நிபுணன் அர்ஜுனின் 150வது படம் , டைரக்டர் அருண் வைத்தியநாதனுக்கு தமிழில் இது மூன்றாவது படம் ,இந்த மூன்று படங்களில் ஒரு ஒற்றுமை அது பிரசன்னா தான் .
இது த்ரில்லர் படம் , thrilling ஆகா இருக்கான்னு கேட்டா ? கொஞ்சம் இருக்கு , ஆனால் எங்கேயோ ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல ஒரு உணர்வு , படத்தின் கதை ஒரு தொடர் கொலைகாரனை அர்ஜுன் கண்டுபிடிக்கிறார் , யார் அந்த கொலைகாரன் ? எதுக்கு கொலை பண்ணுறான் என்பது கடைசியியல் சொல்லுறாங்க , படத்தின் ஒரு ப்ளஸ் கொலைகாரனாக நடிக்கும் நடிகன் யார் என்ற ஒரு எதிர்பார்ப்பு நமக்கு இருக்கு , கடைசியில் அவரை காட்டும் போது , அட நீயாப்பா? என்ற சொல்ல தோணுது , ஆனால் அவர் இறுதியில் சொல்லும் காரணம் கொஞ்சம் ஏற்க முடியவில்லை .சில விஷயங்கள் பேசுவது புரியல , அதை கொஞ்சம் புரியும் போல சொல்லி இருக்கலாம் , அதனால படத்தோட மனசு ஒட்டவில்லை குறிப்பாக ஒரு ஒருத்தரும் கொலை ஆகும் போது , அவரை பற்றி சொல்லுவது கொஞ்சம் புரியல கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கு , வித்தியாச வித்தியாசமாக மாஸ்க் போட்டு கொலை செய்வது , அந்த கொலையில் இருக்கும் புதிரை கண்டுபிடிக்க வைப்பது நல்லா இருக்கு , அதுபோல இறுதியில் வரும் ஹாஸ்பிடல் சீன் , மற்றும் அதன் பிறகு வரும் சேசிங் நல்லா இருந்தாலும் , படம் எங்கேயோ சம்பந்தம் இல்லாமல் போகும் படி ஒரு feel , சில இடங்கள் சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் தெளிவாக சொல்லி இருந்தா நல்லா reach ஆகி இருக்கும்
படத்தின் முதல் opening சீன் அர்ஜுனுக்கு செம்ம மாஸ் ஆகா பண்ணி இருக்காங்க , ஆனால் பாவம் மனுஷன் .அது அர்ஜுன் என்பதால் தியேட்டர்ல் எடுபடவில்லை, அவர் போட்டு வரும் டிரஸ் நல்லா இருக்கு , அதுவும் tie கொஞ்சம் நோட் பண்ணவைக்குது , வழக்கம் போல அவருக்கு போலீஸ் செட் ஆயிடுச்சி ,
வரலக்ஷ்மி பிரசன்ன படமா full ஆகா வராங்க , ரொம்ப முக்கியமான கேரக்டர், ஆனா படத்தில் நல்லா use பண்ணி இருக்காங்களான்னு பார்த்தா அது இல்ல , சும்மா படம் full ஆகா வாரங்க , வரலக்ஷ்மி படத்தின் முதல் காட்சியில் வரும் போது , அவங்க சிரிப்பு , body language எல்லாம் தரைதப்பட்டைல பார்ப்பது போலவே இருந்துச்சு , வரலக்ஷ்மி மேடம் கொஞ்சம் மாறுங்க ,அப்புறம் அவங்க உருவாக்கிய ஒரு குரூப் save சக்தி , அதை ஒரு நியூஸ் சேனல் கீழே போட்டு promote பன்னிட்டாங்க , வைபவ் ரொம்ப முக்கியமான கேரக்டர் ல வருவார் வருவார் நினைச்சேன், ஆனால் பல்ப் வாங்கியது பார்க்கும் நாம் தான் .
நவீனோட இசையில் கொலை சம்பவங்கள் காட்டும் போது நல்லா பண்ணி இருக்கார் , மேலும் பாடல்கள் மனசில் நிற்கவில்லை .
மொத்தத்தில் நிபுணன் மிகவும் சிறந்த நிபுணனாக வரவேண்டியது ஆனால் அது இல்லை .
குறிப்பு : இந்த படத்தின் டைரக்டர் முன்னாடி என்னோட கம்பெனியில் வேலை செய்தார் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
மீசையமுறுக்கு - கதை புதுசுஇல்ல , திரைக்கதை புதுசு இல்லை , எதுவும் சுவாரசியமா கொடுக்கவில்லை , சின்ன திரைமுகங்கள் பெரியத்திரையில் , அட டிவி முகங்கள் இல்லங்க எல்லாம் youtubeல் வந்தவங்க, என்னை பொறுத்தவரை இந்த படம் பலபேருக்கு பிடிச்சி இருக்கன்னு சொன்னா அதுக்கு காரணம் ஆதி மட்டும் தான் , பிறகு Rj .விக்னேஷ்க்கு இருக்கும் face value மட்டும் தான்
கதை ஆதியோட உண்மை சம்பவங்கள் மற்றும் அதன் கூட கொஞ்சம் கற்பனை கலந்து கொடுத்து இருக்காங்க , படத்தோட ப்ளஸ் ஒரு வரி கருவாக கொடுத்தது தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையமுறுக்கு, என்னை பொறுத்தவரை இந்த படம் ஆஹா ஓஹோ இல்லை , அதே நேரத்தில் இந்த படம் ஒரு மொக்கை படமும் இல்லை , இது ஒரு average படம் மட்டும் தான், ஆனால் பல youtube reviewல் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளி இருக்காங்க அது ஏன்னா படத்தில் நடித்து எடுத்து இருப்பவங்க அவர்களை சார்ந்தவர்கள் அவ்ளோதான் , அதனால இந்த படத்தை promote பண்ணுகிறாங்க, இது ஒருவகை promotion strategy.
படத்தில் ப்ளஸ் காமெடி என்றாலும் , Rj .விக்னேஷ் கொடுக்கும் பல கவுண்டர் சிரிக்க வைத்தாலும் , பல இடங்களில் கொஞ்சம் ஓவர் போல இருக்கு , அது சிரிப்பை கொடுக்கவில்லை, மேலும் ஹாஸ்டல் காமெடி , plan a ,b ,c காமெடி எல்லாம் கொஞ்சம் மொக்கை தான் ,பிறகு மற்றவர்கள் பண்ணும் காமெடி மனசில் நிற்கவில்லை ,ஆனால் அதுக்கு போயிட்டு ஏன் மக்கள் பலர் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கன்னு தெரியல , ஆதி மற்றும் Rj .விக்னேஷ் கூட்டணி பள்ளி படிக்கும் போது வரும் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது 3 படத்தில் தனுஷும் சிவகார்த்திகேயனும் பண்ணுவது போல இருந்திச்சி .
மனிதனுக்கு எப்பொழுதும் ஒரு mind set இருக்கும் அவங்களுக்கு பிடிச்சிவங்க என்ன பண்ணாலும் பிடிக்கும் , அது போல தான் இந்த மீசையமுறுக்கு , ஆதி மற்றும் Rj .விக்னேஷ் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த படம் இந்த அளவுக்கு reach ஆகி இருக்காது , இப்போ எப்படி சிவகார்த்தியகேயன் மொக்கை காமெடி பண்ணாலும் சில மக்கள் ரசிக்கிறாங்களோ அது போல தான் இந்த படமும் , இப்போ இருக்கற ட்ரெண்ட் பல காலேஜ் படிக்கறவங்களுக்கு ஆதியும் Rj .விக்னேஷ்ம் பிடிக்கும் , அதனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்த படமாக அமையும் , மேலும் படத்தில் engineering காலேஜ் பற்றி , BE படிக்கறது worth இல்ல என்கிற இன்றைய ட்ரெண்ட் சொன்னதால் பிடிக்கும் . ஹீரோயின் முகமும் கதாபாத்திரமும் படத்தில் கொஞ்சம் கூட ஒட்டவில்லை , ஆதி காதல் அந்த அளவுக்கு எடுபடவில்லை
ஆதி ஏற்கனேவே கொடுத்த ஹிட் பாடல்கள் படத்தில் இருப்பதால் அது ஒரு ப்ளஸ் , இரண்டாவது பாதியில் சாரா காமெடி நல்லா இருந்துச்சி , அது போல ஒரு பெரிய முடி வச்சிக்கிட்டு வரும் fenny படத்தில் அவரை நல்லா நோட் பண்ணவச்சி இருக்கார் , முக்கியமாக விவேக் ஆரம்பத்தில் அவர் தமிழுக்கு ஆதரவாக பேசும் வசனங்கள் செம்ம
என்னாடா எல்லாரும் இந்த படத்தை ஆஹா ஓஹோ புகழுறாங்க , இவன் என்னடா நெகடிவ் ஆகா எழுதி இருக்கானேன்னு நிறைய பேரு என்னை திட்ட போறாங்க , அதை பற்றி கவலை இல்லை , மனதில் பட்டத்தை தான் எழுதுவான் இந்த சினி கிறுக்கன் .
ஆனால் படம் முடியும் போது ஒரு விஷயம் தோணுச்சி , ச்சே நாமும் நம்ம எழுதுகிற review ஒரு நாள் நல்ல publicity ஆகி படத்தில் ஆதி பெரிய ஆள் ஆகியது போல பெரிய ஆள் ஆகிடுவோம்ன்னு தோணுச்சு
மொத்தத்தில் மீசையமுறுக்கு ரொம்ப எல்லாம் முறுக்கி விட்டுக்க முடியாது .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
ஒரு சில வேலைகளால் கொஞ்சம் தாமதமாக ஒரு நாள் கழித்து விக்ரம் வேதா விமர்சனம் உங்களுக்காக இதோ
முதல் வரியிலே, அதுவும் ஒரே வரியிலே சொல்லவேண்டும்ன்னா இந்த படம் நிச்சயம் எல்லா தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் படம் , நிச்சயமா சிறந்த திரைக்கதைக்கு பல விருதுகள் வாங்கும் படம் , படத்தின் கதையின்னு பார்த்தா ஒரு சாதாரண gangster படம் , ஆனால் அதை சொன்னவிதம் தான் வேற லெவெல்.
படம் ஆரம்பத்தில் அட எப்பொழுதும் போல போலீஸ் திருடன் கேரக்டர் படம் போல நினைச்சா அது தப்பு , விஜய்சேதுபதி வந்த பிறகு படம் ஒரு தீபாவளி போல ஒரு கொண்டாட்டம் தான் , விஜய்சேதுபதியும் , மாதவனும் சந்திக்கும் முதல் விசாரணை காட்சி வசனங்கள் இரண்டு பேரும் மோதுவது செம்ம , அதுக்கு அப்பறம் வரும் காட்சிகள் எல்லாம் ஒரு விடுகதை போல போய்கிட்டு இருக்கு , விஜய்சேதுபதி ஒரு ஒரு தடவை மாதவனை சந்திக்கும் போதும் ஒரு ஒரு கதை சொல்லி அதில் ஒரு clue கொடுத்துட்டு போவதும் , அதை அவர் உடைச்சி அதன் மூலமாக அவரோட கேஸை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போவதும் செம்ம .இது பார்க்க பார்க்க அட அட போடவச்சிக்கிட்டே இருக்கு , இரண்டாவது பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவளோதான் முடிச்சிடுச்சி போல நினைக்கும் போது , திரும்பவும் ஒரு கதை உண்டாக்கி அதிலிருந்து ஒரு clue சென்று கொஞ்சம் கூட எங்கேயும் எதிர்பார்க்காம பல முடிவுகளை, படம் முடியப்போகும் வரை வைத்து கொண்டு ,முடிவுகளை நம்மகே கொடுத்து இருக்காங்க , அட என்னடா ஒன்னும் புரியலையா ? சொன்ன சுவாரசியம் போய்டும் படம் போயிட்டு பாருங்க .எனக்கு பிடிச்ச clue பரோட்டாவும் , நல்லிக்கறியும் தான் , படம் பாருங்க புரியும்
படத்தில் ஒரு ஒரு கேரக்ட்டரும் மனசுல நிக்குது , எல்லா கேரக்டர்க்கும் சரியாக முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்க , மாதவன் , விஜய்சேதுபதி மட்டும் இல்ல , படத்தில் வரும் கேரக்டர் மாதவனோட மனைவி , மற்றும் புள்ளி , சந்திரா , ரவி, சேட்டா , half boil , bullet chain packet ,மேலும் அந்த போலீஸ் gang , இப்படி எல்லாமே மனுசுல பதியுது , எதை விடுறது எதை எழுதுவதுன்னு தெரியல , படத்தில் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு , சிலது நமக்கு justification கொடுத்துட்டாங்க , குறிப்பா புள்ளி கேரக்டர்க்கு ஜோடியா வரும் வரலக்ஷ்மிக்கு ரொம்ப வயசானவங்களா இருப்பதால் புள்ளியை விட இரண்டு வயசு பெரியவங்க சொல்லி சமாளிச்சிட்டாங்க , என்னடா மாதவன் மற்றும் அவங்க gang பார்க்க போலீஸ்காரங்க போல இல்லையே தாடியும் , கேடியுமா இருக்காங்களே நினைக்கும் போது , அதுக்கும் ஒரு வசனம் சொல்லி சமாளிச்சிட்டாங்க .
படத்தில் நடிச்ச பலர் டைரக்டர் ரஞ்சித்தோட படத்தில் நடிச்சவங்க , படமும் வடசென்னையில் நடப்பதால், எனக்கு தீடிர்ன்னு பா.ரஞ்சித்தோட படமோ தோணுச்சு .அதுபோல விஜய்சேதுபதி முதல் drug deal பண்ணுவது எனக்கு நாயகன் படத்தை ஞாபகம் படுத்துடுச்சி .
மாதவன் என்ன ஸ்டைல் , என்ன body language மனுஷன் செம்ம , முதல் காட்சியிலே எல்லோரையும் கலாய்ப்பதும் , சில இடங்களில் விஜய்சேதுபதியை சமாளிக்கமுடியாமல் தடுமாறும் போதும் , தன்னோட மனைவியோட சண்டை போடுவதும் , பிறகு சமாதானம் ஆவதும் நடிப்பில் சூப்பர் , இறுதி சுற்று அவருக்கு மீண்டும் தமிழ் சினிமாவுல ஒரு சுற்று ஆரம்பித்தது , இந்த விக்ரம் வேத வேறகட்ட சுற்றுக்கு போயிட்டாரு
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் அது விஜய்சேதுபதி தான் , அவரோட opening சீன் ultimate , அவருக்கு இதுவரை இப்படி ஒரு மாஸ் opening சீன் எந்த படத்திலும் வந்தது இல்ல , எனக்கு ரஜினி , அஜித்க்கு அப்புறம் ஒரு opening சீன் மயிர்க்கூச்சரியும்(உங்க மொழியில் goose bump) போல இருந்ததுன்னா ,அது விஜய்சேதுபதிக்கு இந்த படத்தில் தான் , அதுக்கு ரொம்ப முக்கிய காரணம் அவருக்கு வச்ச ஷாட்ஸ் , சரியாக பெருந்திய மாஸ் Bgm தான், அதுமட்டுமா கிளைமஸ் காட்சியில் சண்டை போடும் போது செய்யும் காமெடிகளும் அவருக்கு கைவந்தக்கலை , தியேட்டர் விசில் பறக்குது .இந்த வருஷம் அவருக்கு கவண் படத்திற்கு பிறகு சொல்லி அடிக்கும் சிக்ஸர் .
இந்த படத்தின் முக்கியமான ஒரு உயிர்ன்னா அது சாமுடைய இசை தான் , அந்த ஒரு Bgm தன தன தனன்னா ultimate , நிச்சயமா அது ஒரு ட்ரெண்டிங் Bgm, படத்தில் அதிகம் பாட்டு சேர்க்கமா தேவையான பாட்டு சேர்த்து இருக்காங்க அதுவும் நல்லா இருக்கு , ட்ஸ்க்கு ட்ஸ்க்கு பாட்டு நல்லா ஆட்டம் போடவைக்குது . மனசுக்கு இதமா நெஞ்சாதியே நெஞ்சாதியே பாட்டும் அருமை , படம் முழுக்க Bgm தெறிக்க விட்டு இருக்கார் .
இப்படி ஒரு வித்தியாசமான திரைக்கதை உருவாக்கி படத்தை இயக்கிய புஷ்கர் காயத்திற்கு ஒரு பெரிய சலுயூட்டு
மொத்தத்தில் விக்ரம் வேதா வெற்றியும் விருதுகளும்
இப்படிக்கு
சினி கிறுக்கன்