வெள்ளி, 11 மே, 2018

Iravukku Aayiram Kangal - இரவுக்கு ஆயிரம் கண்கள்

உதயநிதி படத்தை பார்ப்பதை விட அருள்நிதி படத்தை நிச்சயமா நம்பி போலாம் என்ற ஒரு எண்ணம் எப்பவும் உண்டு , அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல்   இந்த படத்தையும் கொடுத்து இருக்கார் அவர்.

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை கண் அசராமல் நம்மை பார்க்க வச்சி இருக்காங்க , முதல் காட்சியே ரொம்ப அழகா,  அதை ஒரு கோர்வையாக கொடுத்து, அப்படியே பிளாஷ் பேக் போவது சூப்பர், அட முதல் ஸ்டேஷன் காட்சியிலே ஒரு நம்பிக்கை கொடுத்துட்டார் டைரக்டர் , அப்பறம் வழக்கம் போல ஹீரோ , ஹீரோயின் establishment காட்சி வச்சி வழக்கமான படம் போல கொஞ்சம் போனாலும் , ஒரு ஒரு  காட்சியும் , ஒரு ஒரு ஷாட்களும் படத்தோட கதையை தொடர்ப்பு படுத்தியே படம் நகர்கிறது , எந்த காட்சியும் தேவை இல்லாத காட்சி என்று கொஞ்சம் கூட தள்ளி வைக்க முடியாது, அந்த அளவுக்கு எல்லாமே கதையை ஒட்டியே படம் போகுது .

படத்தின் பெரிய ப்ளஸ் காட்சியமைப்பு தான், படத்தின் ஓட்டத்தை ஒரு ஒரு கேரக்டர்களுடன் லிங்க் பண்ணி லிங்க் பண்ணி படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லுகிறார் டைரக்டர், ஒரு படம் வெற்றி பெறுவது படம் ஆரம்பித்தவுடன் படத்தின் கதைக்குள் போவது மேலும் கதை ஒரே இடத்தில் நிற்காமல் அடுத்து அடுத்து வரும் காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்துக்கு சென்று போவது, இதை இந்த படத்தில் சரியாக செஞ்சியிருக்காங்க , மேலும் ஒரே காட்சியை வேறு வேறு கேரக்டர்களின் பார்வைலயிருந்து அதை அழகாக கொண்டு போறாங்க , சில சமயம் ஒரு காட்சி வேற வேற point of viewல் இருந்து கொண்டு போகும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சலிப்பு ஏற்படுத்தும் , அது போல சலிப்பு ஏற்படுத்தாமல் ரொம்ப  கவனமா கையாண்டு இருக்காங்க, படத்தில் ஏகபட்ட முடுச்சிகள்  இருக்கு அதை டைரக்டரும்   குழம்பாமல் , பார்ப்பவர்களையும் குழப்பாமல் ரொம்ப தெளிவா அந்த முடிச்சிகளை அவிழ்த்து படத்தை முடிச்சிவைக்கிறர் டைரக்டர்.

படத்தின் இன்னொரு ப்ளஸ், படம் பார்ப்பவர்களை கொஞ்சம் அங்கே இங்கே கூட சிந்திக்கவிடாமல், படத்திலே நம் முழு கவனத்தையும் முழுக வச்சிட்டார்,  ஏன்னா முதலில் யார் அங்க கொலையானாகன்னு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தவச்சிட்டார் , பிறகு யார் அந்த கொலையை  பண்ணாக என்று கடைசி வரை யோசிக்க வைச்சிட்டார், எல்லாம் முடிச்சிடுச்சி முடிச்சிடுச்சின்னு நினைக்கும் போது இன்னொரு ட்விஸ்ட் வச்சி , அது முடிச்சது என்று நினைக்கும் பொழுது கடைசியில கூட இன்னொரு ட்விஸ்ட் வச்சி படத்தை முடிக்கிறார் டைரக்டர் , நம்மையும் wow சொல்லவச்சிட்டார் , படம் முழுவதும் நம்மை guess பண்ண வச்சிக்கிட்டே இருக்காங்க , நான் ஒரு ஒரு தடவையும் ஓ படம் இபப்டி போகுமோ , அட அபப்டி போகுமோ நினைக்கும் போது எல்லாம் வேற வேற மாதிரி படம் போய்கிட்டு இருக்கு .

படத்தின் ப்ளஸ் கேமராமேன் அரவிந்த் மற்றும் எடிட்டர் சான் லோகேஷ் , ஏன்னா மேல சொன்னேன் படம் பார்ப்பவர்களை குழப்பமால்  போகுதுன்னு அதுக்கு முக்கிய காரணம் எடிட்டர் தான் சொல்லணும் , ஏன்னா படத்தின் காட்சி முன்னாடி பின்னாடி மாறி மாறி போய்கிட்டே இருக்கு அதை ரசிகர்களுக்கு தெளிவா புரியவைத்தது எடிட்டர் தான் . மேலும் சாம்.சி இசைய கூடுதல் பலம் சொல்லணும் .

அருள்நிதி படத்தில் இருளாதநிதியாய் இருக்கார் , அவர் படத்திற்கு நம்பி போனவர்களுக்கு கைவிடமாட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிட்டார் , அஜ்மல் கோ படத்தில் எப்படி இருந்தாரோ அபப்டியே இருக்கிறார் , ஹீரோயின் மஹிமா நம்பியார் தேவையான அளவுக்கு படத்தில் use பண்ணியிருக்காங்க , மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் , ஆடுகளம் நரேன் , ஜான் விஜய் , சாய சிங், இப்படி ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் சரியாக கதைக்கு பயன்படுத்தி இருக்காங்க , இதில் ஆனந்தராஜ் சீரியஸ் ஆனா நேரத்திலும் கொஞ்சம்  காமெடி பண்ணுகிறார் 


இந்த படத்தில் வரும் மழை , கொலை , இரவு , அந்த வீடு இப்படி பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் துருவங்கள்16 படத்தை ஞாபகம் படுத்தியது .நிச்சயமா டைரக்டர் மு.மாறன் ஒரு நல்ல தரமான படத்தை தந்து இருக்கிறார் .முக்கியமான விஷயம் படம் ஆரம்பம் முதல் பாருங்க , இன்டெர்வல் அப்பறம் லேட்டாக வாராதீங்க , ஒரு ஒரு காட்சியும் மிஸ் பண்ணாம பாருங்க அப்போ தான் படம் புரியும் , ஏன்னா ஏற்கனவே சொன்ன மாதிரி படத்தில் எல்லா காட்சியும் லிங்க் ஆகி இருக்கு .

மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள், வைத்த கண்களை எடுக்காமல் பார்க்க வைக்கிறது.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 





5 கருத்துகள்:

Comments