தாலும் சில இடங்களில் ரஜினியின்  ரசிகர்களை திருப்திபடுத்த ஹீரோயிசம் அங்கே அங்கே காட்டி இருக்காரு , மேலும் பொதுவா ரஜினியின்  படத்தில் ரஜினியை தவிர எந்த கேரக்ட்டரும் மனசில் நிற்காது ரஜினியே பிரதானமாக தெரிவார் , ஆனால் இந்த படத்தில் தனிஷ்கா , அட்டகத்தி தினேஷ் ஆகியோர் மனசில் நிற்கிறாங்க ,அதுவும் அட்டகத்தி தினேஷ் கபாலியின் ஒரு ஒரு கண் அசைவிற்கும் செய்யும் செயல்கள் செம்மயா இருக்கு ,அவர் தலையை தலையை ஆட்டும் காட்சி சூப்பர், தனிஷ்கா போல்ட் கேரக்ட்டர் ரொம்ப நல்லா இருந்துச்சி ,மேலும் ரித்விகா , ஜானி பாய் எல்லாம் இருக்காங்க

சந்தோஷ் நாராயணன் நிறைய இடத்தில் இரைச்சல் இல்லாமல் அமையதிய bgm போட்டு இருக்காரு , நெருப்புடா பாட்டு ஏற்கனவே ஹிட் , அது சரியான இடத்தில் நான் நினைத்தது மாதிரியே மாஸ்   சீன்களில் பயன்படுத்தி இருக்காரு

மொத்தத்தில் கபாலி விளம்பரத்தினால் வசூலில் காலத்தை வென்றாலும் அனைவரின்   மனதிலும் வெல்வது கடினம்.

இப்படிக்கு
சினி கிறுக்கன்


7 கருத்துகள்:

  1. Climax scenele oru 10 nimisham tupakiye eduthu kuruvi sudara madiri oru 50 perayavathu potthu talraru. Ithan realsitica. Romba sorry

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rasigargal satisfy panna anga anga heroism panni irukkarunnu solli irukken boss,, athu thaan neenga sonna point.any fights romba paranthu paranthu pannala avar athu thaan realisticnnu sonne.

      நீக்கு
  2. Rajini has proven he is a wonderful actor not just mass hero.This film surely a different package from Rajini and Ranjith.

    KP

    பதிலளிநீக்கு
  3. Shyam, I feel it is little diffcult to read the letters, because of the background. Can you please adjust it?

    Thanks,
    Senthil

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம் ஷியாம்... உங்க வர்ணனை ரொம்ப இயல்பா இருக்கு. வாழ்த்துக்கள்.தலைவருக்கு இது படம் வித்தியாசமான படம் தான்... ரஜினி செம ஆக்ட்டிங். ஆங்...அது என்ன கடைசி வரி அப்படி எழுதி இருக்கீங்க???? விளக்கம் தேவை ! ;-)

    //மொத்தத்தில் கபாலி விளம்பரத்தினால் வசூலில் காலத்தை வென்றாலும் அனைவரின் மனதிலும் வெல்வது கடினம்.

    என் விமர்சனம் www.pazhaiyapaper.com/2016/07/kabali-movie-review.html

    பதிலளிநீக்கு

Comments