மீசையமுறுக்கு - கதை புதுசுஇல்ல , திரைக்கதை புதுசு இல்லை , எதுவும் சுவாரசியமா கொடுக்கவில்லை , சின்ன திரைமுகங்கள் பெரியத்திரையில் , அட டிவி முகங்கள் இல்லங்க எல்லாம் youtubeல் வந்தவங்க, என்னை பொறுத்தவரை இந்த படம் பலபேருக்கு பிடிச்சி இருக்கன்னு சொன்னா அதுக்கு காரணம் ஆதி மட்டும் தான் , பிறகு Rj .விக்னேஷ்க்கு இருக்கும் face value மட்டும் தான்
கதை ஆதியோட உண்மை சம்பவங்கள் மற்றும் அதன் கூட கொஞ்சம் கற்பனை கலந்து கொடுத்து இருக்காங்க , படத்தோட ப்ளஸ் ஒரு வரி கருவாக கொடுத்தது தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையமுறுக்கு, என்னை பொறுத்தவரை இந்த படம் ஆஹா ஓஹோ இல்லை , அதே நேரத்தில் இந்த படம் ஒரு மொக்கை படமும் இல்லை , இது ஒரு average படம் மட்டும் தான், ஆனால் பல youtube reviewல் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளி இருக்காங்க அது ஏன்னா படத்தில் நடித்து எடுத்து இருப்பவங்க அவர்களை சார்ந்தவர்கள் அவ்ளோதான் , அதனால இந்த படத்தை promote பண்ணுகிறாங்க, இது ஒருவகை promotion strategy.
படத்தில் ப்ளஸ் காமெடி என்றாலும் , Rj .விக்னேஷ் கொடுக்கும் பல கவுண்டர் சிரிக்க வைத்தாலும் , பல இடங்களில் கொஞ்சம் ஓவர் போல இருக்கு , அது சிரிப்பை கொடுக்கவில்லை, மேலும் ஹாஸ்டல் காமெடி , plan a ,b ,c காமெடி எல்லாம் கொஞ்சம் மொக்கை தான் ,பிறகு மற்றவர்கள் பண்ணும் காமெடி மனசில் நிற்கவில்லை ,ஆனால் அதுக்கு போயிட்டு ஏன் மக்கள் பலர் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கன்னு தெரியல , ஆதி மற்றும் Rj .விக்னேஷ் கூட்டணி பள்ளி படிக்கும் போது வரும் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது 3 படத்தில் தனுஷும் சிவகார்த்திகேயனும் பண்ணுவது போல இருந்திச்சி .
மனிதனுக்கு எப்பொழுதும் ஒரு mind set இருக்கும் அவங்களுக்கு பிடிச்சிவங்க என்ன பண்ணாலும் பிடிக்கும் , அது போல தான் இந்த மீசையமுறுக்கு , ஆதி மற்றும் Rj .விக்னேஷ் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த படம் இந்த அளவுக்கு reach ஆகி இருக்காது , இப்போ எப்படி சிவகார்த்தியகேயன் மொக்கை காமெடி பண்ணாலும் சில மக்கள் ரசிக்கிறாங்களோ அது போல தான் இந்த படமும் , இப்போ இருக்கற ட்ரெண்ட் பல காலேஜ் படிக்கறவங்களுக்கு ஆதியும் Rj .விக்னேஷ்ம் பிடிக்கும் , அதனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்த படமாக அமையும் , மேலும் படத்தில் engineering காலேஜ் பற்றி , BE படிக்கறது worth இல்ல என்கிற இன்றைய ட்ரெண்ட் சொன்னதால் பிடிக்கும் . ஹீரோயின் முகமும் கதாபாத்திரமும் படத்தில் கொஞ்சம் கூட ஒட்டவில்லை , ஆதி காதல் அந்த அளவுக்கு எடுபடவில்லை
ஆதி ஏற்கனேவே கொடுத்த ஹிட் பாடல்கள் படத்தில் இருப்பதால் அது ஒரு ப்ளஸ் , இரண்டாவது பாதியில் சாரா காமெடி நல்லா இருந்துச்சி , அது போல ஒரு பெரிய முடி வச்சிக்கிட்டு வரும் fenny படத்தில் அவரை நல்லா நோட் பண்ணவச்சி இருக்கார் , முக்கியமாக விவேக் ஆரம்பத்தில் அவர் தமிழுக்கு ஆதரவாக பேசும் வசனங்கள் செம்ம
என்னாடா எல்லாரும் இந்த படத்தை ஆஹா ஓஹோ புகழுறாங்க , இவன் என்னடா நெகடிவ் ஆகா எழுதி இருக்கானேன்னு நிறைய பேரு என்னை திட்ட போறாங்க , அதை பற்றி கவலை இல்லை , மனதில் பட்டத்தை தான் எழுதுவான் இந்த சினி கிறுக்கன் .
ஆனால் படம் முடியும் போது ஒரு விஷயம் தோணுச்சி , ச்சே நாமும் நம்ம எழுதுகிற review ஒரு நாள் நல்ல publicity ஆகி படத்தில் ஆதி பெரிய ஆள் ஆகியது போல பெரிய ஆள் ஆகிடுவோம்ன்னு தோணுச்சு
மொத்தத்தில் மீசையமுறுக்கு ரொம்ப எல்லாம் முறுக்கி விட்டுக்க முடியாது .
இப்படிக்கு
சினி கிறுக்கன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments