சினி கிறுக்கன் : Hey guys lets see about The Revenant ..leonardo Dicapiro acted in this movie.. story about the...
Audience : டேய் டேய் சினி கிறுக்கா நில்லுடா இப்போ எதுக்கு இங்கிலிஷ்ல பீட்டர் விடுற?
சினி கிறுக்கன்: i don't knw why...after watching this movie english automatically coming
Audience: டேய் இப்போ எதுக்கு சந்தானம் வசனம் எல்லாம் பேசுற ?..
சினி கிறுக்கன்: bcz it is hollywood movie..
Audience:டேய் நீ kollywood movie பற்றி எழுதுவதே தப்பு , சரி பரவாயில்லைன்னு விட்டுவெச்சா, நீ இப்போ hollywood படத்தை பற்றி எழுத ட்ரை பண்ணுற , அதுவும் இது ஆஸ்கார் nominationல இருக்கிற ஒரு படத்தை பற்றி ..நீ என்ன அவ்வளவ்வு பெரிய அப்பாட்டக்கரா ?
சினி கிறுக்கன்: அப்படி இல்லைங்க ...இது ஆஸ்கார் nomination படம் அதுவும் நம்ம titanic ஹீரோ நடிச்சது, இப்படி இந்த மாதிரி படம் பார்த்து எழுதுனா தானே ஊருக்குள்ள நம்மக்கு ஒரு கெத்து
Audience : நீ ஒரு வெத்து எதுக்கு உனக்கு கெத்து
சினி கிறுக்கன்: நம்மளால ஒரு நல்ல படத்தை பார்த்தாங்கன்னா நமக்கு சந்தோசம் தான்
Audience: ஓ அவ்வளவு அதுப்பு இருக்கா உனக்கு ? நீ சொல்லலைன்னா யாரும் போயிட்டு பார்க்கமாடாங்களா ? சரி சொல்ல வந்தததை சொல்லு
சினி கிறுக்கன்: இது உண்மை சம்பவத்தை வச்சி எடுத்த படம் , எதிரிகிட்ட இருந்து தன் நாட்டு படையை காப்பாற்றி தன்னோட இடத்துக்கு செல்ல வழி தெரியும் ஒரு guide தான் நம்ம ஹீரோங்க , போகிற வழில ஒரு கரடி கடிச்சி உயிர்க்கு போராடுறாரு , தன்னோட சகநாட்டு வீரர் சூழச்சியால வழில விட்டுட்டு போனதனால , காட்டுல தனி ஒருவனா உயிர்க்கு போராடி இருக்காரு நம்ம ஹீரோ , அவர் காட்டில இருந்து திரும்பி வந்தாரா இல்லையா ? இது தான் கதை
Audience: இந்த மாதிரி கதை நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே
சினி கிறுக்கன்: கதை ஒன்னும் புதுசு இல்லைதான், ஆனா படம் எடுத்த விதம் ,உயிரை கொடுத்து நடிச்ச Dicapiro தான் செம்ம, மனுஷன் தனக்கு எப்படியாவுது இந்த ஆஸ்கார் வாங்கியே தீரணும் நடிச்சி இருப்பாரு போல , அநேகமா நீங்க இதை படிக்க போது விருது வாங்கி இருந்தாலும் இருக்கலாம் ஏன்னா இன்னைக்கு தான் ஆஸ்கார் விருது வழங்கும் நாள் , அப்படி வாங்கிட்டருன்னா அவருக்கு நம் வாழ்த்துகள் , அப்படி வாங்கவில்லைன்னா அவர் நடிப்புக்கு நம் பாராட்டுகள்,
குறிப்பா அந்த கரடி கடிச்ச பிறகு , அந்தகாலத்து மருத்துவர்கள் மயக்க மருந்து எதுவும் கொடுக்காமல் அப்படியே அந்த புண்ணுகளை கையால் தைப்பது , அப்பறம் அவர் தண்ணி குடிக்கும் போது கழுத்தில் இருந்து ரத்தம் வருவது , அதை அவர் தனி ஆளாகவே சரி செய்வது , பச்சை புல்லையும் , பச்சை மாமிசத்தையும் சாப்பிடுவது எல்லாம் நாமே அங்க இருந்து கஷட்டபடுவது போல உணர்வு வருது ..
