தனி ஒருவன் படத்திற்கு பிறகு அரவிந்தசாமி ஜெயம்ரவி காம்போ எதிர்பார்த்த படம் இந்த போகன் , ஆனா நான் அந்த எதிர்பார்ப்பு நினைச்சுகிட்டு போல , ஏன்னா அப்படி எதிர்பார்த்து போன பல படங்கள் மொக்கையாக்கி இருக்கு , அதுவும் ரோமியோ ஜூலியட் படம் எடுத்த டைரக்டர் , அதனால நான் எந்த ஒரு எதிர்பார்ப்போடு போகல , இருந்தாலும் இந்த படம் அதை ஏமாற்றவில்லை, ரொம்ப குழப்பவது போல இருக்கா ? சரி விடுங்க படத்தை பற்றி மேலும் படிங்க .
பழைய கதை + புதிய திரைக்கதை = தான் இந்த போகன் , அப்படி என்னடா அந்த பழைய கதை கேட்க்கிறீங்களா ? அதை சொல்லமாட்டேன் சொல்லிட்டா பார்க்கும் ஆர்வம் போயிடும் , ஆனால் பல விமர்சனங்களில் கதையை சொல்லி இருப்பாங்க , but நம்ம பாலிசி கதை சொல்லுவது இல்லை , அதனால அதை நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க அட ஆமாங்க மாயா பஜார் காலத்து கதை தான்(அது என்னன்னு பார்த்துக்கோங்க) .
படத்தோட முதல் பாதி எங்கேயும் தட்டு தடங்கள் இல்லாமல் போகுது , சரியான அளவு காமெடி , சரியான அளவு கதை வேகத்தோட சுவாரசியமா நம்ம மனசை படத்தை விட்டு எங்கேயும் வெளியே போகாமல் கொண்டு போயிட்டு விட்டுட்டாங்க , அதே நேரத்தில் இரண்டாவுது பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் திசை மாறி அப்படி இப்படி கொஞ்சம் போனா மாதிரி இருந்தாலும் , அப்புறம் ஒரு வழியா வேகத்தை கொடுத்து நல்லபடியா முடிச்சிட்டாரு , படம் கொஞ்சம் கொஞ்சம் ஏழாம் அறிவு படத்தி ஞாபகப்படுத்தியது
அரவிந்சாமி , ஜெயம் ரவி , இரண்டு பேரும் நான் தான் ஹீரோ , நான்தான் வில்லன் என்று போட்டி போடாமல் , மாற்றி மாற்றி போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருக்காங்க , அரவிந்தசாமி ஜெயம் ரவியா நடிக்கும் போது அவரோட body language எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு , அதுவும் அவரை விசாரணை பண்ணும் காட்சியில் அவர் பண்ணும் அலப்பறை செம்ம , அவங்க ரெண்டு பேரும் காருக்குள்ள பாடி ஆடும் போது ஒரே மாதிரி expression பண்ணுவது சூப்பர் , ஜெயம் ரவி அவர் பங்குக்கு அரவிந்தசாமியா நடிக்கும் போது சில இடங்களில் அரவிந்த்சாமி மாதிரி பண்ணாலும் பல இடங்களில் அவரை போலவே பண்ணுகிறார் , அவர் ஹன்சிகாவோடு dinner சாப்பிடும் காட்சியில் அருமை .அரவிந்தசாமி சார் நீங்க ஒரு ஒரு expression பல இடங்களில் பின்னிபெடல் எடுக்குறீங்க , முதல் பாதியில் ஒரு மாதிரி தூக்கி சாப்பிடுறீங்க என்றால் இரண்டாவது பாதியில் வேற மாதிரி இருக்கீங்க .
ஹன்சிகா ஆஹா ஒல்லியாகி அழகா இருக்காங்க , குறிப்பா ஒழுங்கா டப்பிங்ல் உதடு அசைவு கொடுத்து தமிழ் உச்சரிப்பு ஒழுங்கா கொடுத்து நடிச்சி இருக்காங்க அது ஒரு பெரிய achievement அவங்களுக்கு , மேலும் பொண்ணு பார்க்கும் வரும் காட்சி சூப்பர், நல்ல சிரிப்பு வருது , கழுதை மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவா கவுண்டமணி கேட்பாரு அதுபோல , இந்த ஹன்சிகாவுக்கு உள்ள இம்புட்டு நடிப்பா அப்படின்னு கேட்கிற அளவுக்கு கிளைமஸ்ல நடிச்சி இருக்காங்க,ஹன்சிகா நடித்த பல படங்களில் இது கொஞ்சம் உருப்படியான படம் என்று சொல்லணும் , நடிப்பிலும் improvement ,
அரவிந்தசாமி body language போல அந்த போலீஸ்கார் , ஜெயம்ரவியோட அப்பா , அபப்டின்னு நிறைய பேரு அவரை போல நடிச்சி இருக்காங்க அது எல்லாம் நல்ல இருந்துச்சி ,ஏன் அந்த லேடி போலீஸ் அப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க , அவங்களுக்கு uniform கிடையாதா ? கடைசியா தான் uniform போட்டு வராங்க .
படத்தோட பெரிய ப்ளஸ் இமான், இசை மனுஷன் பக்காவா பண்ணிட்டாரு , இமான் எப்பவும் ஒரே மாதிரி பாட்டு தான் போடுவாரு , ஆனா தீடிர்ன்னு ஒரு வித்தியாசமா பண்ணிடுவாரு அப்படி பண்ணது தான் இந்த படம் .ஏற்கனேவே டமால் டாமால் டுமீல் டுமீல் குத்து பாட்டு ஹிட்டு , இன்னைக்கு தான் என் நண்பர் இந்த படத்தில் செந்தூரா பாட்டு கேளுங்க நல்லா இருக்குன்னு சொன்னாரு ,அதை கேட்டேன், கேட்ட உடனே பிடிச்சிடுச்சி , அதுவும் பாட்டோட காட்சி அமைப்பு நல்லா இருந்துச்சி , படம் முடிச்ச பிறகும் அந்த செந்தூரா பாட்டு மனசுல கேட்டுகிட்டே இருக்கு , bgm இது வரைக்கும் வந்த இமான் இசையில் இருந்து வித்தியாசமா இருந்திச்சி , இமான் சார் கலக்கிடீங்க
டைரக்டர் தப்பா ? producer தப்பா தெரியல தேவி படத்தில் வரும் வீடு இதுலயும் வந்து இருக்கு , அது ஏன் ?அப்பட்டமாக அப்படி பண்ணாங்கன்னு தெரியல, இது கொஞ்சம் fantasy படம் என்பதால் அங்க அங்க லாஜிக் ஓட்டைகள் இருக்க தான் செய்யுது , அரவிந்தசாமி பார்க்காமலே எப்படி ஜெயம்ரவியோட அப்பா, ஹன்சிகா அபப்டி மாறினாங்கன்னு தெரியல , இப்படி சில ஓட்டைகள் இருந்தாலும் அதை மறக்கும்படி படம் bore அடிக்கமா ரெண்டுமணி நேரம் போகுது . மேலும் இந்த படம் face off என்கிற இங்கிலீஷ் படத்தோட தழுவல் , காப்பி சொல்லுறாங்க , அது எந்த அளவுக்கு உண்மை தெரியல
மொத்தத்தில் போகன் நல்ல போகமாக நம்பி போகலாம் .
இப்படி
சினி கிறுக்கன்

Glad to see your review depth has increased. Keep it up
பதிலளிநீக்குThanks Bhooma, but depth is based on the movie how it influence me to write either it shld be gud or extreme bad, if average then my writing also coming up with very average :)...
நீக்குSuper Review
நீக்கு