எனக்கு ஒரு கெட்ட பழக்கம் ரஜினி , கமல் ,விஜய், அஜித் மற்றும் பல பெரிய அளவு படங்கள் எல்லாம் எனக்கு சத்யம் main screenல் பார்த்தல் தான் எனக்கு ஒரு திருப்தி , முதல் நாள் எனக்கு palazzoவில் தான் கிடைச்சது , அதனால இரண்டவாது தடவை பார்த்தேன் , அந்த சவுண்ட் effect , screen picture clarity வேற எங்கேயும் கிடைக்காது ,சரி முதல் தடவை நான் பார்க்கும் பொழுது ஒரு சாதாரணமான ரசிகனாக பார்த்தது , இந்த முறை பார்க்கும் பொழுது பல விஷயங்களை என்னால் சற்று உற்று பார்க்கக் வைத்தது .அப்படி நான் பார்த்த விஷயங்களை உங்களிடம் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம் தான் இந்த post போடுகிறேன் . இங்கே பதிவு செய்யும் எல்லாம் என்னோட தனிப்பட்ட கருத்துகளும் , மற்றும் என்னோட யூகங்கள்.
முதல் கேள்வி ஏன் ரஜினியை ராவணனாக இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டது ?
நம்மை பொறுத்தவரை இராவணன் ஒரு வில்லன் , ராமன் தான் ஹீரோ, இங்க ஏன் ரஞ்சித் ரஜினியை ராவணனாக காட்டினார் ? என்ற கேள்வி இருக்கு .
முதலில் ராவணன் ஒரு தமிழன் , ராமன் ஒரு ஆரியன் , ஒருவேளை அதனால் தான் ரஜினியை ராவணனாக காட்டினாரா ரஞ்சித் ? ஏன்னா இங்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் , போலி போராட்டக்காரர்களுக்கும் ஆரியர்களை தான் பிடிக்காதே , ஏற்கனவே ரஜினியை தமிழர் இல்லை சொல்லுபவர்களுக்கு இப்படி ஒரு கேரக்டர் ரெடி செய்தார்களோ ?மேலும் ராமாயணத்துக்கும் இந்த படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கும் என்று தோணுது , ராமாயணத்தில் ராவணனின் முக்கியமான மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன் என்பவன் ராமனுக்கு எதிராக போர் புரிந்து இறந்து போவான் , அதுபோல இங்கே ரஜினியின் மகனாக வரும் திலீபன்(செல்வா) இறந்து விடுகிறான்.
ராவணனுக்கு இரண்டு மனைவி , அதுபோல இங்கு ரஜினிக்கு இரண்டு மனைவியாக காட்டாமல் இரண்டு காதல் உறவாக காட்டி இருக்கார் , மேலும் ராவணன் சீதையை தொட்டதில்லை , பிறர் மனைவி தீண்டாதவன் என்று கேள்விப்பட்டு இருக்கோம் , அந்த நல்ல குணத்தையும் காலா மற்றும் சரினா உறவின் மூலமாக இங்கு காட்டியிருக்கிறார் .
மேலும் ராமாயணம் சூர்ப்பனகை அடிபட்டதால் தான் ஆரம்பிக்கும், அது போல முதல் காட்சியே, ஒரு பெண் அடிபடுவாங்க அந்த பெண்ணோட பையன் வந்து காலவை வந்து கூப்பிடுவான், இரண்டத்திலும் பெண்ணால் தான் கதை ஆரம்பிக்குது .
வாலி என்கிற ஒரு கேரக்டர் இராமாயணத்தில் வருவார் , அவர் சுக்ரீவனின் தம்பி , ஆனால் ராவணனின் பழய நண்பன்(இதற்க்கு முன்னாடி நான் வாலி ராமனின் நண்பன் போட்டு இருந்தேன் என்னோட நண்பர் ஒருவர் இந்த கருத்தை சொல்லியதால் இப்பொழுது மாற்றுவிட்டேன் நன்றி நண்பரே ) அது போல இங்கே சமுத்திரக்கனி கேரக்டர் வாலியப்பன் என்ற பெயரில் வருகிறார் , வாலியப்பன் இங்கு இராவணன் என்கிற காலா பக்கம் இருக்கிறார் .அங்கு அனுமனால் இலங்கை தீயிட்டு கொளுத்தப்பட்டு எரிகிறது , அதுபோல தாராவி தீயிட்டு கொளுத்தப்படுகிற காட்சி இங்கு இருக்கு .
இந்த படம் இதிகாசமான ராமாயணத்தை மற்றும் இலங்கையையும் மட்டும் தொடர்புபடுத்தியது போல இல்லாமல் இலங்கை இந்தியா அரசியலையும் தொடர்பு இருக்குமோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு .ஆமாங்க ரஜினியை இறுதி காட்சியில் விடுதலை புலிகள் பிரபாகரனோடு தொடர்பு படுத்தியது போல ஒரு உணர்வு , படத்தின் இறுதி காட்சியில் காலா இறந்தது போல காட்டினாலும் மக்கள் காலா இன்னும் இறக்கவில்லை இன்னும் உயிரோடு தான் இருக்கார் சொல்லுவது போல ஒரு காட்சி இருக்கும் , அது போல தான் இலங்கை தமிழர்கள் இன்னும் பிரபரகன் இறக்கவில்லை மீண்டும் வாருவார் என்ற நம்பிக்கையில் இருப்பது போல இந்த காட்சி அமைந்து உள்ளது என்பது போல இருக்கு , மேலும் ரஜினி சொல்லுவார் இந்த காலா இறந்தாலும் இங்கே இருக்குறவங்க எல்லாம் காலா தான் சொல்லுவார் , என்னக்கு என்னவோ இறுதி காட்சிகள் எல்லாம் பிரபாகரனையும் , ஒரு காங்கிரஸ் தலைவரையும் குறிப்பது போல இருந்திச்சி .
மேலும் சில youtube விமர்சனத்தில் இந்த படத்தில் அம்பேத்கார் பற்றியும் அவரோட reference இருக்கு சொன்னாங்க ஆனால் அவங்க எது எல்லாம் சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியல , ஆனால் நான் கவனித்த விஷயம் ஒன்று படத்தின் இறுதி கட்டத்தில் , ரஜினி போராட்டம் என்று அறிவிக்கும் இடம், அங்கே தான் புரட்சி ஆரம்பிக்கும் , பின்னாடி பார்த்தால் ஒரு எரிஞ்சு போன ஒரு கட்டடம் இருக்கும் அந்த கட்டடத்தில் பார்த்தால் ஹிந்தியில் கௌதம புதர் விஹார் ன்னு(எனக்கு ஹிந்தி படிக்க தெரியும் ) போட்டு இருக்கும்,அம்பேத்கார் 1956ல் மாபெரும் ஒரு மதம் மாற்றம் புரட்சி நடந்த ஆண்டு அதுவும் ஹிந்துவில் இருந்து புத்த மதத்திற்கு , அதை குறிக்க தான் அங்க வச்சி இருக்காங்க, ரஜினி பயன்படுத்தும் ஜீப்பின் நம்பர் கூட MH 01 BR(அம்பேத்கர் initial ) 1956, காலா போஸ்டர் வந்த பொழுதே அந்த நம்பர் ப்ளட் பற்றி போட்டாங்க, அதனால் அந்த building பெயர்க்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கும் என்று எனக்கு தோன்றியது
மேலே குறிப்பிட்ட கருத்துகள் எல்லாமே என்னோட யூகங்கள் மட்டுமே , உண்மையா என்று இந்த பதிவை டைரக்டர் ரஞ்சித் படித்து சொன்னால் தான் உண்டு . ஏதோ நம்மால் முடிச்சது சும்மா கொளுத்தி போடுவோம் .
ஏண்டா டேய் இது எல்லாம் முதல் தடவை பார்க்கும் பொழுது தெரியலன்னு நீங்க கேட்பீங்கன்னு தெரியும் , அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே , முதல் தடவை பார்க்கும் பொழுது ஒரு ரஜினி படமாக தான் பார்க்க தோணிச்சி , ஆனால் இரண்டாவது தடவை நான் பார்க்கும் பொழுது ரஜினியின் tabelல் ராவண காவியம் புத்தகம் இருந்தது என் கண்ணில்பட்டது , அப்போ தான் எனக்கு இந்த படத்தை ராமாயணத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கணும் தோணுச்சு
குறிப்பு : ராவணன் தமிழனா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு , அதை பற்றி தேடி தேடி போகும் பொழுது பல புதிய பரிமாண செய்திகள் எனக்கு கிடைச்சுது , அது எல்லாம் உண்மையா பொய்யா தெரியாது , இருந்தாலும் உங்க referenceக்கு இங்கே பதிவு செய்கிறேன் .மேலும் நான் எந்த வீடியோ பார்த்து இந்த பதிவு போடவில்லை நான் பார்த்து எனக்கு தோன்றிய கருத்துகள் அவ்ளோதான் .
இராவணன் தமிழனா இல்லையா ?கீழே உள்ள லிங்க் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=XhW5UX2IEmU
இராவணன் குடும்பம் பற்றி
Visit https://www.quora.com/How-many-sons-did-Ravan-have
ராமாயணத்திற்கு இன்னொரு முகம் காட்டும் கதை
Visit https://www.youtube.com/watch?v=vXhxULdUd0I
மேலும் நான் சொன்ன கருத்துகளிலோ , அரசியல் பற்றியோ அல்லது இதிகாசத்தை பற்றியோ ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள் அதை மாற்றிவிடலாம் .
இரண்டாவது பதிவு போட்டதால் இந்த படம் சூப்பர் என்று எல்லாம் நான் சொல்லமாட்டேன் , இந்த பதிவு வெறும் நான் கவனித்த விஷயங்கள் மட்டுமே. .
மொத்தத்தில் நான் ஏற்கனவே சொன்னது போல கதையிலும் , திரைக்கதையிலும் காலா காலமானது தான் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
So it looks like u have now did a good research about Ravanan
பதிலளிநீக்குBayangaram Vera level review..
பதிலளிநீக்குS true I also felt the last scene referred to Prabhakaran, but u missed to comment on (Police & his in-law fight), she had choice to choose to get her clothes to cover-up or to fight back with lathi but she choose...
பதிலளிநீக்குGreat one.....vera level review.
பதிலளிநீக்குIn all this is pure Ranjith movie!! -- KP
பதிலளிநீக்குOne scene that had good angle and camera work is "uppu dhrishti" scene. Starting Kaala it covers while family :). --KP
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு