ஒரு குண்டான பெண்ணின் கதைங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம், ஆனால் படம் எப்படி போகுது?
இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழில வந்த படம்ன்னாலும், படத்தில் நடிச்சவங்க, டைரக்டர் , மியூசிக் டைரக்டர் எல்லாரும் தெலுங்கு, அதனால ஒரு தெலுங்கு படம் பார்த்த effect இருக்கு, நிறைய இடங்கள் நடிச்சவங்க உதடு அசைவு தெலுங்குல இருக்கு, இதனால டபிங் படம் பார்த்தா மாதிரி தான் இருக்கு.
ஆர்யா மற்ற படங்களில் நடிச்சா மாதிரி தண்ணி அடிக்கிறது , சந்தானம் கூட காமெடி பண்ணறது , bro , மச்சி , மாமான்னு வசனம் பேசாம, கொஞ்சம் வித்தியாசமா நல்லா நடிச்சி இருக்காரு,
அனுஷ்கா நிஜமாகவே குண்டு ஆனாங்களா இல்ல அது மாதிரி செட் பண்ணாங்களா தெரியல, சில காட்சில சில ஷாட்ல குண்டா தெரிறாங்க சில இடங்கள கொஞ்சம் நார்மலா தெரிறாங்க, டைரக்டர் ஏன் இப்படி ஒரு continuity கவனிக்கவில்லையா ? அதே மாதிரி முதல் பாதியில் அனுஷ்கா ரொம்ப கஷ்டப்பட்டு காமெடி வர ட்ரை பண்ணி நடிச்சா மாதிரி இருக்கு, சில இடங்கள அது ஓவர் ஆக்டிங் போல தான் இருக்கு, ஆனால் இரண்டவுது பாதியில் கதை seriousah போகும் போது எப்பவும் பார்க்கிற நம்ம அனுஷ்கா ஆக்டிங்கல back to form la வராங்க
பிரகாஷ்ராஜ் எப்பொழுதும் போல வந்து அவரோட கேரக்டர்க்கு நல்ல பண்ணிட்டாரு, இருந்தாலும் அது கொஞ்சம் செயற்கையாய் தெரியுது, அப்பறம் பல கோலிவுட் நடிகர்கள் கௌரவ தோற்றத்தில வந்துட்டு போறாங்க,
நம்ம சமூகத்தில எப்படி இந்த size zero மற்றும் உடனடியாக எடை குறைக்கிற நிகழ்ச்சியெல்லாம் வச்சி ஏமாற்றம் எல்லாம் பண்ணறாங்கன்னு காட்டி இருக்காங்க, save ஜோதி ன்னு படத்தோட கதை கொஞ்சம் நகரும் போது நமக்கே அட நம்ம கூட கொஞ்சம் உடம்பு குறைச்சா நல்லா இருக்கும் அதுக்கு கொஞ்சம் work out பண்ணலாமான்னு தோனுச்சு பிறகு கடைசியா வர காதல் சீன எல்லாம் கொஞ்சம் bore அடிக்கிறா மாதிரி இருக்கு
இன்னும் கொஞ்சம் இஞ்சியை நல்லா சுத்தபடுத்தி உறித்து இருந்தால் இந்த இஞ்சி இடுப்பு அழகாக வந்து இருக்கும்
இப்படிக்கு
கிறுக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments