ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

Oscar Nomination - The Revenant - தி ரேவேனன்ட்

சினி கிறுக்கன் : Hey guys lets see about The Revenant  ..leonardo Dicapiro acted in this movie.. story about the...



Audience : டேய் டேய் சினி கிறுக்கா நில்லுடா இப்போ எதுக்கு இங்கிலிஷ்ல பீட்டர் விடுற?

சினி கிறுக்கன்: i don't knw why...after watching this movie english automatically coming

Audience: டேய் இப்போ எதுக்கு சந்தானம் வசனம் எல்லாம் பேசுற ?.. 

சினி கிறுக்கன்: bcz it is hollywood movie..

Audience:டேய்  நீ kollywood movie பற்றி எழுதுவதே தப்பு , சரி பரவாயில்லைன்னு விட்டுவெச்சா, நீ இப்போ hollywood  படத்தை பற்றி எழுத ட்ரை பண்ணுற , அதுவும் இது ஆஸ்கார் nominationல இருக்கிற ஒரு படத்தை பற்றி ..நீ என்ன அவ்வளவ்வு பெரிய அப்பாட்டக்கரா  ?

சினி கிறுக்கன்: அப்படி இல்லைங்க ...இது ஆஸ்கார் nomination படம் அதுவும் நம்ம titanic ஹீரோ நடிச்சது, இப்படி இந்த மாதிரி படம் பார்த்து எழுதுனா தானே ஊருக்குள்ள நம்மக்கு ஒரு கெத்து 

Audience : நீ ஒரு வெத்து எதுக்கு உனக்கு கெத்து 

சினி கிறுக்கன்:  நம்மளால ஒரு நல்ல படத்தை பார்த்தாங்கன்னா நமக்கு சந்தோசம் தான் 


Audience: ஓ அவ்வளவு அதுப்பு இருக்கா உனக்கு ? நீ சொல்லலைன்னா யாரும் போயிட்டு பார்க்கமாடாங்களா ? சரி சொல்ல வந்தததை சொல்லு 

சினி கிறுக்கன்: இது உண்மை சம்பவத்தை வச்சி எடுத்த படம் , எதிரிகிட்ட இருந்து தன் நாட்டு படையை காப்பாற்றி தன்னோட  இடத்துக்கு செல்ல வழி தெரியும் ஒரு guide தான் நம்ம ஹீரோங்க , போகிற வழில ஒரு கரடி கடிச்சி உயிர்க்கு போராடுறாரு , தன்னோட சகநாட்டு வீரர் சூழச்சியால வழில விட்டுட்டு போனதனால , காட்டுல தனி ஒருவனா உயிர்க்கு போராடி இருக்காரு நம்ம ஹீரோ , அவர் காட்டில இருந்து திரும்பி வந்தாரா இல்லையா ? இது தான் கதை 

Audience: இந்த மாதிரி கதை நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே 

சினி கிறுக்கன்: கதை ஒன்னும் புதுசு இல்லைதான், ஆனா படம் எடுத்த விதம் ,உயிரை கொடுத்து நடிச்ச Dicapiro தான் செம்ம, மனுஷன் தனக்கு  எப்படியாவுது இந்த ஆஸ்கார் வாங்கியே தீரணும் நடிச்சி இருப்பாரு போல , அநேகமா நீங்க இதை படிக்க போது  விருது வாங்கி இருந்தாலும் இருக்கலாம் ஏன்னா இன்னைக்கு தான் ஆஸ்கார் விருது வழங்கும் நாள் , அப்படி வாங்கிட்டருன்னா அவருக்கு நம் வாழ்த்துகள் , அப்படி வாங்கவில்லைன்னா அவர் நடிப்புக்கு நம் பாராட்டுகள், 
குறிப்பா அந்த கரடி கடிச்ச பிறகு , அந்தகாலத்து மருத்துவர்கள் மயக்க மருந்து எதுவும் கொடுக்காமல் அப்படியே அந்த புண்ணுகளை கையால் தைப்பது , அப்பறம் அவர் தண்ணி குடிக்கும் போது கழுத்தில் இருந்து ரத்தம் வருவது , அதை அவர் தனி ஆளாகவே சரி செய்வது , பச்சை புல்லையும் , பச்சை மாமிசத்தையும் சாப்பிடுவது எல்லாம் நாமே அங்க இருந்து கஷட்டபடுவது போல உணர்வு வருது ..

Audience: யெப்பா நீ சொல்லும் போதே ரொம்ப பயங்கரமா இருக்கே , மனுஷன் செம்மையா நடிச்சி இருப்பாரு போல

சினி கிறுக்கன்: அட ஆமாங்க  Dicapiroகாகவே இந்த படத்தை பாருங்க 

Audience:சரி அப்போ எவன்கிட்டயாவுது shareit  வங்கி officeக்கு பஸ்ல   போகும் போது பார்த்திட வேண்டியது தான் .

சினி கிறுக்கன்: அடப்பாவி இந்த மாதிரி நல்ல படத்தை, நல்ல effectoda  , நல்ல தியேட்டர்ல போயிட்டு பாருங்கயா 

இப்படி தான் danish girlன்னு ஒரு படம் வந்தது நம்ம ஊருக்கு,  அது முதல் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை  பற்றிய படம், ஆனா அந்த படம்  நம்ம ஊரு ஒரு சில  தியேட்டர்ல   ஒரு ஷோ தான் போட்டாங்க அதுவும் ஒரே வாரத்தில தூக்கிட்டாங்க , அந்த படத்தில நடிச்ச eddie redmayne  கூட  best actor nominationல இருக்காங்க, நான் எழுதும் போது  தெரியல யார் win பண்ணுறாங்கன்னு அனேகமா நீங்க இதை படிக்கும் போது தெரிஞ்சிடும் ..பார்ப்போம்  யார்ன்னு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments