ஏம்பா இன்னிக்கு review பண்ணலாமா ? வேண்டாமா ? என்னமோ படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் கழிச்சி தான் review பண்ணனும்ன்னு சொல்லுறாங்க ,ஏண்டா மூணு நாள் கழிச்சி பண்ணுறதுக்கு இது என்ன சடங்கா ? துருவங்கள் 16 படம் எல்லாம் முதல் நாள் சத்யம் தியேட்டர்ல வெறும் 1 காட்சி தான் இருந்துச்சி , reviewக்கு அப்புறம் அடுத்த வாரமே 9 காட்சி போட்டாங்க , பல சின்ன படங்கள் ஹிட் ஆனதுக்கு காரணமே இந்த மாதிரி reviews தான் , first copy அடிக்கமா நல்ல படம் எடுங்க . யார் என்ன சொன்னா நமக்கு என்ன? நாம் பண்ணறது பண்ணுவோம் .
ராஜ்கிரண் தாத்தாவாக , பையன் கவனிக்காத அப்பாவாக வரும் போது அட இது மஞ்சப்பை போல இருக்குமோ என்று படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரத்தில் கொஞ்சம் பயந்துட்டேன்,, அட அப்பாவை கவனிக்காத பையன் அதனால படம் full ah செண்டிமெண்ட் போட்டு , message சொல்லி மொக்கயா போய்டுமோ தோணுச்சி , நல்ல வேளை அப்படி போகம , அப்புறம் போக போக இது வேற மாதிரி இருந்திச்சி , இறுதியில் முடியும் போது மனசு ரொம்ப இளகி போயிடுச்சி , அப்படி ஒரு அருமையான மாறுபட்ட காதல் கதை ,வெளிப்படையா சொல்லனும்னா முதல் பாதி கொஞ்சம் டிராமா மாதிரி போச்சி , பிறகு இரண்டாவது பாதியில் கதை ஹைதராபாத்துக்கு போன பிறகு , அட போங்கடா என்ன யூத் பசங்க லவ், இது தான்டா லவ் சொல்லுகிறா மாதிரி சீன வச்சி ரசிக்க வச்சிட்டாரு டைரக்டர் தனுஷ், அதுக்கு ரொம்ப ஒருதுணையாக ராஜ்கிரணும் ரேவதியும் நடிச்சாங்க , கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு , இந்த வயசுல ராஜ்கிரணும் ரேவதியும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்தது சூப்பர் , எனக்கு கொஞ்சம் ஹிந்தி படம் சீனிகம் படத்தோட ஒரு பகுதி சாயலோ தோணுச்சு வயசான காலத்தில் வரும் ஒரு காதல் ஆனால் இது பழைய காதலை புதுப்பிக்கும் ஒரு கதை
இந்த படத்தில ஒருவரை மட்டும் பற்றியே சொல்லனும்னா அது ராஜ்கிரண் மட்டும் தான் , படம் முழுக்க நிறைவா நடிச்சி மனசுல நிறைவா நின்னுட்டார் ,முதல் பாதியில் நடிச்சது எல்லாம் அவர் இது வரைக்கும் பண்ண காட்சிகள் தான் நடிப்பு தான், அப்பாவாக , வீட்டில் வரும் பிரச்சனைகள் , வீட்டில் புரிஞ்சிக்காத நிலமையில் நடிப்பது எல்லாம் அவர் usual ஆகா பண்ணுவது தான் , ஆனா அவர் அந்த bulletல் எடுத்து கிளம்பின அப்புறம் நமக்கு அச்சம் என்பது மடமையடா சிம்பு தான் ஞாபகம் வருது , ராஜ்கிரண் பண்ணும் குறும்புத்தனம் , ரேவதியை பார்ப்பது , FBல் சாட் பண்ணுவது , வீட்டுக்கு நைட் போயிட்டு பேசுவது எல்லாம் செம்ம , முதல் பாதியில் பிரசன்னாவிடம் பேசாம ஒரு புரிதலுடன் உணர்வோடு இருப்பதும் , இரண்டாவது பாதியில் காதல் cute பண்ணுவது எல்லாம் செம்ம .
பிரசன்னா & சாயாசிங் தேவையான அளவுக்கு சரியா நடிச்சி இருக்காங்க , அந்த பக்கத்துக்கு வீட்டு பையன் ராஜ்கிரணோட friendly பேசுவது , கலாய்ப்பது நல்லா இருக்கு , DD ரொம்ப கம்மியான காட்சிகள் வந்து அம்மாவை புரிஞ்சி பேசும் வசனங்கள் சூப்பர் ,மேலும் விஜய் டிவி ஆளுங்க படத்தில் நிறைய பேரு வந்து இருக்காங்க DD , ரோபோ ஷங்கர் , கலக்கப்போவது தீனா , ஜோடில வரும் ரின்சன் அந்த பக்கத்துக்கு வீட்டு பையனாக வரார் , ஒரு வேளை விஜய் டிவில இந்த படம் வரும் போல .
seyan ரோல்டன் சூரக்காற்று பாட்டு மற்றும் ராஜ்கிரண் மாஸ் சண்டை காட்சியில் bgm எல்லாம் நல்லா பண்ணி இருக்கார் .
தனுஷ் நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் எல்லாம் செய்து இப்போ டைரக்டர் அவதாரம் நல்லாவே எடுத்து இருக்கார் , ஆனால் எனக்கு என்னமோ கௌதம் மேனன் இவர் கூட directionல் ஒர்க் பண்ணி இருப்பர் போல தோணுது , ஏன்னா ரேவதி ராஜ்கிரண் காதல் காட்சிகள் அவரோட தாக்கம் எனக்கு தெரிஞ்சிது. எனை நோக்கி பாயும் தோட்ட படம் ஷூட்டிங்ல தனுஷ் அவர்கிட்ட ஒரு வரி கதை சொல்லி இருப்பர் போல , அவரும் அதுக்கு help பண்ணி இருப்பாரோ ? இல்லாட்டி கௌதம் மேனன் ஒரு காட்சியில் guest ரோல் வந்ததால அப்படி எனக்கு தோணுச்சோ? தனுஷுக்கு முதல் படம் என்பதால் சில தவறுகள் வந்து இருக்கு போல, அது நம்ம கண்ணுலபட்டது , பிளாஷ் பேக்ல் வரும் மடோனா கிராமத்து கேரக்டர்க்கு செட் ஆகல கொஞ்சம் செயற்கையாக இருந்துச்சி , ஹைதராபாத்தில் இருக்கும் மால் சொல்லுராங்க , ஆனால் ஷூட் பண்ண இடம் நாவலூர் OMR food street , அட அது செட்டிங் போட்டு கொஞ்சம் மறைச்சிடீங்க ஆனால் மண்டை மேல இருக்க கொண்டை மறந்தா போல , பின்னாடி frameல் Olympia opaline building தெரிஞ்சுடுச்சி , அதை கவனிச்சி இருக்கலாமே , மழை காட்சியில் கொஞ்சம் தள்ளி தரையை பார்த்தா ரொம்ப காஞ்சி இருக்கே அதை மிஸ் பண்ணிடீங்களே , ஹைதராபாத்தில் roof top restaurant காட்டும் போது மீண்டும் மண்டை மேல இருக்க கொண்டை மறந்தா போல பின்னாடி ஸ்பென்சர் building போல தெரிஞ்சிடுச்சே, இப்படி சின்ன சின்ன தவறு இருந்தாலும் எல்லா தரப்பு மக்களுக்கு பிடிக்கிறா மாதிரி ஒரு படம் பண்ணி இருக்கார் அதுக்கு ஒரு சல்யூட் .
நடிகர்கள் : ராஜ்கிரண் , ரேவதி , தனுஷ் , மடோனா பிரசன்ன , சாயாசிங்
கேமரா : வேல்ராஜ்
இசை: சியேன் ரோல்டன்
எழுத்து & இயக்கம் : தனுஷ்
மொத்தத்தில் பவர் பாண்டி பவர் full ரொமான்டிக் பாண்டி
இப்படிக்கு
சினி கிறுக்கன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments