வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

Visaranai - விசாரணை

சத்தியமா சொல்லுறேன் இந்த படத்தை பற்றி நான் பேசுற  அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லைங்க ,இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்ததிற்கு , இயக்குனர் வெற்றிமறானுக்கும்  , அதை உருவாக்க தயாரிப்பாளராக துணைபுரிந்த தனுஷ்க்கும், ஒரு பெரிய  தலைவணங்கிய  வாழ்த்துகள்,ஏன்னா இந்த மாதிரி ஒரு உண்மை கதையை எடுத்து வெளியிட ஒரு தைரியம் வேண்டும்,

ஒரு போலீஸ் விசாரணையில் என்ன எல்லாம் நடக்கும், எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருக்கும், காவல்துறைக்கு உள்ளே எந்த மாதிரி அரசியல், மற்றும் தனி நபர் பதவி முன்னேற்றம், தங்கள் சுயநலத்திற்காக எந்த அளவிற்க்கு எல்லாம் போவாங்க என்று காட்டி இருக்கும் படம் தான் இந்த விசாரணை,ஆனா அது சினிமா தனமா இல்லாமல், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் எல்லாம் எப்படி இருக்கும் அங்க எப்படி நடை  முறையில் உள்ளதுன்னு உண்மையா  கொடுத்து இருக்காரு,என்கௌண்டர்க்கு போகும் போது துப்பாக்கியை   கையழுத்து போட்டு வாங்குவது எல்லாம் நல்லா காட்சி படுத்திருக்காங்க ,மற்ற படங்களில் எல்லாம் சும்மா பொம்மை துப்பாக்கி போல தான் ஒரு feel இருக்கும் ஆனா இதுல அப்படி இல்ல,உண்மையா சொல்லணும்ன்னா அந்த துப்பாக்கி வாங்கும் போது அதோட கனத்தை உணர முடிந்தது நமக்கு , அட அந்த அளவுக்கு weight ah  இருக்குமான்னு தோனவச்சது அந்த அளவுக்கு காட்சி படுத்தி இருப்பாரு

நிச்சயமா இந்த படம் பார்க்கும் போது நாமே அங்க இருந்து அடி வாங்குற மாதிரி ஒரு உணர்வு, அட்டகத்தி தினேஷ் அந்த அளவுக்கு நடிச்சி பிண்ணி எடுத்துடாரு, அதுவும் அவர் நின்ற  இடத்திலிருந்து அடிவாங்கும் காட்சியில் அவர் மூக்கில் இருந்து சளி வர அளவுக்கு காட்டுவது அவரின் நடிப்பின்  உச்சம், அவர் அந்த காட்சியில் நடிச்சார இல்ல நிஜமாகவே அடி வாங்கினாரா தெரியல , அவர் குக்கூ படத்திற்கு  அவார்ட் நிறைய வாங்குவாருன்னு அவர் எதிர் பார்த்து இருப்பார் ஆனா அவர்க்கு அது கிடைக்கவில்லை,நிச்சயமா அது ஏமாற்றமா இருந்து இருக்கும், ஆனா நிச்சயமா இது அவர்க்கு வங்கி தரனும் 

அவர் மட்டுமா ? அவர் கூட நடிச்ச மற்ற மூன்று பேரும் செம்ம, இறுதி காட்சியில் அப்சர் கதாபாத்திரத்தில் வருபவர் கை உதறிகிட்டே பக்கெட் எடுத்து போகுற காட்சி சூப்பர், பார்க்கிற நம்மகே ஐயோ இவங்களுக்கு என்ன ஆக போகுதுன்னு அளவுக்கு பார்பவர்களை படத்தோட ஒன்ற வச்சிட்டாரு இயக்குனர்.

கிஷோர் கொஞ்ச நேரம் வந்தாலும், சமூதிரகனியொட பேசுகிற வசனம், தெனாவட்டு எல்லாம் சூப்பர், சமூதிரகனி நிறைய  படத்தில போலீஸ்காரரா வராரு, இதுல பக்காவா செட் ஆகிட்டாரு, அவர் கோவமா இருக்கும் போதும் சரி, கடைசியா தப்பு பண்ணுகிறோமோ உணரும் போதும் சரி கலக்கிட்டாரு 

முதல் பாதி சில காட்சிகள் , ஹோட்டல்க்கு அனுப்பி சாப்பிட வைப்பது , மற்றும் நீதிமன்றத்தில் என்ன நடக்க போகுதுன்னு நாம்ம யூகிக்கிற அளவுக்கு இருந்தாலும் , கை தட்டி ரசிக்க வைச்சிருக்காரு வெற்றிமாறன், அதுவும் அந்த ஆந்திர போலீஸ் நீதிபதிகிட்ட மொக்க வாங்குற காட்சி, கைதட்டு தியேட்டர் கிழிது,

படம் ஆரம்பிக்கும் போதே அந்த விடியகாலை பொழுது, ஆந்திரா ஸ்டேஷன் உள்ள, கிளைமக்ஸ் இருட்டான பகுதி, அப்படின்னு  எல்லாம், ரொம்ப ரியலா feel பண்ண வச்சி இருக்காரு கேமராமேன், கிஷோரை தொங்க விட்டு அடிக்கும் போது ஒரு கொசு வந்து உட்காரும் ஒரு ஷாட் செம்ம , அது நிஜமாகவே ஒரு கொசு வந்ததை எடுத்தாங்களா ? இல்ல எதாவுது சிஜி வேலையான்னு தெரியல, அந்த அளவுக்கு ரொம்ப தத்துருபமா எடுத்து இருக்காங்க 

இந்த படம் இன்டர்நேஷனல் அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கு அதனால நான் ரொம்ப நல்லா இருக்கு சொல்லுறேன் நினைக்காதிங்க, உண்மையில் படம் பார்த்து முடிச்ச பிறகு அதன் தாக்கம் நிறைய இருந்தது அதற்க்கு காரணம் அந்த கதையின் எழுத்தாளர் படம் முடிஞ்ச பிறகு வெனிஸ் திரைப்பட விழாவில் பேசியதை  போட்டு இருக்காங்க , மேலும் அவர் தான்!! ...யார் அவர்?? படம் பார்த்து தெரிஞ்சிகோங்க 

மொத்தத்தில் இந்த படம் முடிந்து வந்த பிறகும் நமக்கு நாமே ஒரு விசாரணை செய்யும் அளவிற்கு ஒரு உணர்வு கொண்டு வந்த படம் 

படம் trailer பார்த்து ரொம்ப வன்முறையா இருக்குமோன்னு நினைச்சி போய் பார்க்காம இருக்காதிங்க , நிச்சயமா போயிட்டு பார்க்க வேண்டிய படம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments