சரி வாங்க படத்தை பற்றி பார்க்கலாம், இந்த படத்தை பற்றி எல்லாருக்கும் தெரிந்த சில உண்மைகள், ஆம் இந்த படம் sleepless nightகிற படத்தோட ரீமேக், அப்புறம் கதைன்னு பார்த்தா , தன்னோட பையனை ஒரு இரவில் மீட்டு எடுக்க வேண்டும், அதே நேரத்தில தன்னோடவே இருக்கும் வில்லன் யார்னு கண்டுபிடிக்க வேண்டும் அது தான் ஒரு வரி கதை.
கமல் அவர்களுக்கு ஒரு பெரிய hats off, ஏன்னா original படத்தை கொஞ்சம் கூட அச்சு அசல் மாறாமல், எந்த ஒரு kollywood மசாலா சேர்க்காமல் அப்படியே தந்துடாரு, ஏன்னா வேற யாராவுது பண்ணிருந்தால் நிச்சியமா அந்த கிளப்ல ஒரு item song சேர்த்து இருப்பாங்க அல்லது அவரு முத்தம் கொடுக்கும் போது அந்த பொண்ணு டூயட் பாடுறா மாதிரி சேர்த்து இருப்பாங்க, நல்ல வேலை அது மாதிரி எதுவும் சேர்க்கல,ஒரிஜினல் படம் sleepless night பார்த்துட்டு இப்படி இருந்தா நல்லா இருக்கும்ன்னு ஆகஸ்ட் மாசம் ஒரு பதிவு பண்ணிருந்தேன், அதே மாதிரி தான் இருந்துச்சு .எனக்கு அந்த original பார்த்த feel அப்படியே இருந்துச்சு,இருந்தாலும் கமலோட குசும்புன்னு ஒன்னு இருக்குல அதை original கதை முடிஞ்சதுக்கு பிறகு அவர் அதை சேர்த்து இருக்காரு, கடைசியாய் வருகிற hospital சீன் & 3 மாசம் பிறகுன்னு வரும் சீன் அதுஎல்லாம் கமலின் டச்.
பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், எல்லாருடைய கதாபாத்திரம் அவங்களுக்கு சரியா பொருந்தி இருக்கு, த்ரிஷா போலீஸ்காரங்களா வருவது கொஞ்சம் நெருடலா இருக்கு அட இவங்க போலீஸ்காரா அப்படின்னு கேட்க தோன்றினாலும், இது வரைக்கும் த்ரிஷா பண்ணி இருப்பதில் நல்ல value added character அவங்களுக்கு,
கொஞ்சமா வந்தாலும் கொஞ்சமாக சிரிக்க வைக்கும் சாம்ஸ், அந்த kitchenல சண்டை போடும் போது நகைச்சுவை செய்கிற அந்த சமையல்காரங்க, அந்த ரெண்டு பேருல ஒருத்தர் நிச்சயமா கமலுக்கு பிடிச்சவர் போல, ஏன்னா விஸ்வருபதிலும் அவர் தான் தொப்பிய கழட்டிட்டு பாம் வெடிக்க வைப்பாரு,இதுலயும் ஒரு சின்ன ரோல் பண்ணிட்டாரு.
அந்த kitchenல கமலும், த்ரிஷாவும் சண்டை போடும் போது, கமல் த்ரிஷா ஒரு ரூம்ல இருந்து இன்னொரு ரூம்க்கு போயிட்டு விழுறாங்க ,அது வரைக்கும் கமல் திர்ஷாவை முகத்தில அடிகிறாரு, தட்டுல அவங்க முகத்தை போட்டு இடிகிறாரு, அந்த அடி அடிச்சதுக்கு அவங்க முகத்தில அப்பவே ரத்தம் வந்து இருக்கணும், ஆனால் அங்கு இருந்து இன்னொரு அறையில் தள்ளும் போது அவங்க முகத்தில் ரத்தம் தெரியில, ஆனா அந்த இன்னொரு ரூம்ல போய் விழும்போது அங்க இருக்க ஒரு அலமாரில விழுந்த அப்புறம் தான் த்ரிஷா முகத்தில ரத்தம் தெரிது, எப்படி இப்படி அவர் சின்ன விஷயங்கள் எல்லாம் மிஸ் பண்ணி இருக்காங்க தெரியல, டேய் இந்த அளவுக்கு சொல்லனுமா கேக்குறிங்களா? ஏன்னா எந்த அளவுக்கு சின்ன விஷயங்கள் டைரக்டர் நோட் பண்ணி இருக்காரு தெரியுமா? கிளைமாக்ஸ்ல கார் விபத்து ஆகி விழும்போது அந்த கார் நிறைய பல்டி அடிச்சி விழும், சாதாரண மக்களுக்கே தெரியும் அதுக்குள்ளே இருப்பது பொம்மை தான்னு, அதுல அந்த த்ரிஷா போட்டு இருக்க hair style மாதிரியே செட் பண்ணி இருப்பாங்க, அந்த கார் பறக்கும் போது அந்த குதிரைவால் முடி மட்டும் வெளியில நல்லா தெரியும் அந்த அளவுக்கு உன்னிப்பா பண்ணி இருக்காங்க அதனால தான் சொன்னேன்.
Gibraan இந்த படத்துக்கு என்ன feel கொடுக்க முடியுமோ அதை சரியா mix பண்ணி கொடுத்து இருக்காரு, கமலுக்கு ஆஸ்தான மியூசிக் டைரக்டர் ஆகிட்டாரு போல
கமல்கிட்ட எனக்கு பிடிச்ச சில விஷயங்கள்,இந்த வருஷத்தில வந்த மூன்று படத்திலும் தன்னோட வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் பண்ணிருப்பது தான் , வயசான காலத்துல சும்மா டூயட் பாடி சுற்றாமல், ஒரு அப்பாவா அதுல எப்படி ஒரு heroism பண்ண முடியுமோ அந்த மாதிரி கதாபாத்திரத்தை தான் கமல் இந்த வருஷம் வந்த படங்கள பண்ணிருக்காரு.சில பேரு இந்த படம் கமல் படம் போல இல்ல bore அடிக்குதுன்னு எல்லாம் சொல்லி இருக்காங்க, ஏன்னா கமல் அந்த ஒரிஜினல் படத்துல எப்படி இருந்ததோ அதே அப்படியே கொடுத்துட்டாரு, எந்த ஒரு தேவை இல்லாத heroism சேர்க்கவே அல்ல.
Overall : ஒரு வித்தியாசமான சினிமா விரும்பி பார்பவர்களுக்கு(usual Masala,comedy,songs,punch dialogues இல்லாமல்) அது தூங்காவனம் மற்றவர்களுக்கு தூங்கியவனம்
இப்படிக்கு
கிறுக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments