ஞாயிறு, 10 ஜூலை, 2016

Dhillukku Dhuddu - தில்லுக்கு துட்டு

என்ன மூன்று வாரமா  நிறைய படம் வந்தும் ஒரு படத்தை பற்றி கூட போடலையேன்னு என்னை கேட்ட நல்ல உள்ளங்களுக்கும் , அப்பாடா மூணு வாரமா இவன் இம்சை இல்லன்னு சந்தோஷபட்ட ரொம்ப நல்ல உள்ளங்களுக்கும் ,நான் உங்க சினிகிறுக்கன் மூன்று வாரம் கழிச்சி இந்த தில்லுக்கு துட்டு படத்தோட வந்து இருக்கேன் , மூணு வாரமா வார இறுதி நாட்களில் out of station பயணம், அதனால எந்த படமும் பார்க்கவில்லை எழுதவில்லை ,இந்த படமும் நான் எழுதுறது கொஞ்சம் தாமதம் தான் இருந்தாலும் நம்ம கடமையை செவ்ன செய்வோம்.

அட போங்கடா ஒரே பேய் படம் ட்ரெண்ட் ஆகவே இருக்கு , அதுவும் நம்ம தமிழ் சினிமாவுல காமெடி + பேய் படம்ன்னா ரொம்ப ட்ரெண்ட் ஆயிடுச்சி, இந்த படமும் அதுக்கு விதி விலக்கு இல்ல , அதுவும் சந்தானம் வேற இருக்காரு சொல்லணுமா ?

படம் ஆரம்பிப்பது என்னமோ நல்ல ஆரம்பம் தான் அந்த திபெத் சாமியார் வருவது, அந்த பங்களாவுக்கு ஒரு கதை சொல்லுவதுன்னு நல்லா இருக்கு,ஆனா போக போக எப்போதும் போல அரைச்ச மாவை தான் அரைச்சு இருக்காங்க , சாரி இது எல்லோரும் சொல்லுவது தான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லணும்ன்னா எப்போதும் பிசையற பரோட்டா மாவு போலே தான் பிசைஞ்சி இருக்காங்க.

சந்தானம் நல்லா ஆடுறாரு , நல்லா நடிக்கிறாரு , நல்லா சண்டை போடுறாரு, அவரோட intro பார்த்தா கொஞ்சம் திருப்பாச்சி விஜய் , கொஞ்சம் அண்ணாமலை ரஜினி , கொஞ்சம் வேதாளம் அஜித் வீர விநாயக பாட்டு அப்படின்னு எல்லோரையும் inspiration  ஆக எடுத்து அந்த பாட்டை கம்போஸ் பண்ணி இருக்காங்க ,  ஆனா காமெடி மட்டும் பழய மாதிரியே பண்ணுறாரு counter காமெடி , மற்றும் வசனங்கள் எல்லாம் பழய லொள்ளு சபா பார்க்கிறா மாதிரியே தான் இருக்கு  , சந்தானம் கொஞ்சம் out datedஆகுறாரோன்னு ஒரு feel வந்தது,

ஹீரோயின் சானியா சேட்டு  பொண்ணுக்கு நல்லா செட் ஆகிட்டாங்க ஆனா வசனங்கள் dubbingல நிறைய இடங்களில் lip  sync ஆகல, ஹீரோயின் அப்பாவுக்கு மாப்பிள்ளைன்னு ஒருத்தர் வராரு ஆனா ஹீரோயின்க்கு அக்காவா எங்கேயும் காட்டவில்லை, கடைசியா பயந்து ஓடும் போது அந்த மாப்பிள்ளைக்கு மனைவியா ஒருத்தர் வராரு அவ்ளோதான்.

படத்தோட மிக பெரிய ப்ளஸ் நம்ம மொட்டை ராஜேந்திரன் தான் , அது கூட ஆரம்பத்தில் ரொம்ப சுமாராக தான் இருக்கு ஆனா இறுதி 30 நிமிஷம் அவர் பண்ணும் காமெடி செம்ம , கிளைமஸ்ல் உண்மையான பேய்க்கும் , டூப்ளிகேட் பேய்க்கும் நடுவுல மாட்டிக்கிட்ட அவர் படும் அவஸ்தை அப்புறம் சந்தானம்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற விதம் எல்லாம் செம்ம,

ஏதோ தமன் இசையால் அங்கு அங்கே நமக்கு இது பேய் படம்ன்னு   ஞாபகம் வருது இல்லாட்டி இது வெறும் காமெடி படமாகவே இருந்து இருக்கும்.

படத்தோட கடைசி காட்சி எனக்கு என்னவோ அந்த insidiousல கொஞ்சம் சுட்டா மாதிரி ஒரு எண்ணம்

மொத்தத்தில் தில்லுக்கு துட்டு கொஞ்சம் நமக்கு கழுத்துல வெட்டு

இப்படிக்கு
சினி கிறுக்கன்

1 கருத்து:

Comments