வெள்ளி, 7 ஏப்ரல், 2017

Kaatru Veliyidai - காற்று வெளியிடை

காற்று வெளியிடை கண்ணம்மா 
இந்த படத்தை பற்றி என்ன சொல்லுவதம்மா ? 
கொஞ்சம் குழப்பம்மா இருக்குதும்மா , அது யாரால் வந்த காரணம்மா தெரியலம்மா ,

அழகான இடங்களம்மா , கண்களுக்கு குளிர்ச்சியம்மா அதை காட்டியவன் காணொளி மாயவன் , இவன் கைகளால் தூரிகைகள் கொண்டு வரைந்தவன் அல்ல , கண்களை துரிகையாய் கொண்டு வரைந்த ரவி வர்மனம்மா(கேமராமேன்) 

வழக்கமான  மணியின் மணி மணியான காட்சிகளம்மா , அதற்கு  இதயத்துடிப்பு சேர்த்தவன் ரகுமானம்மா  , ஒரு ஒரு காட்சிக்கும் காதல் கரைபுரண்டு ஓடினாலும் அதில் நனைவதற்கு  மனசில்லையம்மா , காரணம் ஏனோ ?

அட படத்தில கார்த்தி இப்படி தான் பாரதியார் கவிதைகள் எல்லாம்  சொல்லுவார் , அதுபோலவே  நாமளும் நம்ம விமர்சனம் பண்ணலாம் பார்த்தேன் ,அடபோங்கப்பா இதுக்குமேல நம்மால இப்படி தான் எழுத முடியும்.

மணிரத்தினம் காதல் படங்களில் காதலுக்கு தனியா ஒரு வில்லனோ , வேற ஏதோ இருக்காது , காதலர்களே அவர்களுக்கு அவர்களே பிரச்சனையாக இருப்பாங்க , மௌனராகம் , அலைபாயுதே , ஓகே கண்மணி படத்தில் எல்லாம் இப்படி தான் இருக்கும் , இதிலும் இப்படி தான் இருக்கு , ஆனால் அந்த படங்களில் செய்த அந்த ஒரு மேஜிக் இதில் மிஸ்ஸிங் ,அந்த படங்கள் பார்க்கும் போது நாமும் அந்த காதலுக்குள் ஒரு அங்கமா இருப்போம் , அது இந்த படத்தில் மிஸ்ஸிங் , ரொம்ப அந்நியமா தெரிகிறது இந்த காதல் , காரணம் ஹீரோயினா ? ஹீரோவா ?
அதுமட்டுமல்ல படத்தில் கார்த்தி மற்றும் அதிதியின் அப்பா அம்மாவாக வருபவர்கள் ரொம்ப அந்நியமா இருக்காங்க , தமிழர்கள் தானே ஏன் தமிழ் முகங்கள் போடலை ? சாரட்டு வண்டியில பாட்டு காட்சியமைப்பு பார்த்தா ரொம்ப அந்நியமா வடநாட்டு காட்சியாக வச்சியிருக்கார் , சமீபத்தில் மணிரத்தினத்தின் பேட்டியில் நிருபர்,  ஏன் ராவணன் படத்தில் கல்யாணம் காட்சிகள் எல்லாம் ரொம்ப அந்நியமாக இருந்ததுன்னு கேட்டார் , அதுக்கு மணிரத்தினம் அந்த படம் ஹிந்தி , தமிழ் ரெண்டிலும் எடுத்தது ,ஒன்னு ஒண்ணுத்துக்கும் தனி தனியா செட் போட முடியாது , பட்ஜெட் பார்க்கணும் அதான் , அது எல்லாம் தவறு தான் அவரே சொன்னாரு , ஆனா இந்த படம் வெறும் தமிழ், தெலுங்கில் மட்டும் தான் வருது , மேலும் என்னதான் அந்த கல்யாணம் டெல்லியில் நடந்தாலும் ,  அந்த பாட்டுக்கு முன்னாடி , கார்த்தி சொல்லுவார் இவங்க தான் எங்க அம்மா பாரதியும் , மீன் குழம்பும் சேர்த்து கொடுத்தாங்கன்னு சொல்லுவார் , அப்படி  சொல்லிட்டு அந்த வீடு , பாட்டு அங்க இருக்கும் ஆட்கள் எல்லாம் தமிழாக தெரியல.

கார்த்திக்கும் , அதிதிக்கும்  காதல் , மோதல் , அவளின் விட்டுக்கொடுத்தல் , கார்த்தியின் மூர்க்கத்தனம் இரண்டுபேருக்கும் உள்ள  இருக்கும் நெருக்கம் இருந்தாலும் , அந்த காதலுக்கும் பார்வையாளருக்கு நெருக்கம் வரல அதுவே இந்த படத்தின் மிக பெரிய மைனஸ், நம்ம பாஷையில்  சொல்லணும்ன்னா கெமிஸ்ட்ரி செட் ஆகல போல .பேசாம வேற யாரையாவது போட்டு இருக்கலாமோ தோணுது .

அதிதி கார்த்தியயை தேடி பேஸ் கேம்ப்க்கு போவது , அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியை தேடி போவது ஞாபகம் படுத்தியது  .அதிதி ரொம்ப நல்லா நடிச்சியிருக்காங்க டப்பிங் உதடு அசைவுகள் எல்லாம் செம்மையா இருக்கு , ஆனா படத்தில் ஏதோ ஒரு மிஸ்ஸிங் feel , ஒரு வேளை ரகுமானின் பின்னணி இசை இன்னும் காதல் சேர்த்து இருக்கலாமோ  தோணுது .

படம் நிறுத்தி நிதானமா பொறுமையாக போகுது , இரண்டாவது பாதி ரொம்ப நிதானமா போகுது , பொதுவா அவரின் படங்கள் சிட்டி மக்களை திருப்தி படுத்தும் இல்லைன்னா ,அவரின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும் , இது இந்த இருவர்களையும் திருப்திபடுத்துவது கடினம் .

மொத்தத்தில் காற்று வெளியிடை காற்றோடு காற்றாக 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments