சம்பந்தமே இல்லாம கேரக்டர்களை நாமே சம்பந்தம்படுத்தி பார்த்து , நமே ஒரு கதையை ஒரு குத்துமதிப்பா பார்த்து புரிஞ்சிக்கவேண்டிய படம் இந்த ரிச்சி , இந்தவாரம் இரண்டு படம் வந்துஇருக்கு இரண்டுமே ரீமேக் தான் , சத்யா படம் ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , ரிச்சி படம் உள்ளீடவாறு கண்டந்தி என்கிற கன்னட படத்தோட ரீமேக் , இது ஒரு cult movie ஆகணும் நினைச்சி எடுத்து இருப்பாங்க போல, நமக்கு கமல் படமே இரண்டாவது முறை பார்த்தா தான் புரியும் , இது அதுக்கும் மேல.
படம் ஆரம்பிச்சி 25 நிமிஷம் நிவின் பாலி படத்துல வரல , அதுவரைக்கும் அவரைப்பற்றி சுற்றி இருக்கும் கேரக்டர்கள் அவருக்கு full build up தராங்க , ஒருவழியா 25 நிமிஷம் கழிச்சி வரார், நிவின் பாலிக்கு இந்தளவுக்கு build up வேண்டுமா ? அப்படின்னு கேட்க தோணுது , நிறைய இடங்களில் slow motion வச்சி build up வேற , அந்தளவுக்கு கதைக்கு அவர் கேரக்டர் strong ஆகா இல்ல , அதே நேரத்தில முதல் பாதியில் ரொம்ப குறைவான காட்சிகளே அவருக்கு இருக்கு , அதுவும் வெறும் build up மட்டும் தான் , இரண்டாவது பாதியில் தான் அவரோட கேரக்டர் கொஞ்சம் தெரிய வருது , ஆனால் நாமே பல விஷயங்களை புரிஞ்சிக்க வேண்டும்ன்னு நினைத்து இருக்காங்க , அந்தளவுக்கு நாம புத்திசாலி இல்லையிங்கோ ..
எனக்கு நிவின் பாலி கேரக்டர் விட நட்டி நட்ராஜ் கேரக்டர் நல்ல வடிவமைச்சிருக்காங்கன்னு தோணுது, ஒரு சாதாரணமா இயற்கைய நடிச்சிருக்கார், அப்பறம் ரகு கேரக்டர் முக்கியமான கேரக்டர் ஆனால் படத்தில பார்க்கும் போது எங்கயோ ஏதோ ஒன்னு புரியாத மாதிரியே இருக்கு,
முக்கியமான கேரக்டர் ஹீரோயின் ஷ்ரதா ஆனால் screenல ரொம்ப ரொம்ப ஸ்கோப் கம்மி தான் , ஹீரோ, ஹீரோயினை விட "லட்சுமி" குறும்படம் புகழ் நடிகை லட்சுமிக்கு தியேட்டர்ல நல்ல வரவேற்பு , அவங்க பெயர் போடும் போதும் சரி , அவங்க படத்துல முதல் காட்சியில் வரும் போதும் சரி செம்ம கைத்தட்டு மக்கள் தட்டுறாங்க .ரிச்சி படம் ரீச் ஆகுதோ இல்லையையோ நீங்க நல்லா ரீச் ஆகிருக்கீங்க .
ரிச்சி மற்றும் ரவி கேரக்டர் காட்டும் பொழுதெல்லாம் ஒரே red கலர் tone படத்துல இருக்கு , நட்டி கேரக்டர் காட்டும்பொழுது blue மற்றும் green கலர் வருது , அதற்க்கு என்ன அர்த்தம் தெரியல , இந்த படத்தை பற்றி வேற என்ன சொல்வது என்று தெரியல , என்னமோ ஏதோ ஒரு புதிர் , ஏதோ ஒரு aptitude test எழுதுவதற்கு போனா மாதிரியே ஒரு feel , முதல் பாதி எதற்கும் சம்பந்தம் இல்லாம , என்னடா சொல்லவாறீங்க மண்டைய சொறிஞ்சிக்கிட்டு இருக்க ஒரு feel ,படம் முடியும்போது இந்த படத்தை புரிஞ்சிக்கிற அளவுக்கு நமக்கு தான் அறிவு இல்லையோ ? இல்ல படம் மொக்க தானோ ? இப்படி பல கேள்விகளோட தன வெளியே வர முடியுது .
மொத்தத்தில் ரிச்சி ரொம்ப பிச்சி பிச்சி நம்மளை செஞ்சாங்க நல்லா வச்சி
இப்படிக்கு
சினி கிறுக்கன்
Thanks for reviewing Richie movie shyam!
பதிலளிநீக்குSuper ji, nalla veyla na padathu polam iruntha
பதிலளிநீக்குNalla velai
பதிலளிநீக்கு