அனைவருக்கும் சினி கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துகள் .
பாலாவின் தாரை தப்பட்டை இசைஞானியின் 1000வது படம் இப்படின்னு ரொம்ப எதிர்பார்போடு வந்து இருக்கு,
டைரக்டர் பாலா, அமீர், மிஸ்கின் இவங்க படங்களில் எல்லாம் பார்த்த ஒரே மாதிரி ஹீரோக்கள் தான் இருப்பாங்க எப்படின்னா அவங்க நடை,பழக்கவழக்கங்கள், வித்தியாசமான body language, ஒரு மூர்க்க தனமான கதாபாத்திரங்களா இருக்கும், அதுவும் பாலாவின் படம்னா அது கொஞ்சம் நிறைய இருக்கும்
சேது-விக்ரம் , நந்தா-சூர்யா , பிதாமகன் - விக்ரம் , நான் கடவுள் - ஆர்யா அவன் இவன் - ஆர்யா & விஷால், அதிலும் ஆர்யா கொஞ்சம் extraவா, பண்ணி இருப்பாரு, அதே போல் heroineகளும் ரொம்ப விசித்திர விசித்திரமா behavior பண்ணுவாங்க, கோவமான காட்சிகள், அழுகை காட்சிகள் எல்லாம் நல்லா நடிக்க வைப்பார்,முதல் தடவையா பிதாமகனில் சூர்யா, லைலா பார்க்கும் போது நல்லா இருந்துச்சி, ஆனா ஏன் ஒரே மாதிரி அனைத்து படங்களிலும் அதே மாதிரி பண்ணுகிறாரு?இதுலயும் அதே மாதிரி ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரம் இருக்கு , யதார்த்தமான கதை எடுக்கிற பாலா ஏன் செயற்கைதனமா தன்னோட கதாபத்திரங்களை நடிக்க வைக்கிறாரு?
கதை என்ன இந்த படத்தில் ? சமிபத்தில் வந்த பாலாவின் படங்களில் கதைன்னு பார்த்தா பொதுவா அது ஒரு சமூகத்தின் வாழ்வாதாரங்கள், அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களின் இன்பதுன்பங்கள் தான் காட்டுவாரு அதே போல தான் இதிலும் காட்டிருக்காரு, என்ன இதில் அவர் எடுத்திருக்கும் ஆயுதும் கரக ஆட்ட குழு, அதே போல் சன்னாசி கரகாட்டகுழுன்னு பெயர் பலகை காட்டி இருக்காங்க, கரகாட்டகார்கள் போடும் ஆடைகள் கூட போட்டு இருக்காங்க ஆனா ஒரு தடவை கூட தலையில் கரகம் வச்சி ஆடவே இல்லை, நம்மக்கு தெரிஞ்சது எல்லாம் கரகாட்டம்ன்னா கரகம் வச்சி ஆடனும் இது எந்த வகைன்னு இதை பற்றி தெரிஞ்சவங்க யாராவுது சொன்னால் நல்லா இருக்கும்.ஏன்னா பாலா இந்த மாதிரி விஷயங்களில் தப்பு செய்ய மாட்டார்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கு, படத்தோட கதை ஓட்டம் எதிர் பார்த்தா மாதிரி தான் போகுது பெருசா புதுசா எதுவும் சொல்லவில்லை
வில்லனா வருகிற சுரேஷ் நிஜ வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர்ன்னு சொல்லுறாங்க , பார்கிறதுக்கு கொஞ்சம் சீரியல் நடிகர் போஸ் வெங்கட் மாதிரி இருக்காரு.ஜோடிno -1 டைட்டில் வின்னர்ன்னு , அமுதவானன், ஆனந்தி ரெண்டு பேருக்கும் படத்தில் ஆடும் வாய்ப்பு கொடுத்துட்டாரு.
படத்தோட முக்கியமான ஹீரோ இசைஞானி இளையராஜா தான், படத்தோட trailerல் வரும் Bgmகாகவே இந்த படம் பார்க்கணும் தோனுச்சி, அது எப்போ வரும்ன்னு காத்திருந்தேன், படத்தோட கிளைமாக்ஸ்ல் தான் அது வந்துச்சு, சத்தியமா இசைஞானி அந்த இடத்தில் இசையில் ருத்ரதாண்டவம் பண்ணிட்டாரு, புல்லரிக்க வச்சிட்டார், படத்தில் எந்த இடத்திலும் அழுகையோ, சிரிப்போ எந்த ஒரு உணர்வும் எந்த ஒரு நடிகராலும், நடிகையாலும், ஏன் இயக்குநராலும் கொண்டு வர முடியாததை, கிளைமாக்ஸ்ல் இசைஞானி அந்த கோவம், ஆக்ரோஷம் , வெறி, என்று அனைத்தையும் அந்த இடத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டு வர வச்சிட்டாரு.
மொத்தத்தில் தாரை தப்பட்டை வழக்கமான பாலாவின் பட்டறை
இப்படிக்கு
சினி கிறுக்கன்

Pls do not go to movie with family. Lot of valgur.
பதிலளிநீக்கு