நண்பர்கள் எல்லோருக்கும் சினிகருகனின் மனமார்ந்த வணக்கமும் நன்றியும் , ஏன் நன்றி சொல்லுறேன் கடைசியா சொல்லுறேன்.
டிக் டிக் டிக் இந்த படம் ட்ரைலர் பார்க்கும் பொழுதே இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாமல் பார்த்தே ஆகணும் பல பேருக்கு தோன்றியது, இந்த மாதிரி படங்கள் படங்கள் ட்ரைலர் மட்டும் காட்சிகள் நல்லா இருக்கும் , படத்தில் பெருசா இருக்காது , ஆனால் இந்த படம் ட்ரைலர் மட்டும் இல்ல படமும் பார்ப்பதற்கு நல்லா இருக்கு ,
படத்தின் கதை என்னவென்று ட்ரைலர் பார்த்தவர்களுக்கு தெரியும், மேலும் இந்த கதை போல ஒரு இங்கிலிஷ் படம் ஒன்று பெயர் மறந்துட்டேன் , ஆனால் தமிழ் சினிமாவிற்கு இது ஒரு மைல் கல் படம்,படத்தில் லாஜிக் தவிர வேற எதற்கும் குறை சொல்ல முடியாது
படத்தின் ப்ளஸ்களை முதலில் சொல்லிடறேன்
படத்தின் பெரிய ப்ளஸ் visual & sound effects கிராபிக்ஸ் , நம்ம தமிழ் சினிமா பட்ஜெட்க்கு ரொம்ப தரமா செய்து இருக்காங்க, கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாது, பல பெரிய பட்ஜெட் படங்களில் கூட சில பல இடங்களில் அந்த காட்சி கிராபிக்ஸ் பயன்படுத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சிடும் , இந்த படம் முக்கால்வாசி க்ராபிக்ஸ் தான், ஆனால் கொஞ்சம் கூட அது கிராபிக்ஸ் என்று எங்கேயும் சொல்ல முடியாது , நாமே அந்த விண்வெளியில் பயணிப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , அதுவும் இல்லாத ஒன்று இருப்பது போல உணர்ந்து நடிப்பது கொஞ்சம் கஷ்டம் அதை ஜெயம்ரவி நல்லா செஞ்சி இருக்கார் , குறிப்பாக அந்த விண்வெளியில் உயிருக்கு பயந்து வெளியே பறப்பது, மேலும் படத்தின் ப்ளஸ் என்னவென்று பார்த்தா படம் bore அடிக்காமல் போகுது , தேவையில்லாமல் காதல் பாட்டு அது இதுன்னு எதுவும் தேவையில்லாமல் வைக்காமல், படம் தெளிவா ஆரம்பிக்கும் பொழுதே கதைக்குள்ள சென்று வேற எங்கேயும் வெளியே போகாமல் படம் போகுது .
படத்தின் மிக பெரிய ப்ளஸ் இம்மான் bgm மற்றும் பாடல்கள் , ரெண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட் தான் , அதில் சித்ஸ்ரீராம் குரலில் குறும்பா பாடல் செம்ம , ஜெயம்ரவியின் உண்மையான பையன் இந்த படத்தில் நடிப்பதால் அந்த பாடலில் வரும் குழந்தைப்பருவ காட்சிகள் எல்லாம் உண்மையான படங்களை வைத்து இருக்காங்க
ஜெயம்ரவிக்கு மீண்டும் ஒரு வித்தியாசமான படம் இது , நிச்சயமா இந்த படம் மொக்க பிளாப் ஆகாது , நல்ல பெயர் தரும்,
நிவேதா பெத்துராஜ் முதல் காட்சி காட்டும் பொழுதே தியேட்டரில் கை தட்டு பறக்குது , அது ஏன்னா trailerல் ஒரு காட்சி அப்படி இருக்கும் ஆனால் அந்த காட்சி படத்தில் இல்ல .மேலும் அவங்க ரொம்ப விறைப்பாங்க பேசுவது ரொம்ப செயற்கையாக இருக்கு .
சரி இப்போ இந்த படத்தின் மைனஸ் பற்றி பார்க்கலாம்
இந்த மாதிரி படத்தில் லாஜிக் என்பது கொஞ்சம் எதிர்பார்க்க கூடாது , இதுவே இங்கிலிஷ் படத்தில வந்தா வாவ் படம் சூப்பர் சொல்லுவோம், ஆனால் நம்ம ஊரில் வந்தா கலாய்ப்பாங்க , அப்படி தான் மிருதன் படத்தை சொன்னாங்க , ஆனால் இந்த படத்தில் லாஜிக் அநியாயத்துக்கு அடிவாங்கி இருக்கு,என்ன எல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லுறேன்
1, ஒரு சாதாரணமான ஆட்கள் விண்வெளிக்கு போறதுக்கு வெறும் ஆறு நாட்களில் training கொடுத்து விண்வெளிக்கு அனுப்புவது நம்ப முடியல , ஏதோ 6 மாசம் , atleast 60 நாட்களாவது காட்டி இருக்க வேண்டாமா ? ஒரு மனசாட்சி வேண்டமா டா ?
2.ஜெயம்ரவி கூட ரமேஷ் திலக் , அர்ஜுனனின் ரெண்டு போறாங்க , ரமேஷ் திலக் கூட accept பண்ணிக்கலாம் ஆனால் அர்ஜுனன் விண்வெளிக்கு போவது அவர்க்கு training எடுப்பது எல்லாம் கொஞ்சம் over,
3.மேல சொன்ன ரெண்டு லாஜிக் காமெடி எல்லாம் விட ஒரு ஸ்பெஷல் item டைரக்டர் படத்துல வச்சி இருக்கார் , ராக்கெட் கிளம்பி 3 மணி நேரத்தில நிலாவில் அது லேண்ட் ஆகுது அடேய்ஜெயம்ரவி தூக்கிகிட்டு ஏதோ flight ல டெல்லி , மும்பை போனா மாதிரி சொல்லுறீங்களேடா
4. என்ன தான் விண்வெளியில் எடை குறைவாக இருந்தாலும் ,200 டன் nuclear weapon அசால்ட்டாக தூக்கிகிட்டு போகிறார்
5. ராக்கெட் கிளம்பும் போதே யாரு முக்கிய வில்லன் என்று தெரிந்து விடுகிறது 6. அப்புறம் பல ட்விஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் பெருசா தெரில , கண்ணாடி வச்சி மறைப்பது , boxக்குள் திலக் போவது என்பது எல்லாம் இது எல்லாம் இபப்டி தான் நடக்கும் என்று clear ஆகா தெரிகிறது .இப்படி சில பல லாஜிக் மிஸ்ஸிங் நிறைய இருக்கு
இப்படி லாஜிக் மிஸ்ஸிங் பல இருந்தாலும் , ஒரு வித்தியாசமான முயற்சிக்காக இந்த படத்தை நிச்சயமா தியேட்டர் சென்று பார்க்கலாம்.
மொத்தத்தில் டிக் டிக் டிக் லாஜிக் தவிர எல்லாத்துக்கும் டிக் அடிக்கலாம் .
இப்படிக்கு
கிறுக்கன்
சிறிது நாட்களாக சில பல வேலை காரணமாக பல படங்கள் முதல் அல்லது ரெண்டாவது நாட்களில் பார்க்க முடியவில்லை , மேலும் பார்த்த படங்கள் விமர்சனம் எழுத நேரம் அமையவில்லை, மேலும் எழுத content கிடைக்கமாட்டேங்குது , காலா படம் ரெண்டு முறை விமர்சனம் எழுதியும் பெருசா views போகவும் இல்லை , ஆகவே இனிவரும் காலங்களில் கிறுக்கனின் கிறுக்கல் குறையலாம் அல்லது முடியலாம்.
இதுவரை ஆதரவு அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் , இப்போ புரியுதா மேலே முதல் வரியில் ஏன் நன்றி சொன்னேன் என்று.
கிறுக்கனின் கிறுக்கல்கள் முற்றும் .