சனி, 22 ஜூலை, 2017

Vikram Vedha - விக்ரம் வேதா

ஒரு சில வேலைகளால் கொஞ்சம் தாமதமாக ஒரு நாள் கழித்து விக்ரம் வேதா விமர்சனம் உங்களுக்காக இதோ

முதல் வரியிலே, அதுவும் ஒரே வரியிலே சொல்லவேண்டும்ன்னா  இந்த படம் நிச்சயம் எல்லா தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் படம் , நிச்சயமா சிறந்த திரைக்கதைக்கு பல விருதுகள் வாங்கும் படம் , படத்தின் கதையின்னு பார்த்தா ஒரு சாதாரண gangster படம் , ஆனால் அதை சொன்னவிதம் தான் வேற லெவெல்.

படம் ஆரம்பத்தில் அட எப்பொழுதும் போல போலீஸ் திருடன் கேரக்டர் படம் போல நினைச்சா அது தப்பு  , விஜய்சேதுபதி வந்த பிறகு படம் ஒரு தீபாவளி போல ஒரு கொண்டாட்டம் தான் , விஜய்சேதுபதியும் , மாதவனும் சந்திக்கும் முதல் விசாரணை காட்சி வசனங்கள் இரண்டு பேரும் மோதுவது செம்ம , அதுக்கு அப்பறம் வரும் காட்சிகள் எல்லாம் ஒரு விடுகதை போல போய்கிட்டு இருக்கு , விஜய்சேதுபதி ஒரு ஒரு தடவை மாதவனை சந்திக்கும் போதும் ஒரு ஒரு கதை சொல்லி அதில் ஒரு clue கொடுத்துட்டு போவதும் , அதை அவர் உடைச்சி அதன் மூலமாக அவரோட கேஸை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போவதும் செம்ம .இது பார்க்க பார்க்க அட அட போடவச்சிக்கிட்டே இருக்கு , இரண்டாவது பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவளோதான் முடிச்சிடுச்சி போல நினைக்கும் போது , திரும்பவும் ஒரு கதை உண்டாக்கி அதிலிருந்து ஒரு clue சென்று கொஞ்சம் கூட எங்கேயும் எதிர்பார்க்காம பல முடிவுகளை, படம் முடியப்போகும் வரை வைத்து கொண்டு ,முடிவுகளை நம்மகே  கொடுத்து இருக்காங்க , அட என்னடா ஒன்னும் புரியலையா ? சொன்ன சுவாரசியம் போய்டும் படம் போயிட்டு பாருங்க .எனக்கு பிடிச்ச clue பரோட்டாவும் , நல்லிக்கறியும் தான் , படம் பாருங்க புரியும்

படத்தில் ஒரு ஒரு கேரக்ட்டரும்   மனசுல நிக்குது , எல்லா கேரக்டர்க்கும் சரியாக முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்க , மாதவன் , விஜய்சேதுபதி மட்டும் இல்ல , படத்தில் வரும் கேரக்டர்  மாதவனோட மனைவி , மற்றும் புள்ளி , சந்திரா , ரவி, சேட்டா , half boil ,  bullet chain packet ,மேலும் அந்த  போலீஸ் gang , இப்படி எல்லாமே மனுசுல பதியுது , எதை விடுறது எதை எழுதுவதுன்னு தெரியல , படத்தில் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு , சிலது நமக்கு justification கொடுத்துட்டாங்க , குறிப்பா புள்ளி கேரக்டர்க்கு ஜோடியா வரும் வரலக்ஷ்மிக்கு ரொம்ப வயசானவங்களா இருப்பதால் புள்ளியை விட இரண்டு வயசு பெரியவங்க சொல்லி சமாளிச்சிட்டாங்க , என்னடா மாதவன் மற்றும் அவங்க gang பார்க்க போலீஸ்காரங்க போல இல்லையே தாடியும் , கேடியுமா இருக்காங்களே நினைக்கும் போது , அதுக்கும் ஒரு வசனம் சொல்லி சமாளிச்சிட்டாங்க .

படத்தில் நடிச்ச பலர் டைரக்டர் ரஞ்சித்தோட படத்தில் நடிச்சவங்க , படமும் வடசென்னையில் நடப்பதால், எனக்கு  தீடிர்ன்னு பா.ரஞ்சித்தோட படமோ தோணுச்சு .அதுபோல விஜய்சேதுபதி முதல் drug deal பண்ணுவது எனக்கு நாயகன் படத்தை ஞாபகம் படுத்துடுச்சி .

மாதவன் என்ன ஸ்டைல் , என்ன body language மனுஷன் செம்ம , முதல் காட்சியிலே எல்லோரையும் கலாய்ப்பதும் , சில இடங்களில் விஜய்சேதுபதியை சமாளிக்கமுடியாமல் தடுமாறும் போதும் , தன்னோட மனைவியோட சண்டை போடுவதும் , பிறகு சமாதானம் ஆவதும் நடிப்பில் சூப்பர் , இறுதி சுற்று அவருக்கு மீண்டும் தமிழ் சினிமாவுல ஒரு சுற்று ஆரம்பித்தது , இந்த  விக்ரம் வேத வேறகட்ட சுற்றுக்கு போயிட்டாரு

மாஸ் மாஸ் மாஸ் மாஸ் அது விஜய்சேதுபதி தான் , அவரோட opening சீன் ultimate , அவருக்கு  இதுவரை இப்படி ஒரு மாஸ் opening சீன் எந்த படத்திலும் வந்தது இல்ல , எனக்கு ரஜினி , அஜித்க்கு அப்புறம் ஒரு opening சீன் மயிர்க்கூச்சரியும்(உங்க மொழியில் goose bump) போல இருந்ததுன்னா ,அது விஜய்சேதுபதிக்கு இந்த படத்தில் தான் , அதுக்கு ரொம்ப முக்கிய காரணம் அவருக்கு வச்ச ஷாட்ஸ் , சரியாக பெருந்திய மாஸ் Bgm தான், அதுமட்டுமா கிளைமஸ் காட்சியில் சண்டை போடும் போது செய்யும் காமெடிகளும் அவருக்கு கைவந்தக்கலை , தியேட்டர் விசில் பறக்குது .இந்த வருஷம் அவருக்கு கவண் படத்திற்கு பிறகு சொல்லி அடிக்கும் சிக்ஸர் .

இந்த படத்தின் முக்கியமான ஒரு உயிர்ன்னா  அது சாமுடைய  இசை தான் , அந்த ஒரு Bgm தன தன தனன்னா ultimate , நிச்சயமா அது ஒரு ட்ரெண்டிங் Bgm, படத்தில் அதிகம் பாட்டு சேர்க்கமா தேவையான பாட்டு சேர்த்து இருக்காங்க அதுவும் நல்லா இருக்கு , ட்ஸ்க்கு ட்ஸ்க்கு பாட்டு நல்லா ஆட்டம் போடவைக்குது . மனசுக்கு இதமா நெஞ்சாதியே நெஞ்சாதியே பாட்டும் அருமை , படம் முழுக்க Bgm தெறிக்க விட்டு இருக்கார் .

இப்படி ஒரு வித்தியாசமான  திரைக்கதை உருவாக்கி படத்தை இயக்கிய புஷ்கர் காயத்திற்கு ஒரு பெரிய சலுயூட்டு


மொத்தத்தில் விக்ரம் வேதா   வெற்றியும் விருதுகளும்

இப்படிக்கு
சினி கிறுக்கன்

3 கருத்துகள்:

Comments