வெள்ளி, 9 ஜூன், 2017

Sathriyan - சத்ரியன்


சத்ரியன் இது விஜயகாந்த் நடிச்ச பழய படம் ரீமேக்ன்னு நினைக்காதீங்க , இந்த படத்தோட கதை என்னா கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவு , அப்பறம் கத்திய எடுத்தவன் காதலால் தானும் திருந்தி மற்றவர்களையும் திருத்தி நல்லவனாக வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஹீரோவோட செம்ம கருத்து உள்ள படம் 

விக்ரம் பிரபுவும் அவர் நண்பனும் இந்த திருச்சியை யார் கட்டி ஆளுவது என்ற போட்டி ,ஆனால் ரெண்டு பெரும் வேற வேற gangல வேலை செய்யறாங்க , யார் யாரை போட்டு தள்ளுனாக , யார் திருச்சி கெத்து ஆகுறாக என்பது தான் கதை , இதுக்கு நடுவுல காதல் கத்திரிக்காய் எல்லாம் வேற  இருக்கு.

விக்ரம் பிரபு ரௌடிய கேரக்டர் அவருக்கு செட் ஆகுது ஏன்னா அவரோட height weight அப்படி ,ஆனா மனுஷன் பேசி சாவடிக்கிறாரு , நான் யாரு தெரியுமா என்ன பார்த்தா அவன் பயப்படுவான் , இவன் பயப்படுவான் சொல்லி சொல்லி நம்மளை பயப்படவைக்கிறார் , எப்பா சாமி எப்போடா பேசி முடிப்பீங்க கேட்க தோணுது ,அதுலயும் அவர் ஒரு bridge மேல சண்டை போடுவார் ஒரு 100 பேரை அடிச்சி போடுவார் முடியலடா சாமி , அப்படியே ராஜமௌலி மகதீரா(மாவீரன்) படம் ஞாபகம் வருது , அவரை அடிச்சி தூக்கி தண்ணியில போடுவாங்க மீண்டும் உயிரோட வந்து அப்புறம் என்ன செய்வாருன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும் இல்ல .

மஞ்சிமா மோகன் ah இல்ல அட்வைஸ் மோகன் ah தெரியல , இவங்களும் பேசி பேசி கொன்னுட்டாங்க , அதுவும் அவங்க காதல் பண்ணறதுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க பாருங்க எப்பா டேய் ஏன்டா தோணுது , காலேஜ் வரைக்கும் பாதுகாப்பா வந்தவன் வாழ்க்கை முழுக்க பாதுக்காக்க வர மாட்டானா கேட்க்கும் போது அங்க நிக்குது அந்த காதலோடு ஆழம் அப்படியே , இந்த காதல் போதாதுன்னு இன்னொரு காதல்  விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் கவின் அவருக்கும் ஐஸ்வர்யா டட்டா கூட வரும் காதல் , கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு காதல் கதை , படத்தில ரௌடிங்க தான் அடிச்சிக்கிறாங்கன்னு பார்த்தா , இந்த ரெண்டு பேரும் மாற்றி மாற்றி அடிச்சிக்கிறாங்க , இப்படி காதல் கதையை எங்கயாவது பார்த்து இருக்கறீங்களா யுவர் ஆனார் கடுப்பு ஏத்துறாங்க மை லார்ட் . கவின் தளபதி டா , சூர்யா டா , தேவா டா நட்பு டா ன்னு நட்புக்கு பாடம் எடுத்து நட்புக்கு இலக்கனமா வாழுறார் அவர் .


விக்ரம் பிரபு அவரோட பங்குக்கு படம் முடியும் போது பக்கம் பக்கமா வசனம் பேசி அவரோட தலைவரை பேசி திருத்துகிறார்   அஙக தான் படத்தின் முக்கியமான கதைக்கரு உட்காருகிறது ,

ஸ்.ஆர் .பிரபாகரனுக்கு பஸ் செண்டிமெண்ட் அதிகம் போல , சுந்தரபாண்டியன் படத்தில பஸ்ல போவது , சசிகுமார் ஓடிவந்து ஏறுவது , லட்சுமிமேனன் பார்ப்பது போல வரும் , அதே போல இதுலயும் இவர் வச்சி இருக்கார் , விக்ரம்பிரபு பஸ்ல ஏறுவது ரெண்டு பேரும் பார்ப்பது , அவரோட முந்தைய படங்கள் சுந்தரபாண்டியன் ,  இது கதிர்வேலன் காதல் போல இருக்குமான்னு கேட்ட ரொம்ப கஷ்டம் தான் , அப்போ கொடுத்த  120ரூபாய்க்கு worth ah கேட்டா அதை என் வயலா சொல்லமாட்டேன் .

மொத்தத்தில் சத்ரியன் பார்ப்பவர்களுக்கு சத்ரியவெறியர்கள் ஆவார்கள் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

1 கருத்து:

  1. Hahaha reviewing all movies tough means watching all movies patiently is much mire tougher!! Shyam ji review pottu antha 120₹ value eduthteenga :):). -- KP

    பதிலளிநீக்கு

Comments