வெள்ளி, 22 ஜூன், 2018

Tik Tik Tik - டிக் டிக் டிக்

நண்பர்கள் எல்லோருக்கும் சினிகருகனின் மனமார்ந்த வணக்கமும் நன்றியும் , ஏன் நன்றி சொல்லுறேன் கடைசியா சொல்லுறேன்.

டிக் டிக் டிக் இந்த படம் ட்ரைலர் பார்க்கும் பொழுதே இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாமல் பார்த்தே ஆகணும் பல பேருக்கு தோன்றியது, இந்த மாதிரி படங்கள்  படங்கள் ட்ரைலர் மட்டும் காட்சிகள் நல்லா இருக்கும் , படத்தில் பெருசா இருக்காது , ஆனால் இந்த படம் ட்ரைலர் மட்டும் இல்ல படமும் பார்ப்பதற்கு நல்லா இருக்கு , 

படத்தின் கதை என்னவென்று ட்ரைலர் பார்த்தவர்களுக்கு தெரியும், மேலும் இந்த கதை போல ஒரு இங்கிலிஷ் படம் ஒன்று பெயர் மறந்துட்டேன் ,  ஆனால் தமிழ் சினிமாவிற்கு இது ஒரு மைல் கல் படம்,படத்தில் லாஜிக் தவிர வேற எதற்கும் குறை சொல்ல முடியாது 

படத்தின் ப்ளஸ்களை முதலில் சொல்லிடறேன் 

படத்தின் பெரிய ப்ளஸ் visual & sound effects  கிராபிக்ஸ் , நம்ம தமிழ் சினிமா பட்ஜெட்க்கு ரொம்ப தரமா செய்து இருக்காங்க, கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாது,  பல  பெரிய பட்ஜெட் படங்களில் கூட சில பல இடங்களில் அந்த காட்சி  கிராபிக்ஸ் பயன்படுத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சிடும் , இந்த  படம் முக்கால்வாசி க்ராபிக்ஸ் தான், ஆனால் கொஞ்சம் கூட அது கிராபிக்ஸ் என்று எங்கேயும்  சொல்ல முடியாது , நாமே அந்த விண்வெளியில் பயணிப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , அதுவும் இல்லாத ஒன்று இருப்பது போல உணர்ந்து நடிப்பது கொஞ்சம் கஷ்டம் அதை ஜெயம்ரவி நல்லா செஞ்சி இருக்கார் , குறிப்பாக அந்த விண்வெளியில் உயிருக்கு பயந்து வெளியே பறப்பது, மேலும் படத்தின் ப்ளஸ் என்னவென்று பார்த்தா படம் bore அடிக்காமல் போகுது , தேவையில்லாமல் காதல் பாட்டு அது இதுன்னு எதுவும் தேவையில்லாமல் வைக்காமல், படம் தெளிவா ஆரம்பிக்கும் பொழுதே கதைக்குள்ள சென்று வேற எங்கேயும் வெளியே போகாமல் படம் போகுது .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் இம்மான் bgm  மற்றும் பாடல்கள் , ரெண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட் தான் , அதில் சித்ஸ்ரீராம் குரலில் குறும்பா பாடல் செம்ம , ஜெயம்ரவியின் உண்மையான பையன் இந்த படத்தில் நடிப்பதால் அந்த பாடலில் வரும் குழந்தைப்பருவ காட்சிகள் எல்லாம் உண்மையான படங்களை வைத்து இருக்காங்க 

ஜெயம்ரவிக்கு மீண்டும் ஒரு வித்தியாசமான படம் இது , நிச்சயமா இந்த படம் மொக்க பிளாப் ஆகாது , நல்ல பெயர் தரும், 
நிவேதா பெத்துராஜ் முதல் காட்சி காட்டும் பொழுதே தியேட்டரில் கை தட்டு பறக்குது , அது ஏன்னா trailerல்  ஒரு காட்சி அப்படி இருக்கும் ஆனால் அந்த காட்சி படத்தில் இல்ல .மேலும் அவங்க ரொம்ப விறைப்பாங்க பேசுவது ரொம்ப செயற்கையாக இருக்கு .

சரி இப்போ இந்த படத்தின் மைனஸ் பற்றி பார்க்கலாம் 
இந்த மாதிரி படத்தில் லாஜிக் என்பது கொஞ்சம் எதிர்பார்க்க கூடாது , இதுவே இங்கிலிஷ் படத்தில வந்தா வாவ் படம் சூப்பர் சொல்லுவோம், ஆனால் நம்ம ஊரில் வந்தா கலாய்ப்பாங்க , அப்படி தான் மிருதன் படத்தை சொன்னாங்க , ஆனால் இந்த படத்தில் லாஜிக் அநியாயத்துக்கு அடிவாங்கி இருக்கு,என்ன எல்லாம்  லிஸ்ட் போட்டு சொல்லுறேன் 
1, ஒரு சாதாரணமான ஆட்கள் விண்வெளிக்கு போறதுக்கு வெறும் ஆறு நாட்களில் training கொடுத்து விண்வெளிக்கு அனுப்புவது நம்ப முடியல , ஏதோ 6 மாசம் , atleast 60 நாட்களாவது காட்டி இருக்க வேண்டாமா ? ஒரு மனசாட்சி வேண்டமா டா ?
2.ஜெயம்ரவி கூட ரமேஷ் திலக் , அர்ஜுனனின் ரெண்டு போறாங்க , ரமேஷ் திலக் கூட accept பண்ணிக்கலாம்  ஆனால் அர்ஜுனன் விண்வெளிக்கு போவது அவர்க்கு  training எடுப்பது எல்லாம் கொஞ்சம் over, 
3.மேல சொன்ன ரெண்டு லாஜிக் காமெடி எல்லாம் விட ஒரு ஸ்பெஷல் item டைரக்டர் படத்துல வச்சி இருக்கார் , ராக்கெட் கிளம்பி 3 மணி நேரத்தில நிலாவில் அது லேண்ட் ஆகுது அடேய்ஜெயம்ரவி தூக்கிகிட்டு  ஏதோ flight ல டெல்லி , மும்பை போனா மாதிரி சொல்லுறீங்களேடா 
4. என்ன தான் விண்வெளியில் எடை குறைவாக இருந்தாலும் ,200 டன் nuclear  weapon அசால்ட்டாக  தூக்கிகிட்டு போகிறார்
5. ராக்கெட் கிளம்பும் போதே யாரு முக்கிய வில்லன் என்று தெரிந்து விடுகிறது 6. அப்புறம் பல ட்விஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் பெருசா தெரில , கண்ணாடி வச்சி மறைப்பது , boxக்குள் திலக் போவது என்பது எல்லாம் இது எல்லாம் இபப்டி தான் நடக்கும் என்று clear ஆகா தெரிகிறது .இப்படி சில பல லாஜிக் மிஸ்ஸிங் நிறைய இருக்கு 

இப்படி லாஜிக் மிஸ்ஸிங் பல இருந்தாலும் , ஒரு வித்தியாசமான முயற்சிக்காக இந்த படத்தை நிச்சயமா தியேட்டர் சென்று பார்க்கலாம்.

மொத்தத்தில் டிக் டிக் டிக் லாஜிக் தவிர எல்லாத்துக்கும் டிக் அடிக்கலாம் .

இப்படிக்கு 
கிறுக்கன் 


சிறிது நாட்களாக சில பல வேலை காரணமாக பல படங்கள் முதல் அல்லது ரெண்டாவது நாட்களில்   பார்க்க முடியவில்லை , மேலும் பார்த்த படங்கள் விமர்சனம் எழுத நேரம் அமையவில்லை, மேலும் எழுத content கிடைக்கமாட்டேங்குது , காலா படம்  ரெண்டு முறை விமர்சனம்  எழுதியும் பெருசா views போகவும் இல்லை , ஆகவே  இனிவரும் காலங்களில் கிறுக்கனின் கிறுக்கல்  குறையலாம் அல்லது முடியலாம்.
இதுவரை ஆதரவு அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் , இப்போ புரியுதா மேலே முதல் வரியில் ஏன்  நன்றி சொன்னேன் என்று.

கிறுக்கனின் கிறுக்கல்கள் முற்றும் .


சனி, 9 ஜூன், 2018

Kaala-2 - காலா 2 - விமர்சனம்


மீண்டும் ஒரு முறை சினிகிறுக்கனின் வணக்கம் , என்னடா இது காலா-2 விமர்சனமா? என்று கேட்பது தெரியும் , இது காலா-2 வின் விமர்சனம் இல்ல , இது காலா படத்திற்கு நான் தரும் ரெண்டாவது விமர்சனம் .வாரத்துக்கு ரெண்டு மூணு படம் விமர்சனம் பண்ணி இவன் சாவடிப்பான் , இப்போ என்னடா ஒரே படத்தை ரெண்டு தடவை விமர்சனம் பண்ணுறானே கேட்பதும் தெரியது .சரி ஏன் இந்த படத்தை ரெண்டு தடவை விமர்சனம் செய்ய வேண்டும் ? இருங்க சொல்லுறேன்

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் ரஜினி , கமல் ,விஜய், அஜித் மற்றும் பல பெரிய அளவு படங்கள்  எல்லாம் எனக்கு சத்யம் main screenல் பார்த்தல்  தான் எனக்கு ஒரு திருப்தி , முதல் நாள் எனக்கு palazzoவில் தான் கிடைச்சது , அதனால இரண்டவாது தடவை பார்த்தேன் , அந்த சவுண்ட் effect , screen picture clarity வேற  எங்கேயும் கிடைக்காது ,சரி முதல் தடவை நான் பார்க்கும் பொழுது ஒரு சாதாரணமான ரசிகனாக பார்த்தது , இந்த முறை பார்க்கும் பொழுது பல விஷயங்களை என்னால் சற்று உற்று பார்க்கக் வைத்தது .அப்படி நான் பார்த்த விஷயங்களை உங்களிடம் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம் தான் இந்த post  போடுகிறேன் . இங்கே பதிவு செய்யும் எல்லாம் என்னோட தனிப்பட்ட கருத்துகளும் , மற்றும் என்னோட யூகங்கள்.

முதல் கேள்வி ஏன் ரஜினியை ராவணனாக இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டது ?
நம்மை பொறுத்தவரை இராவணன் ஒரு வில்லன் , ராமன் தான் ஹீரோ, இங்க ஏன் ரஞ்சித் ரஜினியை ராவணனாக காட்டினார் ? என்ற கேள்வி இருக்கு .

முதலில் ராவணன் ஒரு தமிழன் , ராமன்  ஒரு ஆரியன் , ஒருவேளை அதனால் தான் ரஜினியை ராவணனாக காட்டினாரா  ரஞ்சித் ? ஏன்னா இங்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் , போலி போராட்டக்காரர்களுக்கும்  ஆரியர்களை தான் பிடிக்காதே , ஏற்கனவே ரஜினியை தமிழர் இல்லை சொல்லுபவர்களுக்கு இப்படி ஒரு கேரக்டர் ரெடி செய்தார்களோ ?மேலும் ராமாயணத்துக்கும் இந்த படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கும்  என்று தோணுது , ராமாயணத்தில் ராவணனின் முக்கியமான மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன் என்பவன் ராமனுக்கு  எதிராக போர் புரிந்து இறந்து போவான் , அதுபோல இங்கே ரஜினியின் மகனாக வரும் திலீபன்(செல்வா)  இறந்து விடுகிறான்.

ராவணனுக்கு இரண்டு மனைவி , அதுபோல இங்கு ரஜினிக்கு இரண்டு மனைவியாக காட்டாமல் இரண்டு காதல் உறவாக காட்டி இருக்கார் , மேலும் ராவணன் சீதையை  தொட்டதில்லை , பிறர் மனைவி தீண்டாதவன் என்று கேள்விப்பட்டு இருக்கோம் , அந்த நல்ல குணத்தையும் காலா மற்றும் சரினா உறவின்  மூலமாக இங்கு காட்டியிருக்கிறார் .

மேலும் ராமாயணம் சூர்ப்பனகை அடிபட்டதால் தான் ஆரம்பிக்கும்,   அது போல முதல் காட்சியே, ஒரு பெண் அடிபடுவாங்க அந்த பெண்ணோட பையன் வந்து காலவை வந்து கூப்பிடுவான், இரண்டத்திலும் பெண்ணால் தான் கதை ஆரம்பிக்குது .

வாலி என்கிற ஒரு கேரக்டர் இராமாயணத்தில் வருவார் , அவர் சுக்ரீவனின் தம்பி , ஆனால் ராவணனின் பழய நண்பன்(இதற்க்கு முன்னாடி நான் வாலி ராமனின் நண்பன் போட்டு இருந்தேன் என்னோட நண்பர் ஒருவர் இந்த கருத்தை சொல்லியதால் இப்பொழுது மாற்றுவிட்டேன் நன்றி நண்பரே ) அது போல இங்கே சமுத்திரக்கனி கேரக்டர் வாலியப்பன் என்ற பெயரில் வருகிறார் ,  வாலியப்பன் இங்கு இராவணன் என்கிற  காலா பக்கம் இருக்கிறார் .அங்கு அனுமனால் இலங்கை தீயிட்டு கொளுத்தப்பட்டு எரிகிறது , அதுபோல தாராவி  தீயிட்டு கொளுத்தப்படுகிற காட்சி இங்கு இருக்கு .

இந்த படம் இதிகாசமான ராமாயணத்தை மற்றும் இலங்கையையும் மட்டும் தொடர்புபடுத்தியது போல இல்லாமல் இலங்கை இந்தியா அரசியலையும் தொடர்பு  இருக்குமோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு .ஆமாங்க ரஜினியை இறுதி காட்சியில் விடுதலை புலிகள் பிரபாகரனோடு தொடர்பு படுத்தியது போல ஒரு உணர்வு , படத்தின் இறுதி காட்சியில் காலா  இறந்தது போல காட்டினாலும் மக்கள் காலா இன்னும் இறக்கவில்லை இன்னும் உயிரோடு தான் இருக்கார் சொல்லுவது போல ஒரு காட்சி இருக்கும் , அது போல தான் இலங்கை தமிழர்கள் இன்னும் பிரபரகன் இறக்கவில்லை மீண்டும் வாருவார் என்ற நம்பிக்கையில் இருப்பது போல இந்த காட்சி அமைந்து உள்ளது என்பது போல இருக்கு , மேலும் ரஜினி சொல்லுவார் இந்த காலா இறந்தாலும் இங்கே இருக்குறவங்க எல்லாம் காலா தான் சொல்லுவார் , என்னக்கு என்னவோ இறுதி காட்சிகள் எல்லாம் பிரபாகரனையும் , ஒரு காங்கிரஸ் தலைவரையும்  குறிப்பது போல இருந்திச்சி .

மேலும் சில youtube விமர்சனத்தில் இந்த படத்தில் அம்பேத்கார் பற்றியும் அவரோட reference இருக்கு சொன்னாங்க ஆனால் அவங்க எது எல்லாம் சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியல , ஆனால் நான் கவனித்த விஷயம் ஒன்று படத்தின் இறுதி கட்டத்தில் , ரஜினி போராட்டம் என்று அறிவிக்கும்  இடம், அங்கே தான் புரட்சி ஆரம்பிக்கும் ,  பின்னாடி பார்த்தால் ஒரு எரிஞ்சு போன ஒரு கட்டடம் இருக்கும் அந்த கட்டடத்தில் பார்த்தால் ஹிந்தியில்  கௌதம புதர் விஹார் ன்னு(எனக்கு  ஹிந்தி படிக்க தெரியும் ) போட்டு இருக்கும்,அம்பேத்கார் 1956ல் மாபெரும் ஒரு மதம் மாற்றம் புரட்சி  நடந்த ஆண்டு அதுவும் ஹிந்துவில் இருந்து புத்த மதத்திற்கு , அதை குறிக்க தான் அங்க வச்சி இருக்காங்க, ரஜினி பயன்படுத்தும் ஜீப்பின் நம்பர் கூட MH  01 BR(அம்பேத்கர் initial )  1956,  காலா போஸ்டர் வந்த பொழுதே அந்த நம்பர் ப்ளட் பற்றி போட்டாங்க, அதனால் அந்த building பெயர்க்கும் இதற்கும்  சம்மந்தம் இருக்கும் என்று எனக்கு  தோன்றியது 

மேலே குறிப்பிட்ட கருத்துகள் எல்லாமே என்னோட யூகங்கள்  மட்டுமே , உண்மையா என்று இந்த பதிவை டைரக்டர் ரஞ்சித் படித்து சொன்னால் தான் உண்டு . ஏதோ நம்மால் முடிச்சது சும்மா கொளுத்தி போடுவோம் .

