10 எண்றதுக்குள்ள... மேல இருக்கிற இந்த போஸ்டரை பார்த்தா என்ன தோனும் ????.. யப்பா செம்ம அடிதடியா.. பரபரப்பா இருக்க ஒரு படம்ன்னு தோனும் ...அப்படியே தியேட்டர் ல போயிட்டு உட்கார்ந்தா முதல் பத்து நிமிஷம் கதை பத்திகிட்டு போறா மாதிரி தெரியும்..அப்புறம் மீதி 2.20 மணி நேரம் 10 எண்றதுக்குள்ள போகாது, 10 மணி நேரம் போல போகும் பார்க்கிற நம்மக்கு தான் பத்திகிட்டு வரும்.
விக்ரம் போல ஒரு சூப்பர் நடிகனுக்கு இப்படி ஒரு படம் தேவையா?.விக்ரம் ஒரு நிச்சயமா கதை பலம் மேலும் நடிப்புக்கு நல்லா தீனி போடுறா மாதிரி வேண்டிய ஒரு படம் எடுக்காம ஏன் இந்த படம் பண்ணாருன்னு தெரில ..
சமந்தா அடுத்த ஒரு லைலா ஜெனிலிய போல நடிக்கணும் ஆசைபட்டு நடிச்ச படம் போல, கதைப்படி சமந்தா செய்யும் செயலுக்கு விக்ரம் கடுப்பு ஆவாரு ..சத்தியமா பார்க்கிற நம்மக்கும் கொஞ்சம் கடுப்பு தான் ஆகுது
எத்தனை தடவை தான் நம்ம ஆளுங்க இன்னும் தேவை இல்லாம பாட்டு சேர்க்க போறாங்களோ ?அந்த டாபா பாட்டு எதுக்குன்னு தெரியல .
ஏன் ஆட்களை கடத்துகிறாங்க காரணத்தை சஸ்பென்சா கடைசி வரைக்கும் சொல்லாம இருந்தா நல்ல இருக்கும்ன்னு டைரக்டர் நினைச்சிட்டாரு போல, இரண்டாவது பாதியில் கடைசியா சொல்ல வந்ததை இடைவெளியில் இருந்து ஆரம்பிச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும் .
கோலிசோடா போல சூப்பர் படம் கொடுத்த ஒரு இயக்குனர் ஆச்சே அதனால போய் பார்த்தா ஏமாற்ற்றம் தான்.
வெளிப்படியா சொல்லணும்னா இதுக்கு மேல இந்த படத்தை பற்றி எனக்கு எழுதவரல
மொத்தத்தில் : கிளைமாக்ஸ் வரும் நேரத்தில 10 எண்றதுக்குள்ள படம் முடியுமா தோன்ற அளவுக்கு வச்சிட்டாங்க ..
இப்படிக்கு
கிறுக்கன்
Shyam..nice review...for every movie your style of reviewing is going up!! These days we don't want for movie release but for your movie reviews!!!! Keep up the good work. Your rasanai is good and its shows in your writing style too. - Krishna Prabhakar
பதிலளிநீக்கு