C.V.குமார் தயாரிப்பு படம்ன்னா ஒரு அளவு நம்பி போகலாம் , அந்த நம்பிக்கையில் தான் இந்த படத்துக்கு போனேன், அந்த நம்பிக்கை வீண் போகலை
அதே கண்கள் இந்த படம் வெறும் 120 நிமிஷங்கள் தான் , அழகா அளவா எடுத்த படம் , அதனால விமர்சனமும் அளவா கொடுக்கலாம் நினைக்கிறேன் ,
படத்தின் கதைக்கு ஏற்ற படத்தின் பெயர் , படத்தில் தேவை இல்லாத காட்சிகள் எதுவும் இல்லை , பெருசா லாஜிக் ஓட்டைகள் இல்லை , படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரத்தில் படத்தின் கதைக்குள் திரைக்கதை போகுது , படத்தின் ப்ளஸ் பாயிண்ட் சொல்லணும்ன்னா , கலையரசன் நல்லா நடிச்சி இருக்கார் , முட்டை கண்ணு ஜனனி படத்தின் தேவையான அளவுக்கு இருக்காங்க , ஷிவதா அருமையாக கடைசி காட்சிகளில் பண்ணி இருக்காங்க , முக்கியமா பாலசரவணன் படத்தை நகர்த்துவதற்கு உதவுகிறார் , அதுவும் அவர் ஒரு சேசிங் சீன்ல் படிக்கட்டில் ஓடும் காட்சி செம்ம சிரிப்பு , அங்க அங்கே timingல் வசனங்கள் நல்லா எடுத்து கொடுக்கிறார் , போலீஸ் கெட்டப்பில் பார்த்த உடனே திருடன் போலீஸ் படம் தான் ஞாபகத்துக்கு வருது , ஜிப்ரான் இசை நல்லா இருக்கு , location எல்லாம் நல்லா இருக்கு , படம் எங்கேயும் bore அடிக்கல , ஆனால் சில இடங்கள் short film போல ஒரு feel .
படத்தின் பெரிய மைனஸ் கதை ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்திலே இது இப்படி தான் போகும்ன்னு தெளிவா தெரியுது , அதனாலா பின்னாடி வரும் சில விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பெரிய impact ஆகல, ட்விஸ்ட் என்று நினைத்த இடங்கள் ட்விஸ்ட் ஆகா தெரியல .
மொத்தத்தில் அதே கண்கள் இன்னும் கொஞ்சம் தெளிவான பார்வை கொண்டதாக இருந்து இருக்கலாம் .
இப்படிக்கு
சினி கிறுக்கன் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
அருமை
பதிலளிநீக்கு