இந்த படத்தை நான் பெருசா எதுவும் எதிர்பார்த்து போகலை , ஏன்னா வாலு படத்தோட டைரக்டர் தான் இந்த படத்தோட டைரக்டர் , அதனால இந்த படம் ரொம்ப சுமாராக தான் இருக்கும் நினைத்து போனேன், ஆனால் வாலு மாதிரி மொக்கையா இல்லாமல் அதை விட ஒரு படி மேலே சுமாராக தான் இருந்துச்சி இந்த படம் , அதற்க்கு ஒரு காரணம் விக்ரம் என்றாலும் , திரைக்கதை கொஞ்சம் சில இடங்களில் கை தட்ட வைத்தது .
வடசென்னை கதை என்றாலே gang war , போட்டா போட்டி , ரவுடி , அடிதடி ,வெட்டு குத்து , ராயபுரம் என்ற வழக்கமான கதைக்களத்தில் தான் படம் போகுது , இதுல நடுவில் காதல் வேற , சத்தியமா சுத்தமா கொஞ்சம் கூட படத்தில ஒட்டவே இல்லை, அப்பறம் எப்பொழுதும் எதிர்பார்த்த மாதிரி ஹீரோவின் நண்பர்கள் செத்து போய்டுவாங்க அதுவும் இந்த படத்தில இருக்கு
படம் ஆரம்பித்து கொஞ்சம் நேரத்தில அடேய் எத்தனை தடவை டா இந்த மாதிரி படம் பாக்கிறதுன்னு கேள்வி மனசில வருது , அதுவும் தமன்னா படத்தின் கதைக்குள்ள வந்த உடனே , எப்பா டேய் முடியலடான்னு மேலும் சொல்லவைக்குது , இதுக்கு நடுவே சம்மந்தமே இல்லாமே சூரி வேற ஒரே ஒரு காட்சி , முதல் பாதியில் ஒரு காட்சி,இரண்டாவது பாதியில் ஒரு காட்சி அவ்ளோதான்,
இதுமட்டுமா opening மாஸ் பாடல் , சுத்தமா விக்ரமுக்கு செட் ஆகல , டூயட் பாட்டு , தேவையில்லாமல் ரெண்டாவுது பாதியில் பாடல்கள் , அய்யோ ஆளைவிடுங்கடா சாமி திணற திணற இருக்குது , அதுவும் பாட்டு சுத்தமா நல்லாவே இல்ல , தம்மன் எப்பொழுதும் போல டனுக்கு டனுக்குன்னு காது கிழிய இரைச்சலாக பாட்டு போட்டு கொடுத்து இருக்கார்
முக்கியமா படத்தில ஒன்னு சொல்லணும் அதாவது காதல் காட்சியில் நம்ம டைரக்டர் எப்படி காதல் கலைநயமாக சொல்லிருக்காருன்னா , ஒரு பாடல் காட்சியில் தமன்னா அவங்க கையில ஸ்கெட்ச்ன்னு எழுதுவாங்க , அதுவும் எப்படி எழுதுவங்கன்னு தெரியுமா ? வேற வேற கலர்ல ஸ்கெட்ச் use பண்ணி கையில எழுதுவாங்க , அதாவது symbolic ஆகா ஸ்கெட்ச் என்ற விக்ரமை அவங்க காதலிக்கறாங்களாம் , அந்த ஒரு சீன் போதும் டைரக்டர் டச் அங்க நிக்குது ஷப்பா முடியல டா சாமி .
படத்தில இன்னும் குறைகள் சொல்லிகிட்டே போகலாம், ஒரு சண்டை காட்சியில் backgroundக்கும் விக்ரம் சண்டை போடும் இடத்திற்கும் அப்பட்டமாக செம்ம light difference , அது blue matல எடுத்தாங்களா ? இல்ல lighting அவ்வளவு மோசமா பண்ணிட்டாங்களா ? ஒரு இடத்தில் விக்ரம் கண்ணாடியில் தர்மாகோல் தெரியுது , ஒரு நைட் சீனில் பின்னாடி லைட் வைச்சது frameல் வருது , ஏன் இவ்வளவு மோசமான மேக்கிங் ? ஏன் எடிட்டர் இதை பார்க்கவில்லையா ?
என்னடா விமர்சனம் முதலிருந்து ஒரே negative ஆகவே சொல்லுறியே , positive ஒன்னும் இல்லையே என்ற கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது , ஆமாங்க படத்தில ப்ளஸ்ன்னா அது விக்ரம் மட்டும் தான், அவர் ஒருத்தருக்காக தான் இந்த படம் பார்க்கணும் தோணுச்சு , அவர் மட்டும் இல்ல இந்த படம் இன்னும் ஒரு மோசமான படமாக அமைந்து இருக்கும், அவரோட ஹீரோயிசம் , மாஸ் சீன் சூப்பர் .
அப்பறம் படத்தில வேற என்ன ப்ளஸ் ? ஆமாங்க படம் ஆரம்பித்து bore ஆக போனாலும் , ஒரு இடத்தில கொஞ்சம் விறுவிறுப்பு படத்தில் எடுத்தது , அட படம் இனிமேல செம்மயா போக போகுது நினைக்கும் போது இன்டெர்வல் , அட ரெண்டாவது பாதி படம் சூப்பர் ஆக இருக்கும் நினைக்கும் போது நம்ம நினைப்புல மண்ணை அள்ளி போட்டுருவாங்க, திரும்பவும் படம் கொஞ்சம் சூடு பிடிக்கும் போது படம் முடிஞ்சுடும் . intervalக்கு முன்னாடி ஒரு 15 நிமிஷம் , படத்தின் கடைசி 15 நிமிஷம் தான் நல்லா இருக்கு, அதாவது படத்தில ஸ்கெட்ச்ன்னு பேரு வைச்சதால என்னவோ , அவங்க ஸ்கெட்ச் போட்டு தூக்கும் காட்சி ரொம்ப நல்லாவே இருக்கு, குறிப்பா கடைசியில் அந்த வில்லனை போட்டு தள்ளும் காட்சி wow சொல்லி கைதட்ட வைக்குது .அப்புறம் climax நான் எதிர்பார்த்தா மாதிரி தான் இருந்துச்சி அது ஒன்னும் பெருசா ட்விஸ்ட் போல தெரியல , ஆனால் அவங்க அதை எப்படி பண்ணாங்க என்பதை காட்டுவது ஓகே சொல்லலாம்.
மொத்தத்தில் ஸ்கெட்ச் நமக்கு ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணிட்டாங்க
இப்படிக்கு
சினி கிறுக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments