தங்கமகன் அப்படின்னு சொன்னவுடனே நம்மக்கு சூப்பர் ஸ்டார் படம் ஞாபகம் தான் வருது, சரி எப்படியோ அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்பந்தமமும் இல்ல, சரி இது எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
தனுஷ் அவரோட முந்தய படம் மாரில பக்கா மசாலா, மாஸ் , சும்மா கத்தி கத்தி சவுண்ட் விட்டு நடிச்சதக்கு, அப்படியே எதிரா ரொம்ப அமைதியா நல்லா நடிசிருக்காரு, அவர் மேலும் மேலும் நல்ல performerன்னு நிருபிச்சிட்டு வராரு, சின்ன சின்ன இடங்கள், சின்ன சின்ன reactions மற்றும் கோவப்படும் போதும் சரி, பாசமா லவ் பண்ணும் போதும் சரி, emotionah feel பண்ணும் போதும் சரி அப்படியே பக்காவா நடிப்புல பிண்ணி எடுக்குறாரு,
எமிஜாக்சன் அழகா சுடிதார்ல வராங்க,கோயில் போறாங்க, என்னடா இது, இந்த எமிக்கும் அவங்க கலர்க்கும் லோக்கல் தமிழ் பொண்ணு கேரக்டர் செட் ஆகுமான்னு தோனுச்சி?, அதுக்கு நம்ம டைரக்டர் அங்க அந்த கேரக்டர்க்கு ஒரு justification வைச்சிட்டாரு, அட அதாவுது அவங்க அப்பா ஒரு ப்ரிடிஷ்கறாரு அவங்க அம்மா ப்ராமின்ன்னு சொல்லி அங்க logickku ஒரு லாக் வச்சிட்டாரு, அட ஆமா எமி கலர்க்கு அவங்கள லோக்கல் பொண்ணு சொன்னா நம்ப முடியுமா ?அதனால டைரக்டர் அப்படி ஒரு லாஜிக் வச்சி முடிச்சிட்டாரு.அதுவும் இல்லாம நடிப்புல நல்ல improvement, அதுக்கும் மேல அவங்க பேசும் போதும் dubbing correctah lip sync ஆகி இருக்கு, தமிழ் உச்சரிப்பு பக்காவா பொருந்தி இருக்கு, ரொம்ப சில இடங்கள மட்டும் தான் dubbing செட்ஆகல, நிறைய படம் பண்ண ஹன்சிகா கூட இந்த அளவுக்கு பண்ணதில்லை, பேசாம ஹன்சிக்கா எமிகிட்ட எப்படி நடிப்பது, எப்படி தமிழ் உச்சரிப்பு சரியாய் பண்ணறதுன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.
சமந்தா ஒரு நடுத்தர குடும்ப மற்றும் கொஞ்சம் கஷ்ட படுற குடும்பத்து பெண்ணு அதனால படம் fullah காட்டன் புடைவைல வராங்க, ஆனா முகம் கொஞ்சம் அதிகமா மேக்கப் மற்றும் அவங்க முக்குகுத்தி படத்துல பார்க்க கொஞ்சம் அந்நியமா தெரியுது,
கே.ஸ் .ரவிக்குமார் & ராதிகா ஒரு parentsah சரியா பொருந்திருக்காங்க, ஆனா இன்னும் கொஞ்சம் அவங்க நடிப்புக்கு தீனி போடுறா மாதிரி இன்னும் கொஞ்சம் சீன் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்
தனுஷ் firendah வரும் சதீஷ் முதல் பாதயில காமெடி பண்ணிருக்காரு ஆனா எதுவும் மனசுல நிக்கிறா மாதிரி இல்ல, அதே மாதிரி வில்லனா வருபவரும் பெருசா impact ஆகல
இசை அனிருத், பாவம் பயபுள்ள இப்போ நிறைய பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்காப்ல, சரி இந்த படத்துல என்ன பண்ணாருன்னு கேக்குறிங்களா? அட அவர் எப்பவும் சத்தம்மா இரைச்சலா டமால் டும்மீல் ன்னு bgm, பாட்டுன்னு போடுவாரு ஆனா இதுல ரொம்ப அமைதியா போட்டு இருக்காரு, அதனால ரொம்ப நல்லா இருக்கு நினைக்காதிங்க, பாட்டு எதுவும் மனசுல பதியில. இருந்தாலும் கடைசி சண்டைல கொஞ்சம் சத்தம் தாஸ்தி தான்
money is ultimateன்னு சொல்லி வந்த படம் பார்த்தோம் ஆனா இந்த படம் money மட்டும் ultimate இல்ல மனிதர்களும் ultimate சொல்லி இருக்காரு, படத்துல சில பல லாஜிக் இடிக்கிறா மாதிரி ஒரு feel, அதாவுது அம்மா தனுஷ் கிட்ட கேட்கிறாங்க
அம்மா : டேய் நீ வேலைக்கு போடா, நீ வேலைக்கு போறேன் சொன்னா அப்பா ஆபீஸ்ல அப்பா வேலை வாங்கி தருவாரு
தனுஷ் : சரி வேலைக்கு போறேன்
அடுத்த ஷாட் தனுஷ் அவரோட அப்பா கூட வேலைக்கு போறாரு,
எங்க வேலைக்கு போறாங்க தெரியுமா ? income tax ஆபீஸ்ல ரெண்டு பேரும் போறாங்க , அது எப்படிங்க ஒரு income tax ஆபீஸ்ல அப்பா சொன்னவுடனே பையனுக்கு வேலை கிடைக்குது? என்ன லாஜிக்யா இது ?
அதே மாதிரி அப்பா தப்பு பண்ணிட்டு செத்துட்டாரு, அப்பா தப்பு பண்ணிட்டாரு அதனால பையனையும் வேலையவிட்டு தூக்கிட்டாங்க.ஏம்பா assistant directors இந்த லாஜிக் எல்லாம் நோட் பண்ண மாட்டிங்களா?
அதே மாதிரி தனுஷ் மற்றும் எமி கூட காதல் ரொம்ப நெருக்கமா காட்டுறாங்க நிறைய லிப் லாக் கட்சிகள் இருக்கு,ஆனா இந்த காட்சிகள் எல்லாம் கட் பண்ணாம U certificate எப்படி கொடுத்தாங்க தெரில,கலாச்சாரத்துக்கு எதிர் ஆனதுன்னு Spectre படத்துக்கு மட்டும் லிப் லக் சீனை கட் பண்ணிடாங்க., இதை எப்படி விட்டாங்க? spectre படத்துக்கு மட்டும் கட் பண்ணிட்டாங்களேன்னு ஆதங்கத்தில் கேட்கல, ஒரு நியாயத்தை தான் கேட்கிறேன்(Specter படம் இன்னும் நான் பார்கல)
தங்கமகன் மக்கள் மனதில் தங்கபதக்கம் வாங்குவாரு நினைச்சேன் ஆனா தங்கமகன் வெண்கலபதக்கம் தான் வாங்குவாரு போல
இப்படிக்கு
சினி கிறுக்கன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments