ஹலோ பிரபா வைன் ஷாப் ஓனரா? எப்போ சார் கடையை திறப்பீய்ங்கன்னு கேட்கிறாமாதிரி , கவண் review எப்போ போடுவீங்க? கவண் பார்க்கலையான்னு சில நண்பர்கள் நேத்துல இருந்து கேட்டுட்டாங்க ,எப்பா நண்பர்களே இந்தாங்க review போடுறேன் படிச்சிகோங்க
கடந்த டிசம்பர் மாசத்துல இருந்து ஏன் போன வருஷ தேர்தல் நேரத்தில இருந்தே இந்த டிவி காரங்க பண்ணுற அட்டகாசம் கொஞ்ச நெஞ்சம் இல்ல , அவங்க என்னவெல்லாம் தகுடுதனம் பண்ணுவாங்கன்னு தோலுரித்து காட்டினது தான் இந்த கவண் ,இந்த மீடியாவின் உண்மை முகத்தை காட்டி வந்த சில படங்களில் போலோகம் ஒரு விளையாட்டை வச்சி எப்படி இந்த மீடியா விளையாடுதுன்னு காட்டியது , ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க மீடியாவின் முழு முகத்தையும் காட்டி இருக்கு .
படத்தின் பிடிச்ச விஷயங்கள் , எப்படி இந்த டிவி சேனல் இயங்குதுன்னு , அதன் technical விஷயங்கள் மக்களுக்கு புரிகிறா மாதிரி முதல் காட்சியிலே காட்டியிருப்பது நாமும் அந்த சேனல்க்கு போனா மாதிரி ஒரு உணர்வு , மேலும் அதுக்கு அப்புறம் இந்த ரியாலிட்டி ஷோக்களில் அவங்க பண்ணும் அட்டகாசம் , ஒரு அரசியல்வாதி பற்றி எப்படி எல்லாம் காசுக்காக நல்லவனாகவும் , கெட்டவனாகவும் காட்டி இருப்பது செம்ம ,பிறகு நாம் நினைக்கும் பல விஷயங்கள் படத்தில் கேள்விகளாக வெளிப்படுவது நம்மை கைதட்ட வைக்குது . குறிப்பாக மார்க்கெட்டிங் விஷயங்கள் , ஒரு சில காட்சிகள் வைத்து அதை அவர்களுக்கு ஏற்ப மாற்றுவதுன்னு , இது எல்லாம் பார்க்கும் போது அடப்பாவிங்களா இப்படியெல்லாம் நடக்குதான்னு கேட்க தோணுது ,படத்தின் கதை டிவில் நடக்கும் அவலங்கள் அவ்ளோதான்
இரண்டாவது பாதி கடைசி காட்சிகள் இப்படி தான் வரும்ன்னு நம்மால் யூகிக்க முடிவதால் அது பெரிய impact மனசுல வரல , ஆனால் அது bore அடிக்கல .முக்கியமா இண்டெர்வெல் பிளாக் அல்டிமேட் சூப்பர் , எப்படியோ எதிர்பார்த்து எப்படியோ இன்டெர்வல் வச்சிட்டாரு , அதை படம் பார்த்து தெரிஞ்சிகோங்க.
கே.வி .ஆனந்த்க்கு ஒரு முத்திரை இருக்கு , அது இதுலயும் காட்டி இருக்கார் , முக்கியமா கதை , அவரோட கதை கொஞ்சம் சமூதாய பார்வையோடு இருக்கும் , அதே நேரத்தில் மசாலா தேவையான அளவுக்கு கலந்து கொடுப்பார் , அப்புறம் அவரோட படத்தின் நடிகர்கள் , ஜெகன் , விஜய் சேதுபதியின் அம்மாவாக, அப்பாவாகவும் வருபவர்கள் , ரியாலிட்டி ஷோவில் வரும் இரண்டு ஜட்ஜ், அதில் ஒருவர் அயன் படத்தில் நகை கடை ஓனராக வருபவர் , இதில் போலீஸாக வருபவர் , முக்கியமா வில்லன் அயன் படத்தில் நடித்தவர் , போஸ் வெங்கட் இப்படின்னு அவரோட கோ , அயன் படத்தில் நடிச்சவரகள் நிறையபேர் இதில் இருக்காங்க, மேலும் சில காட்சிகள் ரெஸ்ட்ரூம் காட்சி , கிட்டதிட்ட கோ படத்தின் காட்சி ஞாபகம் படுத்தியது , ஒரு வேளை அவருக்கு ரெஸ்ட்ரூம் காட்சி வெற்றி சென்டிமென்ட்டோ ? அதே போல கிளைமாக்ஸ் காட்சி ஒரு சஸ்பென்ஸ் வச்சி அப்புறம் பிளாஷ் பேக் காட்டுவது அவரோட ஸ்டைல் . அப்புறம் ஒரு சண்டை காட்சியில் நிச்சயமா வேகமா பறந்து அப்படியே கொஞ்சம் slow பண்ணி அதை freeze பண்ணி அதுக்கு ஒரு different soft bgm போடும் காட்சி நிச்சயமா இருக்கும், இதுலயும் இருக்கு அது.
விஜய்சேதுபதி மனுஷன் எந்த கேரக்டர் பண்ணாலும் பின்னுகிறார் , அந்த ஹோட்டல் காட்சி , interview காட்சி , opening காதல் காட்சி பக்காவாக பண்ணி இருக்கார் , அவருக்கு ஒரு குறைன்னு சொன்னா அது அவரோட ஹேர் ஸ்டைல் தான் , அவருக்கு இந்தபடத்தில் செட் ஆகல ,அட முக்கியமான நம்ம டி, ஆர் அவரை பற்றி சொல்லனும்னா அவரோட வழக்கமான வசனங்கள் படத்தில தேவையான அளவுக்கு யூஸ் பண்ணி இருக்கார் , அவரோடைய வழக்கமான பன்ச் வசனங்களுக்கு மக்கள் கை தட்டுறாங்க .
மெடோனா செபாஸ்டின் , விக்ராந்த் ,கிருஷ்ணா , பாண்டியராஜன் , இவங்க எல்லாம் அளவா பயன்படுத்தி இருக்காங்க , அதை அவங்களும் நல்லா பண்ணி இருக்காங்க .
ஹிப் ஹாப் தமிழா பாடல் ஹிப் ஆகவும் இல்ல ,பெப் ஆகவும் இல்ல , பாப்புலர் ஆகவும் இல்லை.
ஒரு ஒரு கட்சிகளும் நடத்தும் ஒரு ஒரு டிவி சேனலுக்கு இந்த படம் ஒரு செருப்படி , ஆனா இந்த படத்தை வாங்கியது எந்த கட்சி டிவியோ ?
மொத்தத்தில் கவண் மீடியாவை கவ்வியவன் , மக்கள் மனதை கவர்ந்தவன் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்

Some spelling mistake da
பதிலளிநீக்குUnga review kku nalla build up tareenga boss....first para!!!!! -- KP.
பதிலளிநீக்குSooper Mama... Girish
பதிலளிநீக்கு