மீண்டும் ஒரு முறை நம்ம தமிழ் சினிமாவுல ஒரு புது முயற்சி , துருவங்கள் 16, மாநகரம், லென்ஸ் போல ஒரு சிறிய படம் ஆனால் ஒரு கிராமத்து கதைக்களம் , ரொம்ப நாள் கழித்து உண்மையான மண்வாசனை படம் , ஏன்னா சமீபகாலமா ஒரே பேய் படம் தான் வந்துகிட்டு இருக்கு , அதை தவிர வரும் சில படங்களும் சிட்டியில் நடப்பதாக தான் வரும், அப்படியும் சில கிராமத்து படங்கள் வந்தாலும் , அதில் காதல் , கொலை , ஜாதி சண்டை அதுபோல கதைக்களம் கொண்டதாக தான் வரும் , இப்படி எதுவும் இல்லமால் ஒரு உண்மையான , இயல்பாக தரமாக ,குடும்பத்தோடு பார்க்கும்படியாக வந்து இருக்கும் இந்த படத்திற்கு ஒரு பெரிய கைத்தட்டு .
டைரக்டர் சுரேஷ் சங்கையா காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனோட assistantன்னு கேள்விப்படும் போதே இந்த படம் நிச்சயமா நம்பி போகலாம்ன்னு தான் தோணுச்சு , அது போல படமும் நல்லாவே இருந்துச்சி .
படம் டைட்டில் போடும் போதே ஒரு வித்தியாசம் , முதலில் ஹீரோ பெயர் போடாம , ஹீரோயின் பெயர் போட்டு இருக்காங்க , அப்படியே டைட்டில் பாட்டில் நம் ஊரு சிறு தெய்வங்கள் , மற்றும் காவல் தெய்வங்கள் காட்டி படத்தோட கதையை பாட்டிலே சொல்லியிருப்பது அருமை .
படத்தின் ஆரம்பம் காட்சி ஒரு ஆட்டின் பார்வையிலே ஆரம்பிப்பது நல்லா இருந்திச்சி, அப்படியே ஒரு ஒரு கேரக்டர் பற்றி காட்டும் போதும் சரி , அவங்க எல்லோரும் லாரியில் காலையில் எழுந்து கிளம்பும் போதும் சரி , அப்படியே நாமும் அந்த பயணத்தில் பயணிக்கிற ஒரு அனுபவம் , அந்த லாரி கிளம்பும் போது எல்லோரும் ஒரு காரணத்துக்காக இறங்க , அதே காரணத்துக்காக லாரியில் இருக்கும் அந்த ஆடு, அந்த செயலை லாரியிலே செய்வதும் செம்ம காமெடி , அது என்ன செயல்ன்னு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க
படத்தில காமெடின்னு தனியா புகுத்தாம , படத்தின் கதையை ஒட்டியே ஒரு ஒரு கேரக்டர் பண்ணும் செயலே காமெடியாக வச்சி இருப்பது செம்ம .படத்தில நடிச்ச ஒரு ஒருத்தரை பற்றி சொல்லணும்ன்ன கண்டிப்பா இந்த பதிவு போதாது , ஏன்னா படத்தில அந்த அளவுக்கு நிறைய பேரு இருக்காங்க , பெயர் அளவில் படத்தின் ஹீரோ விதார்த் என்றாலும் இந்த படத்தில் நடிச்ச எல்லோரும் ஹீரோ தான் அந்த அளவுக்கு எல்லோருக்கும் சமமாக பங்கு இருக்கு, கொண்டி , சேவல் , ஊருமுழுங்கி இன்னும் பல இப்படி வித்தியாசமான கிராமத்து பெயர்கள் இந்த படத்தில் இருக்கு .யாருப்பா அவர் பாரதிராஜாவுக்கு xerox போட்டா மாதிரி இருக்கார் ? ஹீரோயின் ப்ரவீனா சரியான தேர்வு , அவங்க சாதாரண பெண்ணாக சரியாக பொருந்தி இருக்காங்க.
படத்தின் ஒரு மிக பெரிய ப்ளஸ், படம் அப்படியே யதார்த்தமாக போகுது , தேவை இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் பாட்டோ , காதல் காட்சியோ சேர்க்காமல் , கதை ஓட்டம் எங்கேயும் சிதறவிடாமல் நம்மை படத்தோட ஒன்றவைச்சிடுச்சி ,படத்தின் கடைசி காட்சிகள் , முடிவுகள் கொஞ்சம் அப்படியே ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் போல இருந்துச்சி ,இருந்தாலும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுத்த படம் என்பதால் அதை நாம் அப்படி ஏற்க தான் வேண்டும் ,படம் முடிச்சி வரும் போது நல்ல தரமான மனசுக்கு ரொம்ப நிறைவான ஒரு படம் பார்த்து வந்த feel .
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இந்த படத்திற்கு ஏன் ஒரு கிடாயின் கருணை மனுன்னு பெயர் வச்சாங்க ? ஒருவேளை அந்த கிடா பலியிடுவதில் இருந்து தப்பிச்சதால இந்த பெயரோ ? ஒருவேளை அந்த கிடா முனியாண்டி சாமி கிட்ட வேண்டி இருக்குமோ ? அதான் ஒரு கிடாயின் கருணை மனுவோ ?
அரும்பாடுபட்டு எடுத்த இந்த படத்தை ,அரும்பாடுபட்டாவது இந்த படத்தை தியேட்டரில் போயிட்டு பாருங்க , ஏன்னா shows கம்மியா இருக்கு , தியேட்டர் owners அரும்பாடுபட்டாவது இந்த படத்தின் shows அதிகபடுத்துங்க , ஏன் நிறைய தடவ அரும்பாடுபட்டு பயன்படுத்துறேன் தெரியனுமா ? படம் பாருங்க அது தெரியும் .
மொத்தத்தில் ஒரு கிடாயின் கருணை மனு நிச்சயமாக மக்கள் மனதில் ஏற்றுக்கொள்ளும் மனு .
இப்படிக்கு
சினி கிறுக்கன்

தரமான விமர்சனம்
பதிலளிநீக்கு