நான் ரொம்ப நாளா சமூகத்தை கவனிச்சு நினைச்சிருந்த ஒரு சில விஷயம் படமா வந்து இருக்கு, நான் சமிபகாலமா பார்த்த சில பேரு BE முடிச்சிட்டு , MBA பண்ணுறாங்க இல்லாட்டி BE முடிச்சிட்டு MBA படிச்சிகிட்டு bank exam எழுதுறான், ஏன்டான்னு கேட்டா அம்மா சொன்னங்க BE படிச்சேன், அப்பாவுக்காக பேங்க் exam try பண்ணுறேன் சொல்லுறாங்க, ஒரு தடவ முகபேர்ல ராத்திரி 8 மணிக்கு பெரிய வரிசை ஒரு பள்ளிக்கு முன்னாடி எதுக்குனா அடுத்த நாள் அந்த பள்ளியில application form தராங்களாம், அட ஆட்டு மந்தைகளா ஏண்டா நிக்குராங்கன்னு தொன்னுச்சு.ஏன் அந்த பெரிய கொம்பு பள்ளியில படிச்சா தான் சமுதயாத்தில நீங்க ஒரு பெரிய கொம்புன்னு காட்டிக்க தோனும் அதுக்கு தான் அங்க நிக்குறாங்க?, பசங்களுக்கு வரையறதோ, பாடுறதோ, ஆடுறதோ இயற்கையா வரணும், அப்படி இயற்கையா வருவத ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அந்த அந்த கிளாஸ்ல சேர்த்துவிட்டு அதன் நுணுக்கங்களை சொல்லி தரலாம் , அதை செய்யாம 5-10 வயசுலேயே பாட்டு கிளாஸ், drawing கிளாஸ் சேர்த்து விடனும்ன்னு யாருடா சொன்னது?இது எல்லாம் செய்றது எதுக்கு தெரியுமா ? உங்க status காட்டுவதற்கு சேர்த்து விடுவது, அப்படியே சேர்த்து விட்டாலும் 10std -12std படிக்கும் போது படிப்பு தான் முக்கியம் மார்க் வாங்குன்னு அந்த கிளாஸ் எல்லாம் கட் பண்ணி அப்புறம் காலேஜ், மார்க், சம்பளம் ன்னு மறக்க அடிக்கிறது, அப்புறம் என்னதுக்கு அந்த கன்றாவி கிளாஸ்க்கு எல்லாம் சேர்த்து விடுறாங்க ? மேல சொன்ன விஷயங்கள் எல்லாம் இப்போ இருக்குற middle கிளாஸ் upper middle கிளாஸ் பெற்றோரை பார்க்கும் போது தோனும் ஆனா இன்னைக்கு எனக்கு இந்த படம் பார்க்கும் போது நிறைய தோணிச்சு அதனால இங்கே பதிவு செய்தேன், சரி படத்தை பற்றி சொல்லுடான்னு சொல்லுறிங்களா, சரி வாங்க பார்க்கலாம்
இந்த படத்துக்கு பசங்க - 2 ன்னு பேரு வச்சதுக்கு பதிலா பெற்றோர்-2 ன்னு பேரு வச்சி இருக்கணும், பெற்றோர் மேல இருக்குற தப்பு எல்லாத்தையும் நம்ம சமூகம் பசங்க மேல தின்னிச்சிட்டு இருக்குன்னு நெற்றி பொட்டுல அடிச்சா மாதிரி எடுத்த படம்.
கொஞ்சம் 3 idiots , கொஞ்சம் தரே ஜமீன் பர் தாக்கத்துல இந்த படம் எடுத்து இருப்பாரு போல, நிச்சயமா அதே மாதிரி வந்த படம் இதுன்னு நான் சொல்ல வரல.
பசங்களோட சுட்டிதனத்த முதல் பாதியில் நல்ல காமெடியா காட்டி இருக்காங்க இரண்டாவுது பாதி பசங்களோட மனநிலைய புறஞ்சிகிற பெற்றோரை காட்டுறாரு
வாசனங்கள் ரொம்ப நல்லா இருக்கு, இதோ சில
1.பொண்ணு : அப்பா அந்த ஸ்கூல்க்கும்(private ) என் ஸ்கூல்க்கும்(Govt ) என்னபா வித்தியாசம்
அப்பா : அவன் இங்கிலிஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான் , இவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான் அவ்ளோ தான் வித்தியாசம் -( இந்த வசனம் இதுக்கு முன்னாடி facebook or வேற படத்திலா வந்ததுன்னு தெரில ஆனா இந்த படத்தில் பதிவு செய்தது சூப்பர் )
2. பசங்க கெட்ட வார்த்தை பேசல கேட்ட வார்த்தை தான் பேசுறாங்க
3.பசங்க மனசுல மதிப்பெண்ணை விதைக்காதிங்க , நல்ல மதிப்பான எண்ணங்களை விதைங்க
இது மாதிரி பல வசனங்கள் நல்லா இருக்கு
அந்த ரெண்டு பசங்களும் அழுவது, சிரிப்பது, வாலுதனம் செய்வதுன்னு ரொம்ப இயற்கையா இருக்கு ஏன்னா படங்கள இந்த மாதிரி கேரக்டர் பண்ணும் போது ஓவர் acting இல்லாட்டி செயற்கை தனமா தெரியும் அது மாதிரி இல்லாம இந்த ரெண்டு பசங்களும் ரொம்ப இயல்பா பண்ண வச்சி இருக்காரு டைரக்டர்.
முனிஷ்காந்த் திருட்டுதனம் பண்ணறது எல்லாம் நல்ல காமெடி , கார்த்திக், பிந்து மாதவி பள்ளியில் அட்மிசன் வாங்குற சீன சூப்பர், சூர்யா, அமலபால் குடும்பம் நல்ல positiveah காட்டினது அருமை.
எந்த ஒரு நெகடிவ் விஷயங்களோ, எந்த ஒரு நெகடிவ் கேரக்டர்களோ கட்டாமல் இருந்ததுக்கு டைரக்டர்க்கு நன்றி.நிச்சயமா குடும்பத்தோடு குறிப்பாக பெற்றோர்கள் நிச்சயமா பார்க்க வேண்டிய படம்
பூலோகம், பசங்க-2 இந்த இரண்டு படங்களும் இந்த சமுதாயத்தை பிரதிபலிக்கிற கண்ணாடியாய் இந்த வருஷ இறுதில வந்தது சூப்பர்.
இப்படிக்கு
சினி & சமூக கிறுக்கன்