இந்த படம் மற்ற பெரிய படங்களை விட ரொம்ப எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம் , ஏன்னா, இந்த படத்தோட போஸ்டர் , டீஸர் , ட்ரைலர் எல்லாம் அப்படி ஏற்படுத்தியது, மேலும் டைரக்டர் அப்படி பட்டவர் , ஹர ஹர மஹாதேவி என்ற ஒரு காவிய படத்தை தந்தவர் இவரே .
சரி இந்த படம் எப்படி இருக்கு ? இந்த படத்தை கொஞ்சம் கூட பார்க்கறதுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லாத படம் இது , என்ன தான் இரட்டை அர்த்தம் வசனங்கள் , ச்சே ச்செ டபிள் மீனிங் இல்ல , எல்லாம் ஸ்ட்ராயிட் மீனிங் உள்ள படம்னாலும் , படத்தில் கதை அதை ஒட்டிய காமெடிகளும் கொஞ்சம் கூட இந்த படத்தில் கிடையாது , என்னதான் "ஹர ஹர மஹாதேவி " படத்தில் adults only காமெடி இருந்தாலும், அந்த காமெடி படத்தின் கதையை ஒட்டியே இருந்துச்சி மேலும் அந்த கதைக்கு பொருத்தமாக timing , situation காமெடி கடைசி வரை இருந்தது , ஆனால் இந்த படம் கொஞ்சம் கூட கதை என்பது கிடையவே கிடையாது .
ஒரு மட்டமான கேவலமான செம்ம boring ஆகா தான் இருக்கு இந்த படம் , ஆரம்பம் ஏதோ தானோ சம்மந்தமே இல்லாமே படம் போகுது , சரி போக போக நல்ல காமெடியாக போகும் நினைச்சேன், ஆனால் அதுவும் இல்ல அங்க அங்க பச்சையாக வசனங்களும் காட்சிகளும் இருந்தாலும், படத்தில் அனைத்தும் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது ,
எல்லா கேரக்டர்களும் ரொம்ப செயற்கையாக காட்டப்படுகிறது , ஒரு கேரக்டர் கூட மனசில் நிற்கவில்லை , அது போல ஒரு காமெடி கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இல்ல அந்தளவுக்கு ரொம்ப மோசமாக தான் இருக்கு , இப்போ கூட ஹர ஹர மஹாதேவி படத்தில் வரும் காமெடிகள் ஞாபகத்தில் இருக்கு , ஆனால் இது இந்த படம் ? ஒரு காட்சி , ஒரு காமெடி கூட இந்த படம் பார்த்து வந்து கொஞ்ச நேரத்தில கொஞ்சம் கூட ஞாபகத்திற்கு வரவே இல்ல.
ஒரு தடவை ஹர ஹர மஹாதேவி மாதிரி படம் வரலாம் , ஆனால் அது மாதிரியே படம் வருமா என்றால் அது சந்தேகம் தான் , இது கொஞ்சம் hype create ஆனதால் இந்த படம் முதல் மூன்று நாள் போகும் , ஆனால் அநேகமா டைரக்டர் சந்தோஷ் இது மாதிரியே அடுத்த படமும் எடுத்தா நிச்சயமா அட்டு பிளாப் ஆகும்
ஹீரோயின் யாஷிகா கேரக்டர் , மேலும் அந்த பேயாக வரும் கேரக்டர் ரொம்ப மட்டமா சித்தரிக்கபட்டது , இந்த படம் adult comedy movie not porn movie சொன்னாங்க , ஆனால் நிறைய காட்சிகள் B grade porn movie போல தான் இருக்கு , ஆடைகள் , மற்றும் பல பல பல காட்சிகள் ரொம்ப மட்டமாக இருக்கு, இது போக மதுமிதா , மொட்டை ராஜேந்திரன் , பாலசரவணன் எல்லோருடைய கேரக்டர் கொஞ்சம் கூட ரசிக்கும்படி இல்ல .கருணாகரன் கடைசியில் வந்தாலும் இவர்களை compare பண்ணும் போது இவர் ஒரு அளவுக்கு ஸ்கோர் பண்ணுகிறார் சொல்லலாம் அவ்ளோதான் , மற்றபடி சொல்லிக்கும்படி இல்ல
பாடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சுட்ட பாடல்கள் , porn anthem party song கேட்டால் நடு நடுவே kalachasma பாடல் வருது , அப்பறம் அழுக்கு ஜட்டி அமுதவல்லி பாட்டு கேட்டால் , ஹிந்தி கஜினி படத்தில் வரும் Aye Bachchu பாடல் கொஞ்சம் கேட்க்குது
இந்த படம் 18+, இப்படி தான் இருக்கும் மேலும் சமூகத்தின் மேல அக்கறை உள்ளவங்க இந்த படத்தை பார்க்காதீங்க இபப்டி எல்லாம் ஏற்கனவே சொல்லி தான் இருக்காங்க , அதனால் ரொம்ப உத்தமன் வேஷம் போட்டு இந்த படத்தை பார்க்க போகல , ஆனால் ஹர ஹர மஹாதேவி போல எந்த லாஜிக் பார்க்காமல் நல்லா சிரிச்சிட்டு வரலாம் என்று நினைத்து போனால் அது கொஞ்சம் ஏமாற்றம் தான் .
மொத்தத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, இருட்டு கதையில் சுருண்டு போனது
இப்படிக்கு
சினி கிறுக்கன்
உங்களுடைய தார்மீக கோபம் புரிகிறது.
பதிலளிநீக்குஇருட்டு அறையில் முரட்டுக் குத்து - பட விமரிசனமும் முரட்டுக்குத்து.
பதிலளிநீக்குWorst movie. It is like porn movie
பதிலளிநீக்கு