ஏண்டா டேய் இது எல்லாம் முதல் தடவை பார்க்கும் பொழுது தெரியலன்னு நீங்க கேட்பீங்கன்னு தெரியும் , அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே , முதல் தடவை பார்க்கும் பொழுது ஒரு ரஜினி படமாக தான் பார்க்க தோணிச்சி , ஆனால் இரண்டாவது  தடவை நான் பார்க்கும் பொழுது ரஜினியின் tabelல் ராவண காவியம் புத்தகம் இருந்தது என் கண்ணில்பட்டது , அப்போ தான் எனக்கு இந்த படத்தை ராமாயணத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கணும் தோணுச்சு



குறிப்பு : ராவணன் தமிழனா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு , அதை பற்றி தேடி தேடி போகும் பொழுது பல புதிய பரிமாண செய்திகள் எனக்கு கிடைச்சுது , அது எல்லாம் உண்மையா பொய்யா தெரியாது , இருந்தாலும் உங்க referenceக்கு இங்கே பதிவு செய்கிறேன் .மேலும் நான் எந்த வீடியோ பார்த்து இந்த பதிவு போடவில்லை நான் பார்த்து எனக்கு தோன்றிய கருத்துகள் அவ்ளோதான் .

இராவணன் தமிழனா இல்லையா ?கீழே உள்ள லிங்க் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=XhW5UX2IEmU


இராவணன் குடும்பம் பற்றி
Visit https://www.quora.com/How-many-sons-did-Ravan-have

ராமாயணத்திற்கு இன்னொரு முகம் காட்டும் கதை
Visit https://www.youtube.com/watch?v=vXhxULdUd0I

மேலும் நான் சொன்ன கருத்துகளிலோ , அரசியல் பற்றியோ  அல்லது இதிகாசத்தை பற்றியோ ஏதேனும் தவறு  இருந்தால் சொல்லுங்கள் அதை மாற்றிவிடலாம் .

இரண்டாவது பதிவு போட்டதால் இந்த படம் சூப்பர் என்று எல்லாம் நான் சொல்லமாட்டேன் , இந்த பதிவு வெறும் நான் கவனித்த விஷயங்கள் மட்டுமே. .

மொத்தத்தில்  நான் ஏற்கனவே சொன்னது போல கதையிலும் , திரைக்கதையிலும் காலா காலமானது தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 







வியாழன், 7 ஜூன், 2018

Kaala - காலா

ரஜினி ரசிகர்களுக்கும் , சினிமா ரசிகர்களுக்கும் சினிகிறுக்கனின் வணக்கம் ,கபாலி பார்த்து கலகலத்து போனவர்களுக்கு , நிம்ர்ந்து உக்கார்ந்து வைக்கும்  படமாக  காலா அமையுமா ?

இந்த படத்தின் கதை , திரைக்கதை பற்றி பார்ப்பதற்கு முன்னாடி , இந்த படத்தை ஒரு ஒரு காட்சியாக எப்படி பண்ணிருக்காங்க , அதோட ப்ளஸ் மைனஸ் எப்படி இருக்கன்னு பார்க்கணும் 

சூப்பர் ஸ்டார்  படம் என்றால் நிச்சயமா மாஸ் இருக்கணும் , அந்த மாஸ் கபாலியில் சற்று கம்மி , அதனால் அந்த மாஸ் இதில் ரஞ்சித் சரி செய்து இருக்கார் , ஆனால் பக்கா மாஸ் இருக்கான்னு  பார்த்த அது மிஸ்ஸிங் தான் , சூப்பர் ஸ்டார்  படத்தில் சொல்லுவது போல முழு ரவுடி தனத்தை பார்த்தது இலையே சொல்லுவார் அது போல  இந்த படத்தில் அதை முழுசா பார்க்க முடியல.

ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த படத்தை சில பல காட்சிகளை விமர்சனம் பண்ணனும் , முதல் மாஸ் காட்சி  , அப்பறம் ஒரு ஒருத்தர் establish பண்ணற காட்சி , அவரோட குடும்பம் அதன் பின்னணி அது எல்லாம் ஓகே ,

சூப்பர் ஸ்டாரின் முன்னாள் காதலியாய் வரும் ஹுமா குர்ரேஷி காட்சி நல்லா இருக்கு , அதுவும் அவர் வீட்டில் முதல் முதலாக ரொம்ப வருஷம் கழிச்சி பார்க்கும் காட்சி சூப்பர், அதில் ரஜினியின் நடிப்பு செம்ம , அவர் காதில் கம்மல் ஆடுவது , கை விரல்கள் மடக்குவதை பார்த்து ரசிப்பது , அவர்க்கு பிடிச்சது , அவர் மனைவியிடம் காப்பி சொல்லுவது , ரொம்ப ரசிக்க வைச்சது, மேலும் ஹோட்டல் போயிட்டு பார்ப்பது , அதுக்கு அப்பறம் மனைவி ஈஸ்வரி ராவ் கிட்ட பேசுவது , ஈஸ்வரி ராவ் அவங்க பங்குக்கு அவங்க காதலை பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றுவதுன்னு அந்த காட்சிகள் எல்லாம் அழகா வடிவமைச்சிருக்காங்க .matured love நல்லா இருக்கு .

சரி மாஸ் சீன்ஸ் எப்படி வந்து இருக்கு ?முதல் காட்சியில் சும்மா ஒரு கண்பார்வை பார்த்ததும்  அவரோட பையன் வந்து  அடிப்பது ,டெண்டர் காட்சியில் சும்மா பேசாமல் இருந்துட்டு இருக்கும் பொழுது அந்த கண்பார்வையில் ஒரு நெருப்பு தெரிவது , அந்த மாஸ் நிச்சயமாக அது ரஜினியால் மட்டும் தான் பண்ண முடியும் ,குறிப்பாக இன்டெர்வல் சீன் அல்டிமேட் அந்த இடத்தில நிக்கல் பாட்டு வைச்சது கொஞ்ச கூட எதிர்பார்க்கல , அப்பறம் நானெப்பட்டேக்கர் வீட்டில் சந்திக்கும் காட்சி ,முக்கியமா ரொம்ப எதிர்பார்த்த கியா ரே செட்டிங் ah கேட்க்கும் வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கற  , முதல் சண்டை காட்சி அனல் பறக்கும்ன்னு பார்த்தா வேங்கையன் மவன் அப்படியே சும்மா ஒத்தையில  நின்னிட்டு போய்ட்டார், அப்பறம் சம்பத்தை கொலை செய்யும் காட்சி மாஸ் தெறிக்க விட்டு இருக்காங்க .ஸ்டேஷனில் பேசும் காட்சி செம்ம கலாய் .முக்கியமான ஒன்று இந்த மாஸ் சீன்க்கு எல்லாம் தூக்கி நிறுத்தியது சந்தோஷ் நாராயணன் இசை சொல்லணும் 

சரி மாஸ் சீன் பார்த்தாச்சு , காதல் சீன பார்த்தாச்சு , செண்டிமெண்ட் சீன் பற்றி பார்த்தாச்சு , கதை திரைக்கதை எப்படி இருக்கு ? இந்த படத்தை ரொம்ப எல்லாம் எதிர்பார்த்து போல, டீஸர் பார்க்கும் போதே தெரிஞ்சி போச்சி மும்பை base பண்ணி தாராவி , நில தகராறு கதை தான் என்று, கதை இது தான் என்று எதிர்பார்த்தது போல தான் படம் இருக்கு , அறுந்து பாழாய் போன பழைய மும்பை கதை தான் இது , பாட்ஷா, நாயகன் , வியட்நாம்  காலனி இப்படி பல தடவை பார்த்த கதை தான் , இதுல புதுசா ஒன்னும் பண்ணவில்லை.
 மேலும் காட்சியமைப்பு பார்த்தா ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொஞ்சம் மாற்றி நிலம் அது இதுன்னு மாற்றிட்டாங்க அவ்ளோதான் , மக்கள் போராட்டம் , அங்கேயே சமைத்து சாப்பிடவது , ஒரு போலீஸ் அவர்களுக்கு support பண்ணி பேசுவதுன்னு மெரினாவில் நடந்ததை மாற்றிட்டாங்க, அதில் போலீசாக வரும் அரவிந்த் மீசை செம்ம காமெடி ,எதுக்கு அப்படி செயற்கையாய் ஒரு மீசை ? ,பிறகு இந்த படத்தை பார்த்த அப்பறம் தான் புரியுது தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் தான் காரணம்ன்னு எப்படி ரஜினி அந்தளவுக்கு சரியாக சொன்னார்னு ,

சமுத்திரக்கனி ஓவர் acting , சில இடங்களில் நன்றாக இருந்தாலும் , பல இடங்களில் ரொம்ப ஓவர் ஆக்ட்டிங் போல இருக்கு ,நானெப்பட்டேக்கர் அவ்வளவு பவர் full ஆகா தெரியல, அது என்னவோ மும்பை அரசியல் என்றாலே பால்தாக்கரே தான் நம்ம தமிழ் சினிமாவுக்கு reference போல , நானெப்பட்டேக்கர் உருவம் உடை எல்லாம் அது போல தான் சித்தரிச்சி இருக்காங்க , மராட்டி அரசியல்வாதி என்பதால் தமிழ் உடைந்து உடைந்து பேசுவது accept பண்ணிக்கலாம் , ஆனால் டப்பிங் லிப் sync பல இடங்களில் அது செட் ஆகவில்லை 

முதல் பாதி ஒரு அளவுக்கு bore அடிக்காம ஒப்பேற்றி போனாலும் , ரெண்டாவது பாதி எதுக்கு , எங்க எப்படி போக போது தெரியாம போகுது , ரெண்டாவது பாதி சுத்தமா சுவரசியமோ , ஒரு பரபரப்போ , ஒரு ட்விஸ்ட்டோ எதுவும் இல்ல , ஒரு வாவ் சொல்லும் படியோ எந்த காட்சியும் இல்ல, ரஞ்சித் இந்த மெட்ராஸ் படத்தில் இருந்து வெளியே வர வேண்டும் , ஒரே மாதிரி கதை கரு , ஒரே மாதிரி காட்சியமைப்பு , எடுத்துக்காட்டு மெட்ராஸில் எல்லோரும் கருப்பு பெயிண்ட் ஊற்றுவாங்க , அது போல இந்த படத்திலும் இறுதி காட்சி இருக்கு , அந்த சிவப்பு கலர் அடிச்சி ரஜினி வரும் பொழுது , நிச்சயமா மெர்சல் பாடல் ஞாபகம் படுத்தியது .

இந்த டிக்கெட்டை பற்றி சொல்லியே ஆகணும் , சிலர் சொல்லுறாங்க ரஜினிக்கு opening இல்ல , டிக்கெட் எல்லாம் விற்று போகல ,ஒரு உண்மையை சொல்லணும்ன்னா  இதுக்கு முன்னாடி fake demand create செய்து , டிக்கெட் அவங்களே block பண்ணி , டிக்கெட் ரேட் 1500 ருபாய் வரை விற்றாங்க, online open பண்ணும் போதே டிக்கெட் இருக்காது ,  அதுக்கு கரணம் கலைப்புலி தாணு , இவர் மட்டும் இல்ல பல producer , மற்றும் தியேட்டர்காரங்க செய்யும் வேலை , ஆனால் இந்த படம் தயாரிப்பாளர் தனுஷ் அப்படி பன்னவில்லை நினைக்கறேன், அதனால தான் எனக்கு எல்லாம் online ல் ஈசியாக  முதல் நாள் டிக்கெட் கிடைச்சது , ஆனாலும் சில இடங்களில் டிக்கெட் விலை அதிகம் என்றாலும் முன்னாடி போல ரொம்ப அதிகம் இல்ல , இது போல அஜித் , விஜய் படங்களும் இப்படி fake demand create பண்ணாமல் இருந்தா எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும், எல்லோரும் படம் பார்ப்பாங்க அப்பறம் எவனும் 500 கோடி collection , 1000 கோடி collection என்று மார்பு தட்டிக்க மாட்டாங்க .இந்த 4-5 வருஷங்களாக தான் இவர்கள் படங்களுக்கு இப்படி hype , demand create பண்ணி லாபம் சம்பாதிக்கிறாங்க.

அஜித்துக்கு எப்படி ஒரு சிறுத்தை சிவாவோ அதுபோல ரஜினிக்கு ஒரு ரஞ்சித் , சாத்தியமா தல எழுத்தை மாற்ற முடியாது.

மொத்தத்தில் கதை திரைக்கதையில் காலமான  காலா 


இப்படிக்கு 
சினிகிறுக்கன்