Audience: யெப்பா நீ சொல்லும் போதே ரொம்ப பயங்கரமா இருக்கே , மனுஷன் செம்மையா நடிச்சி இருப்பாரு போல
சினி கிறுக்கன்: அட ஆமாங்க Dicapiroகாகவே இந்த படத்தை பாருங்க
Audience:சரி அப்போ எவன்கிட்டயாவுது shareit வங்கி officeக்கு பஸ்ல போகும் போது பார்த்திட வேண்டியது தான் .
சினி கிறுக்கன்: அடப்பாவி இந்த மாதிரி நல்ல படத்தை, நல்ல effectoda , நல்ல தியேட்டர்ல போயிட்டு பாருங்கயா
இப்படி தான் danish girlன்னு ஒரு படம் வந்தது நம்ம ஊருக்கு, அது முதல் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய படம், ஆனா அந்த படம் நம்ம ஊரு ஒரு சில தியேட்டர்ல ஒரு ஷோ தான் போட்டாங்க அதுவும் ஒரே வாரத்தில தூக்கிட்டாங்க , அந்த படத்தில நடிச்ச eddie redmayne கூட best actor nominationல இருக்காங்க, நான் எழுதும் போது தெரியல யார் win பண்ணுறாங்கன்னு அனேகமா நீங்க இதை படிக்கும் போது தெரிஞ்சிடும் ..பார்ப்போம் யார்ன்னு .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
கணிதன் ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து இருக்குறாரு இயக்குனர்,போலி certificate , போலி லோன் அப்படின்னு கொஞ்சம் different ah try பண்ணி இருக்குகாரு அப்போ மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம்.
படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ் கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னு சொல்லுறேன் இருங்க , அதுக்கு முன்னாடி படத்தோட திரைகதை ஓட்டம் எப்படி இருக்குன்னு பார்ப்போம், படத்தோட திரைகதை graph ரொம்ப flatah தான் ஆரம்பிக்குது , வழக்கமான கொஞ்சம் மொக்கை காமெடி,குடும்பம் intro , தேவையில்லாத முதல் 30 நிமிஷத்தில ரெண்டு பாடல் அதுவும் அந்த படத்துக்கு கொஞ்சம் கூட ஒன்றாத பாடல் , பிறகு படத்தோட திரைகதை graph மெல்ல மெல்ல மேல ஏறி இண்டர்வல் பிளாக்ல நல்லா போயிட்டு நிக்குது,ஐயோ எங்க இரண்டாவுது பாதியில் அப்படியே நேர் எதிரா மொக்கையா கொடுப்பாங்களோ தொன்னுச்சி ஆனா இரண்டாவது பாதியில் அதே வேகத்தோட நல்லா போகுது ,படம் இன்னும் கொஞ்சம் நேரத்தில முடிஞ்சிடும் நினைச்சா , அப்பறம் பழிவாங்கும் கொலை ,தேவையில்லாத பாடல் அப்படின்னு கடைசி 30 நிமிடம் அப்படியே படத்தோட வேகத்தை கீழே தள்ளிட்டாரு
நான் அப்போவே சொன்னேன்ல படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ் கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னா ? காட்சி அமைப்புகள்ல கொஞ்சம் ரமணா , கொஞ்சம் துப்பாக்கி , கொஞ்சம் கத்தி தெரியுது ,ஒருவேளை முருகதாஸ்க்கு அந்த படங்கள இவர் தான் சீன ஐடியா கொடுத்து இருப்பாரோ ? ஏன்னா இந்த படம் ஆரம்பிக்கபட்டது 2013, கத்தி 2014ல தான் ரிலீஸ் ஆச்சு,துப்பாக்கி படத்தில எப்படி விஜய் தன்னோட தங்கச்சியை அனுப்பி வில்லனை பிடிக்க ட்ரை பண்ணுவாரோ அதே மாதிரி காட்சி அமைப்பு இந்த படத்தில இருக்கு, குறிப்பா இந்த படத்திலும் ஒரு நாய் காட்சி இருக்கு , அது மாதிரி இன்னும் சில. அது எது எது காட்சிகள்ன்னு சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது போயிட்டு பார்த்து தெரிஞ்சிகோங்க,
அதர்வா ஒரு guaranteed ஹீரோவா மாறிட்டு வரார் போல இருக்கு , இவர் படம்ன்னா ஓரளவுக்கு நம்பி போகலாம்ங்கிற அளவுக்கு வளர்ந்து வறாரு,கொஞ்சம் வித்தியாசமான கதை , நல்ல நடிப்புன்னு பக்காவா இருக்காரு, body , look & feel எல்லாம் நல்லா இருக்கு, அங்க அங்க மாஸும் try பண்ணிருக்காரு ,
எல்லா commercial படங்களில் ஹீரோயின்க்கு என்ன வேலை ? சும்மா ஊறுகாய் தான் , அதே தான் இந்த படத்தலையும் .
இசை நம்ம drumsசிவமணி , பாடல் ரொம்ப சும்மார் , எல்லாம் வெறும் டப்பாங் கூத்து பாடலா இருக்கு , bgm நல்லா இருக்கு ஆனா சில இடங்கள் எங்கயோ கேட்டா மாதிரி ஒரு உணர்வு
மொத்தத்தில் : கூட்டி கழிச்சி பார்த்தா கணிதன் கணக்கு ஓரளவுக்கு ஓகே தான்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
சேதுபதி இந்த படத்தை பற்றி எழதுவது கொஞ்சம் லேட் தான் ..இருந்தாலும் பரவாயில்லை ..எழதுவது எழதுவோம்ல ...
அட நம்ம தமிழ் சினிமாவில பல போலீஸ் படங்கள் பார்த்து இருக்கோம் ..இது என்ன புதுசா பண்ணிட போறாங்க அப்படின்னு நினைச்சு தான் போயிட்டு பார்த்தேன்,அதுவும் நம்ம விஜய்சேதுபதிக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை ? அப்படின்னு கூட நினைச்சேன், ஆனா அது எல்லாம் பொய் ஆக்கிடுச்சு இந்த படம்,
விஜய் சேதுபதிக்கு இது முதல் மாஸ் படம், பக்காவா செட் ஆகி இருக்கு,, மாஸ்ன்னு பேருல சும்மான்ன பஞ்ச் வசனம் , ஹேய் ஓய் ன்னு கத்தாம்மா அதே நேரத்துல மாஸ் அளவா கொடுத்து இருக்காரு, குறிப்பா canteen ல inspector விசாரிப்பது, வில்லனை arrest பண்ணறது , தன்னோட பையனை வச்சி அடி ஆட்களை மிரட்டுவது செம்ம , நடிப்பிலும் ultimate & கெத்து காட்டிருக்காரு , படம் fullah விஜய் சேதுபதி தாங்கி புடிச்சி இருக்காரு ,
கதைன்னு பார்த்தா நம்ம தமிழ் சினிமாவுக்கு இது புதுசு இல்ல , வழக்கமான போலீஸ் கதை, வில்லனும் ஹீரோவும் மாற்றி மாற்றி கண்ணாமூச்சி ஆடும் ஆட்டம் தான், ஆனா அதை எந்த அளவுக்கு சுவாரசியமா கொடுக்குறாங்க தான் விஷயம் , அதை இந்த படம் பூர்த்தி பண்ணி இருக்கு , போர் அடிக்காத screenplay, சீரியஸ் ஆனா காட்சியிலும் நல்ல காமெடி கலந்து இருக்காங்க, அது மாதிரி படத்தில் நிறைய காட்சிகள் இருக்கு , குறிப்பா விஜய்சேதுபதி வில்லன் அடி ஆளு பார்த்து டேய் கோவமா பார்க்காதடா சிரிப்பு சிரிப்பா வருதுன்னு அவர் சொல்லும் போது அதை பார்க்கும் போது நமக்கும் சிரிப்பு வருது,அதே மாதிரி சேசிங் சீன்ல , மற்ற போலீஸ்காரர்களை அவர் காலாய்க்கும் போதும் சரி படத்துக்கு தேவையான காமெடிகளை படத்தோட ஒன்றி போவது ரசிக்கிறா மாதிரி இருக்கு.
ரம்யா நம்பீசன் அழகா ரெண்டு பசங்களுக்கு அம்மாவா,சேதுபதிக்கு மனைவியா skypeல லவ் பண்ணறதும் அளவா அருமையா இருக்கு,அந்த ரெண்டு பசங்களும் நல்லா cuteah செலக்ட் பண்ணிருக்காரு ..
விசாரணை கமிஷன்ல ஒருத்தர் குள்ளமா வருபவர் யார்ன்னு தெரியல,ஹேய் யாருப்பா அந்த ஆளு ? அப்படின்னு கேட்கிறா மாதிரி இருக்காரு அவர், அவர் பேசுவது body language எல்லாம் வித்தியாசமா இருக்கு.
எல்லா வகை ரசிகர்களுக்கும் ரெண்டு மணி திருப்தி படுத்துறா மாதிரி ஒரு படம் தந்துஇருகாரு விஜய் சேதுபதி
மொத்தத்தில் : மாஸ் + காமெடி + entertainer = சேதுபதி
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இன்னைக்கு எப்பொழுதும் போல படத்தை பற்றி எழுதாம ..ஒரு கற்பனை பேட்டி எடுக்கலாமே தோனுச்சு ... freeயா இருந்தா வாங்களேன் பேய் மாதிரி வந்த மிருதன் கிட்ட எடுத்த இந்த பேட்டியை படிங்களேன் ...
சினி கிறுக்கன் : உங்க பேரு ?
மிருதன் : நான் தான் மிருதன்
சினி கிறுக்கன்: அப்படினா !. !. ??
மிருதன்: மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான்
சினி கிறுக்கன்: அட நீ நம்ம ஆளவந்தான்..
மிருதன்: யோவ் அவர் கடவுள் பாதி ..மிருகம் பாதி கலந்து செய்த கலவை ...நான் மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை
சினி கிறுக்கன் : டேய் எந்த ஊருடா நீங்க ?எங்க இருந்து டா வந்திங்க ? தடார் தடார்ன்னு வரிங்க , படார் படார்ன்னு கடிக்கிரிங்க
மிருதன் : எங்க native place ஹாலிவுட் ,, கொஞ்சம் வேற நாட்டுல எல்லாம் இருந்தோம் .. ஆனா இப்போ தான் இந்தியாவுக்கு வந்து இருக்கோம் ..இப்போ election வேற அதான் தமிழ் நாட்டுக்கு வந்துட்டோம்
சினி கிறுக்கன் : ஏன்டா உங்கள control பண்ண ஆளு இல்லையா ?
மிருதன் : ஏன் இல்ல ஹீரோ ஜெயம் ரவி இருக்காரு, .. போன வருஷம் தனி ஒருவன் ஆகா இருந்து பூலோகத்தை காப்பாற்றியதுக்கு அப்புறம், எங்களை எல்லாம் சாவடிச்சி லக்ஷ்மி மேனன் கிட்டேயும் , உங்ககிட்டேயும் நல்ல பேரு வாங்க try பண்ணி இருக்காரு
சினி கிறுக்கன் : எப்பா டேய் ஆமா டா...ஒரே ஆளு gun வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி சுட்டுகிட்டே போறாரு ..ஊட்டில இருந்து கோயம்புத்தூர் வந்த அப்புறம் ஊருக்குள்ள வேற போலீசே இல்லையா ?.. தனி ஒருவன் படம் நடிச்சாலும் நடிச்சாரு அவர் மட்டுமே தனி ஒரு ஆளா சண்டை போடுறாரு
இதுல எனக்கு ஒரு doubt ....
மிருதன் : என்ன ??
சினி கிறுக்கன்: ஹீரோவை கடிச்சீங்க , சுத்தி இருக்கிருவங்க அப்படி, இப்படின்னு எல்லோரையும் கடிக்கிரிங்க , ஆனா கிளைமாக்ஸ்ல ஹீரோ யினை ஹீரோ காப்பாற்ற வரும் போது கூட ஹீரோயினைமட்டும் கடிக்க try பண்ணல ??அப்புறம் அந்த hospitalக்கும் மால்லுக்கும் நடுவே .. நீங்க ஏன் சும்மா கையை மேலே தூக்கிகிட்டு டான்ஸ் ஆடுறா மாதிரியே பண்ணிங்க ?
மிருதன் : யோவ் அதை டைரக்டர் கிட்ட கேளுயா ..நாங்க எல்லாம் stunt artist & junor artist தான்ங்க .. அவர் சொல்லுறது தான் நாங்க கேட்க முடியும்
சினி கிறுக்கன்: இன்னொரு doubt
மிருதன் : என்ன doubt ?
சினி கிறுக்கன்:உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க
மிருதன் : சரி அதுக்கு என்ன ?
சினி கிறுக்கன்: அது இல்ல ...உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க அதனால fire engine வண்டி கொண்டு வந்து ..pipe மூலமா தண்ணி அடிச்சி ஒருத்தர் ஒருத்தரா hospitalகுள்ளசேர்த்து அப்புறம் தண்ணி காலி ஆகி ஹீரோயினை கஷ்ட்டப்பட்டு காப்பாத்தினதுக்கு பதிலா .. அந்த வண்டில ஒரே stretchல எல்லாரையும் உட்க்கார வச்சி அந்த தண்ணிய அடிச்சி காப்பற்றி இருக்கலாமே .. அதுவும் இல்லன ஹீரோ போலீஸ் தானே போலீஸ்ல வஜ்ரான்னு ஒரு வண்டி இருக்கு .. அதை வரவச்சி தண்ணி அடிச்சி இருக்கலாமே .... அதுவும் இல்லன மால் பில்டிங் உள்ள water sprayer இருக்கே அதை உடைச்சி இருக்கலாமே .
மிருதன் : யோவ். அப்படி எல்லாம் பண்ணிட்டா ஹீரோவுக்கு வேளை இல்லாம போய்டும். படம் சீக்கிரம் முடிஞ்சிடும் .. ஏற்கனவே படம் வெறும் 108 நிமஷம் தான் ...போயா நீ ரொம்ப கேள்வி கேட்கிற
சினி கிறுக்கன்: இன்னொரு கேள்வி கேக்கணும்
மிருதன் : என்ன ???? ...150 ரூபா கொடுத்து படம் பார்த்துட்டு 150 கேள்வி கேட்பியா .. நீ ??.. ரொம்ப கேள்வி கேட்ட உன்னையும் கடிச்சிடுவேன்
சினி கிறுக்கன்: sorry பாஸ் ...தல கூட கார்ல தான் 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணுவாரு ஆனா ஜெயம் ரவி tempo traveller ல எப்படியா 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணாரு ?
மிருதன்: படிக்கிற audience எல்லாரும் நல்லா கை தட்டி விசில் அடிங்கபா .. ஏன்னா இப்போ வர படத்தில பல director நம்ம தல அஜித் ஸ்க்ரீன் ல காண்பிச்சா கை தட்டி ரசிப்பாங்கன்னு, அந்த மாதிரி சீன் வைக்கிறாங்க ..அதே மாதிரி இந்த சினி கிறுக்கனும் try பண்ணுறான் அஜித் பெயரை சொல்லி .. ... யோவ் படத்தில இருக்கும் நல்ல points சொல்லுயா
சினி கிறுக்கன்: சரி சொல்லுறேன் ..ஸ்ரீமான் , ஜெயம் ரவி friend வரும் காளி , மற்றும் லக்ஷ்மி மேனன் அப்பா .இவங்க எல்லாம் பண்ணிருக்கும் காமெடி நல்லா இருக்கு.படம் fastah போகுது ..
மிருதன்: யோவ் படம் நல்லா இருக்கா ? நல்லா இல்லையா அதை சொல்லு
சினி கிறுக்கன்: தமிழ் நாட்டுல புதுசா எதாவுது வந்தா நிச்சயமா ஆதரிப்பாங்க ..அதனால உன்னையும் ஆதரிப்பாங்க .. நீ எப்படி இருக்க வந்து பார்ப்பாங்க .
சினி கிறுக்கன் & மிருதன் : நன்றி வணக்கம்
உங்களுக்கு இந்த கற்பனை பேட்டி பிடித்து இருந்தால் ஷேர் செய்யவும் ..மேலும் கீழே கமெண்ட் பண்ணவும் பிடிக்காவிட்டாலும் சரி ..கீழே கமெண்ட் பண்ணவும் ..
இது freedom 251 மாதிரி இல்லங்க காசா பணமா ?..free தான் நல்லதோ கேட்டதோ கமெண்ட் பண்ணுங்க ..திருத்திக்கிறேன்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
ஜில் ஜங் ஜக் இது ரொம்ப பிரபலமான வடிவேலு வசனம், அட அப்போ அது பொண்ணுங்க லவ் அப்படி இப்படி இருக்கும் நினைச்சா அது இல்ல, ஏன்னா இந்த படத்தில ஹீரோயின் இல்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க.
படம் ஆரம்பிச்ச உடனே எப்போ சித்தார்த் , RJ,பாலாஜி காட்டும் போது மக்கள் ஆ ஓ ன்னு பெரிய நடிகர்கள் படம் மாதிரி கத்துனாங்க, பார்க்கவே ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சி, ஒரு வேளை சென்னை வெள்ளத்திற்கு எல்லாம் உதவினாங்க, அதனால அப்படி ஒரு வரவேற்பு கொடுத்தாங்களோ ?சரி அது எப்படியோ சினிகிறுக்கன் சார்பில் அவர்களுக்கு மனதார வாழ்த்துகள்.
சரி படத்தை பற்றி பார்ப்போம்
படத்தில் ரொம்ப பிடித்த விஷயம் என்னன்னா ? நிச்சியமா இந்த படம் மற்ற படங்களில்ருந்து வித்தியாசமா இருக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டு எடுத்து இருக்காங்க..கதை நடக்கிற களம் , கதாபாத்திரங்கள், அவர்களோட body language ,இசை படம் fullah Bgm ரொம்ப புதுசா வித்தியாசமா இருக்கு.ஆனா lightah அங்க அங்க cow boy படம் மாதிரி ஒரு feel வருது , இந்த மாதிரி ஒரு புதிய attempt பண்ண டைரக்டர், அதற்க்கு உதவிய தயாரிப்பாளர் இதற்காக இந்த படத்தை ஜில்லுன்னு சொல்லலாம் .
அப்போ ஜங்ன்னு சொல்லுற விஷயம் என்ன?
,, சித்தார்த் காமெடி ,கூடவே நடிச்ச ரெண்டு பேரோட expression , ராதாரவியோட வித்தியாசமான நடிப்பு, இயக்குனர் படத்தை கொஞ்சமாவது ஜில்லுன்னு பண்ணனும்ன்னு முடிவு பண்ணி, படத்தில ரெட்டை அர்த்த வசனங்கள், பல நேரடி வசனங்கள், அதிலும் ஒரு பெட்ரோல் வச்சி இருக்கும் இடத்தை வெடிக்க வச்சி, ஒரு தன் கிட்ட போதை பொருள் எடுக்கற வரைக்கும் பண்ணற காட்சிகள் மட்டும் தான் நல்ல சிரிப்பு வருது அதுவும் அந்த இடத்தில நிறைய adults only நகைச்சுவை, தான் மற்றபடி படத்தில் ரொம்ப ரசிக்கிறா மாதிரி நகைச்சுவை இல்ல, அதனால படம் கொஞ்சம் ஜங்ன்னு தான் இருக்குது
படத்தில் நிறைய இடங்களில சொல்லுற terminology கொஞ்சம் மனசல பதியல,கிளை கதைகள்ன்னு நிறைய வச்சி இருக்காங்க, ஆனா மொத்த படத்தில கதைன்னு பார்த்தா ஒரு strong கதை இல்லை, படம் பார்த்தா நடக்கிற இடம், பேசுற விதம் எல்லாம் பழய காலத்து கதை போல ஒரு உணர்வு ஆனா படம் ஏன் 2020 நடப்பது மாதிரி எடுத்தாங்க தெரியல,இது எல்லாம் இந்த படத்தோட ஜக்ன்னு சொல்லலாம்
மொத்தத்தில் படம் புதுமையா try பண்ணதுக்கு ஜில்லுன்னு சொல்லலாம் , கதை, மற்றும் ரொம்ப வள வள சொன்னதுக்கு ஜக்குன்னு சொல்லலாம்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
சத்தியமா சொல்லுறேன் இந்த படத்தை பற்றி நான் பேசுற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லைங்க ,இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்ததிற்கு , இயக்குனர் வெற்றிமறானுக்கும் , அதை உருவாக்க தயாரிப்பாளராக துணைபுரிந்த தனுஷ்க்கும், ஒரு பெரிய தலைவணங்கிய வாழ்த்துகள்,ஏன்னா இந்த மாதிரி ஒரு உண்மை கதையை எடுத்து வெளியிட ஒரு தைரியம் வேண்டும்,
ஒரு போலீஸ் விசாரணையில் என்ன எல்லாம் நடக்கும், எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருக்கும், காவல்துறைக்கு உள்ளே எந்த மாதிரி அரசியல், மற்றும் தனி நபர் பதவி முன்னேற்றம், தங்கள் சுயநலத்திற்காக எந்த அளவிற்க்கு எல்லாம் போவாங்க என்று காட்டி இருக்கும் படம் தான் இந்த விசாரணை,ஆனா அது சினிமா தனமா இல்லாமல், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் எல்லாம் எப்படி இருக்கும் அங்க எப்படி நடை முறையில் உள்ளதுன்னு உண்மையா கொடுத்து இருக்காரு,என்கௌண்டர்க்கு போகும் போது துப்பாக்கியை கையழுத்து போட்டு வாங்குவது எல்லாம் நல்லா காட்சி படுத்திருக்காங்க ,மற்ற படங்களில் எல்லாம் சும்மா பொம்மை துப்பாக்கி போல தான் ஒரு feel இருக்கும் ஆனா இதுல அப்படி இல்ல,உண்மையா சொல்லணும்ன்னா அந்த துப்பாக்கி வாங்கும் போது அதோட கனத்தை உணர முடிந்தது நமக்கு , அட அந்த அளவுக்கு weight ah இருக்குமான்னு தோனவச்சது அந்த அளவுக்கு காட்சி படுத்தி இருப்பாரு
நிச்சயமா இந்த படம் பார்க்கும் போது நாமே அங்க இருந்து அடி வாங்குற மாதிரி ஒரு உணர்வு, அட்டகத்தி தினேஷ் அந்த அளவுக்கு நடிச்சி பிண்ணி எடுத்துடாரு, அதுவும் அவர் நின்ற இடத்திலிருந்து அடிவாங்கும் காட்சியில் அவர் மூக்கில் இருந்து சளி வர அளவுக்கு காட்டுவது அவரின் நடிப்பின் உச்சம், அவர் அந்த காட்சியில் நடிச்சார இல்ல நிஜமாகவே அடி வாங்கினாரா தெரியல , அவர் குக்கூ படத்திற்கு அவார்ட் நிறைய வாங்குவாருன்னு அவர் எதிர் பார்த்து இருப்பார் ஆனா அவர்க்கு அது கிடைக்கவில்லை,நிச்சயமா அது ஏமாற்றமா இருந்து இருக்கும், ஆனா நிச்சயமா இது அவர்க்கு வங்கி தரனும்
அவர் மட்டுமா ? அவர் கூட நடிச்ச மற்ற மூன்று பேரும் செம்ம, இறுதி காட்சியில் அப்சர் கதாபாத்திரத்தில் வருபவர் கை உதறிகிட்டே பக்கெட் எடுத்து போகுற காட்சி சூப்பர், பார்க்கிற நம்மகே ஐயோ இவங்களுக்கு என்ன ஆக போகுதுன்னு அளவுக்கு பார்பவர்களை படத்தோட ஒன்ற வச்சிட்டாரு இயக்குனர்.
கிஷோர் கொஞ்ச நேரம் வந்தாலும், சமூதிரகனியொட பேசுகிற வசனம், தெனாவட்டு எல்லாம் சூப்பர், சமூதிரகனி நிறைய படத்தில போலீஸ்காரரா வராரு, இதுல பக்காவா செட் ஆகிட்டாரு, அவர் கோவமா இருக்கும் போதும் சரி, கடைசியா தப்பு பண்ணுகிறோமோ உணரும் போதும் சரி கலக்கிட்டாரு
முதல் பாதி சில காட்சிகள் , ஹோட்டல்க்கு அனுப்பி சாப்பிட வைப்பது , மற்றும் நீதிமன்றத்தில் என்ன நடக்க போகுதுன்னு நாம்ம யூகிக்கிற அளவுக்கு இருந்தாலும் , கை தட்டி ரசிக்க வைச்சிருக்காரு வெற்றிமாறன், அதுவும் அந்த ஆந்திர போலீஸ் நீதிபதிகிட்ட மொக்க வாங்குற காட்சி, கைதட்டு தியேட்டர் கிழிது,
படம் ஆரம்பிக்கும் போதே அந்த விடியகாலை பொழுது, ஆந்திரா ஸ்டேஷன் உள்ள, கிளைமக்ஸ் இருட்டான பகுதி, அப்படின்னு எல்லாம், ரொம்ப ரியலா feel பண்ண வச்சி இருக்காரு கேமராமேன், கிஷோரை தொங்க விட்டு அடிக்கும் போது ஒரு கொசு வந்து உட்காரும் ஒரு ஷாட் செம்ம , அது நிஜமாகவே ஒரு கொசு வந்ததை எடுத்தாங்களா ? இல்ல எதாவுது சிஜி வேலையான்னு தெரியல, அந்த அளவுக்கு ரொம்ப தத்துருபமா எடுத்து இருக்காங்க
இந்த படம் இன்டர்நேஷனல் அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கு அதனால நான் ரொம்ப நல்லா இருக்கு சொல்லுறேன் நினைக்காதிங்க, உண்மையில் படம் பார்த்து முடிச்ச பிறகு அதன் தாக்கம் நிறைய இருந்தது அதற்க்கு காரணம் அந்த கதையின் எழுத்தாளர் படம் முடிஞ்ச பிறகு வெனிஸ் திரைப்பட விழாவில் பேசியதை போட்டு இருக்காங்க , மேலும் அவர் தான்!! ...யார் அவர்?? படம் பார்த்து தெரிஞ்சிகோங்க
மொத்தத்தில் இந்த படம் முடிந்து வந்த பிறகும் நமக்கு நாமே ஒரு விசாரணை செய்யும் அளவிற்கு ஒரு உணர்வு கொண்டு வந்த படம்
படம் trailer பார்த்து ரொம்ப வன்முறையா இருக்குமோன்னு நினைச்சி போய் பார்க்காம இருக்காதிங்க , நிச்சயமா போயிட்டு பார்க்க வேண்டிய படம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்