வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

Miruthan - மிருதன்


இன்னைக்கு எப்பொழுதும் போல படத்தை பற்றி எழுதாம ..ஒரு கற்பனை  பேட்டி எடுக்கலாமே தோனுச்சு ... freeயா  இருந்தா வாங்களேன் பேய் மாதிரி வந்த மிருதன் கிட்ட எடுத்த இந்த பேட்டியை படிங்களேன் ...

சினி கிறுக்கன் : உங்க பேரு ?

மிருதன் :  நான் தான் மிருதன் 

சினி கிறுக்கன்: அப்படினா !. !. ??

மிருதன்:  மிருகம்  பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான் 

சினி கிறுக்கன்: அட நீ நம்ம ஆளவந்தான்..

மிருதன்:  யோவ் அவர் கடவுள் பாதி ..மிருகம் பாதி கலந்து செய்த கலவை ...நான் மிருகம்  பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை

சினி கிறுக்கன் : டேய் எந்த ஊருடா நீங்க  ?எங்க இருந்து டா வந்திங்க ? தடார் தடார்ன்னு வரிங்க , படார் படார்ன்னு கடிக்கிரிங்க 

மிருதன் : எங்க native place ஹாலிவுட் ,, கொஞ்சம் வேற நாட்டுல எல்லாம்  இருந்தோம் .. ஆனா இப்போ தான் இந்தியாவுக்கு வந்து இருக்கோம் ..இப்போ election வேற அதான் தமிழ் நாட்டுக்கு வந்துட்டோம் 

சினி கிறுக்கன் : ஏன்டா உங்கள control பண்ண ஆளு இல்லையா ?

மிருதன் : ஏன் இல்ல ஹீரோ ஜெயம் ரவி இருக்காரு, .. போன வருஷம் தனி ஒருவன் ஆகா இருந்து  பூலோகத்தை காப்பாற்றியதுக்கு  அப்புறம்,   எங்களை எல்லாம் சாவடிச்சி  லக்ஷ்மி மேனன் கிட்டேயும் , உங்ககிட்டேயும்  நல்ல பேரு வாங்க try பண்ணி இருக்காரு 

சினி கிறுக்கன் : எப்பா டேய் ஆமா டா...ஒரே ஆளு gun வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி சுட்டுகிட்டே போறாரு ..ஊட்டில இருந்து கோயம்புத்தூர் வந்த அப்புறம் ஊருக்குள்ள வேற போலீசே இல்லையா ?.. தனி ஒருவன் படம் நடிச்சாலும் நடிச்சாரு அவர் மட்டுமே தனி ஒரு ஆளா சண்டை போடுறாரு 
இதுல எனக்கு ஒரு doubt ....

மிருதன் : என்ன ??

சினி கிறுக்கன்: ஹீரோவை கடிச்சீங்க , சுத்தி இருக்கிருவங்க அப்படி, இப்படின்னு எல்லோரையும் கடிக்கிரிங்க , ஆனா கிளைமாக்ஸ்ல ஹீரோ யினை ஹீரோ காப்பாற்ற வரும் போது கூட ஹீரோயினைமட்டும் கடிக்க try பண்ணல ??அப்புறம் அந்த hospitalக்கும் மால்லுக்கும் நடுவே .. நீங்க ஏன் சும்மா கையை மேலே தூக்கிகிட்டு டான்ஸ் ஆடுறா மாதிரியே பண்ணிங்க ?

மிருதன் : யோவ் அதை டைரக்டர் கிட்ட கேளுயா ..நாங்க எல்லாம் stunt artist & junor artist தான்ங்க .. அவர் சொல்லுறது தான் நாங்க கேட்க முடியும் 

சினி கிறுக்கன்: இன்னொரு doubt 

மிருதன் : என்ன doubt ?

சினி கிறுக்கன்:உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க 

மிருதன் : சரி அதுக்கு என்ன ?

சினி கிறுக்கன்: அது இல்ல ...உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க அதனால fire engine வண்டி கொண்டு வந்து ..pipe மூலமா தண்ணி அடிச்சி ஒருத்தர் ஒருத்தரா hospitalகுள்ளசேர்த்து அப்புறம் தண்ணி காலி ஆகி ஹீரோயினை கஷ்ட்டப்பட்டு காப்பாத்தினதுக்கு  பதிலா .. அந்த வண்டில ஒரே stretchல   எல்லாரையும் உட்க்கார வச்சி அந்த தண்ணிய அடிச்சி காப்பற்றி இருக்கலாமே .. அதுவும் இல்லன ஹீரோ போலீஸ் தானே போலீஸ்ல  வஜ்ரான்னு ஒரு வண்டி இருக்கு .. அதை  வரவச்சி தண்ணி அடிச்சி இருக்கலாமே .... அதுவும் இல்லன மால் பில்டிங் உள்ள water sprayer இருக்கே அதை உடைச்சி இருக்கலாமே .

மிருதன் : யோவ். அப்படி எல்லாம் பண்ணிட்டா ஹீரோவுக்கு வேளை இல்லாம போய்டும். படம் சீக்கிரம் முடிஞ்சிடும் .. ஏற்கனவே படம் வெறும் 108 நிமஷம் தான் ...போயா நீ ரொம்ப கேள்வி கேட்கிற 

சினி கிறுக்கன்: இன்னொரு கேள்வி கேக்கணும் 

மிருதன் : என்ன ???? ...150 ரூபா கொடுத்து படம் பார்த்துட்டு 150 கேள்வி கேட்பியா .. நீ ??.. ரொம்ப கேள்வி கேட்ட உன்னையும் கடிச்சிடுவேன் 

சினி கிறுக்கன்: sorry பாஸ் ...தல கூட கார்ல தான் 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணுவாரு ஆனா ஜெயம் ரவி tempo  traveller ல எப்படியா 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணாரு ?

மிருதன்: படிக்கிற audience எல்லாரும் நல்லா கை தட்டி விசில் அடிங்கபா .. ஏன்னா இப்போ வர படத்தில பல director நம்ம தல அஜித் ஸ்க்ரீன் ல காண்பிச்சா கை தட்டி ரசிப்பாங்கன்னு, அந்த மாதிரி சீன் வைக்கிறாங்க ..அதே மாதிரி இந்த சினி கிறுக்கனும் try பண்ணுறான் அஜித் பெயரை சொல்லி .. ... யோவ்  படத்தில இருக்கும் நல்ல points சொல்லுயா 

சினி கிறுக்கன்: சரி சொல்லுறேன் ..ஸ்ரீமான் , ஜெயம் ரவி friend வரும் காளி , மற்றும் லக்ஷ்மி மேனன் அப்பா .இவங்க எல்லாம் பண்ணிருக்கும் காமெடி நல்லா இருக்கு.படம் fastah போகுது ..

மிருதன்: யோவ் படம் நல்லா இருக்கா ? நல்லா  இல்லையா அதை சொல்லு 

சினி கிறுக்கன்: தமிழ் நாட்டுல புதுசா எதாவுது வந்தா நிச்சயமா ஆதரிப்பாங்க ..அதனால உன்னையும் ஆதரிப்பாங்க .. நீ எப்படி இருக்க வந்து பார்ப்பாங்க .

சினி கிறுக்கன் & மிருதன் : நன்றி வணக்கம் 

உங்களுக்கு இந்த கற்பனை பேட்டி பிடித்து இருந்தால் ஷேர் செய்யவும் ..மேலும் கீழே கமெண்ட் பண்ணவும் பிடிக்காவிட்டாலும் சரி  ..கீழே கமெண்ட் பண்ணவும் .. 

இது freedom 251 மாதிரி இல்லங்க காசா பணமா ?..free தான் நல்லதோ கேட்டதோ கமெண்ட் பண்ணுங்க ..திருத்திக்கிறேன் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

1 கருத்து:

Comments