ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

Sethupathy - சேதுபதி

சேதுபதி இந்த படத்தை பற்றி எழதுவது கொஞ்சம் லேட் தான் ..இருந்தாலும் பரவாயில்லை ..எழதுவது எழதுவோம்ல ...

அட நம்ம தமிழ் சினிமாவில பல போலீஸ் படங்கள் பார்த்து இருக்கோம் ..இது என்ன புதுசா பண்ணிட போறாங்க அப்படின்னு நினைச்சு தான் போயிட்டு பார்த்தேன்,அதுவும் நம்ம விஜய்சேதுபதிக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை ? அப்படின்னு கூட நினைச்சேன், ஆனா அது எல்லாம் பொய் ஆக்கிடுச்சு இந்த படம், 

விஜய் சேதுபதிக்கு இது முதல் மாஸ் படம், பக்காவா செட் ஆகி இருக்கு,, மாஸ்ன்னு பேருல சும்மான்ன பஞ்ச் வசனம் , ஹேய் ஓய் ன்னு கத்தாம்மா அதே நேரத்துல மாஸ் அளவா கொடுத்து இருக்காரு, குறிப்பா canteen ல inspector விசாரிப்பது,  வில்லனை arrest பண்ணறது ,  தன்னோட பையனை வச்சி அடி ஆட்களை மிரட்டுவது செம்ம , நடிப்பிலும் ultimate & கெத்து காட்டிருக்காரு , படம் fullah விஜய் சேதுபதி தாங்கி புடிச்சி இருக்காரு , 

கதைன்னு பார்த்தா நம்ம தமிழ் சினிமாவுக்கு இது புதுசு இல்ல , வழக்கமான போலீஸ் கதை, வில்லனும் ஹீரோவும் மாற்றி மாற்றி கண்ணாமூச்சி ஆடும் ஆட்டம் தான், ஆனா அதை எந்த அளவுக்கு சுவாரசியமா கொடுக்குறாங்க தான் விஷயம் , அதை இந்த படம் பூர்த்தி பண்ணி இருக்கு , போர் அடிக்காத screenplay, சீரியஸ் ஆனா காட்சியிலும் நல்ல காமெடி கலந்து இருக்காங்க, அது மாதிரி படத்தில் நிறைய காட்சிகள் இருக்கு , குறிப்பா விஜய்சேதுபதி வில்லன் அடி ஆளு பார்த்து  டேய் கோவமா பார்க்காதடா சிரிப்பு சிரிப்பா வருதுன்னு அவர் சொல்லும் போது அதை பார்க்கும் போது நமக்கும் சிரிப்பு வருது,அதே மாதிரி சேசிங் சீன்ல , மற்ற போலீஸ்காரர்களை அவர் காலாய்க்கும் போதும் சரி படத்துக்கு தேவையான காமெடிகளை படத்தோட ஒன்றி போவது ரசிக்கிறா மாதிரி இருக்கு.

ரம்யா நம்பீசன் அழகா ரெண்டு பசங்களுக்கு அம்மாவா,சேதுபதிக்கு மனைவியா skypeல லவ் பண்ணறதும் அளவா அருமையா இருக்கு,அந்த ரெண்டு பசங்களும் நல்லா cuteah   செலக்ட் பண்ணிருக்காரு ..

விசாரணை கமிஷன்ல ஒருத்தர் குள்ளமா வருபவர் யார்ன்னு தெரியல,ஹேய் யாருப்பா அந்த ஆளு ? அப்படின்னு கேட்கிறா மாதிரி இருக்காரு அவர், அவர் பேசுவது body language எல்லாம் வித்தியாசமா இருக்கு.

எல்லா வகை ரசிகர்களுக்கும்  ரெண்டு மணி திருப்தி படுத்துறா மாதிரி ஒரு படம் தந்துஇருகாரு விஜய் சேதுபதி 

மொத்தத்தில் : மாஸ் + காமெடி + entertainer = சேதுபதி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments