1.‘Platinum Remi’ award’ for best Theatrical Feature Film at 49th WorldFest-Houston, USA
2. ‘Silver Remi Award’ for a song (‘STONE OR SAND’) featuring in the film at
49th WorldFest-Houston, USA
3. ‘Audience Favorite movie’ at 49th WorldFest.-Houston, USA
4. ‘Special Jury Award’ from the National Science Film Festival, organized by the Govt. of India
5. Winner at 17th Bare Bones International Film & Music Festival, USA
6. Winner at Los Angeles Film & Script Festival, USA
அட இத்தனை award எல்லாம் வாங்கி இருக்கே அதுவும் படம் நம்ம ஊர் மின்சாரத்தை பற்றியது நிச்சயமா போயிட்டு பார்க்கணும் தோணுச்சு ,
நாம் பொதுவா இந்த மாதிரி அவார்டு படம் பார்க்க போகும் போது சில விஷயங்கள் எதிர்பார்க்கலாம்
ஒன்னு படம் ரொம்ப சீரியஸ் மெசேஜ் சொல்லி கொஞ்சம் கூட commercial கலக்காமல் போக வாய்ப்பு உண்டு , அப்படி இல்லைன்னா படம் முழுக்க documentary போல போக வாய்ப்பு உண்டு , அதுவும் இல்லைனா காக்கா முட்டை போல messageம் கொஞ்சம் commercial கலந்தும் அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்துறா மாதிரி இருக்கும் ,அதுவும் இல்லையா படம் யாருக்கும் புரியாது ஆனா ஜூரிக்கு மட்டும் புரிஞ்சி award குடுப்பாங்க ,இந்த படம் பார்க்கும் போது இது எந்த மாதிரி வகையில் சேர்பதுன்னு தெரியல
படத்தில் எடுத்த கதைக்களம் ஒரு நல்ல விஷயம் என்றாலும் அதை கொண்டு போயிட்டு மக்களுக்கு சேர்க்கும் விதத்தில் டைரக்டர் கொஞ்சம் தவறவிட்டுட்டார் , படம் ஆரம்பத்தில் பல நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கார் , தமிழ்த்தாய் வாழ்த்துடன் படம் ஆரம்பிக்குது அப்படியே ஒரு திருக்குறள் கூட, அருமையான வித்தியாசமான ஆரம்பம் .வேற என்ன நல்ல விஷயம் என்னனா நம் நாட்டில் நடக்கும் பல உண்மையான பல விஷயங்கள் காட்டி இருக்காங்க , அதாவது எப்படி ஒரு அரசாங்க அதிகாரி அலட்சியமா இருக்காங்க , ஊர் மக்கள் எப்படி ஒரு வளரும் மனிதனை தூற்றுவாங்க ,மிக முக்கியமான ஒன்னு இயற்கை விவசாயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் காட்டி இருக்காங்க , மேலும் சில இடங்களில் வசனங்கள் நல்லா இருக்கு ," வாத்தியார் comma வாக இருக்கணும் full ஸ்டாப் ஆகா இருக்க கூடாது ,அப்புறம் புத்தகம் படிக்கணும் புத்தகத்தோடு பங்களிப்பு பற்றி சொல்லி இருக்காங்க
நான் மேலே சொன்ன நல்ல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் படத்தில் இவை அனைத்தும் சொல்ல வந்த விதம் அந்த அளவுக்கு ஆழமாக இல்லை முழுமையாகவும் இல்லை ,ஏன்னா படம் அங்க அங்க தடம் மாறி தடம் மாறி போகுது, மேலும் நடிகர்கள் நடிப்பு அந்த உணர்வை மக்களுக்கு போய் சேர்க்க கஷ்டப்படுது , படம் எடுத்த விதமும் ரொம்ப நாடகத்தனமா இருக்கு , அதனால ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல படம் பார்க்க ஒரு சலிப்பு ஏற்படுது .ஞானசம்பந்தம் , இளவரசு அவங்க பெரியவங்க என்று காட்ட அவங்க தலை முடியில் போட்டு இருக்கும் நிரை எல்லாம் ரொம்ப செயற்கையாக இருக்கு , அதை ஆரம்ப நிலையில் ஷார்ட் பிலிம் எடுக்குறவங்க கூட நல்லா எடுத்து இருப்பாங்க .
பாவம் அருண் சிதம்பரம் இப்படி ஒரு கதையை எழுதிட்டு நடிக்க , தயாரிக்க யாரும் வரமாட்டாங்கன்னு அவரே எல்லாத்தையும் பண்ணிட்டாரு போல , ஒரு வேலை வேற யாராவுது நடிச்சி இருந்தா இந்த படம் இன்னும் கொஞ்சம் மெருகு ஏறி இருக்குமோ தோணுது , ஹீரோ , ஹீரோயின் காதல் படத்தில் ஒரு மிக பெரிய தடை , படத்தில் பாடலும் அவரே எழுதி இருக்கார் , எனக்கு அதில் பசங்கள் விளையாடும் விளையாட்டை பற்றி ஒரு பாட்டு வரும் அது நல்லா இருக்கு பாட்டை உருவாகின விதம் நல்லா இருந்திச்சி , ஆனால் எனக்கு பூ படத்தில்" ச்சு ச்சு மாரி " பாட்டு ஞாகபம் தான் வந்துச்சி .
மொத்தத்தில் கனவு வாரியம் பல அவார்டு வாங்கினாலும் கொஞ்சம் low voltage தான்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments