வெள்ளி, 15 செப்டம்பர், 2017

Magalir Mattum - மகளிர் மட்டும்

குற்றம் கடிதல் படத்திற்காக தேசிய விருது வாங்கிய பிரம்மா இயக்கிய  படம் தான் இந்த மகளிர் மட்டும் , முதலிலே சொல்லணும்னா எனக்கு இந்த படத்தில் பிடித்தவை விட பிடிக்காதது நிறைய இருக்கு , அதனால என்ன திட்டாதீங்க , திட்டினாலும் பரவாயில்லை அதுக்கு எல்லாம் கவலைப்பட போவதில்லை , ஏன்னா இந்த படம் பலருக்கு பிடிச்சிருக்கு , சில காரணங்களால் எனக்கு பிடிக்கல அவ்ளோதான் .

படத்தின் கதை என்னன்னு பார்த்தா , ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களின்  வாழ்க்கை , அதில் படும் அவதிகளையும் , திருமணம் ஆகிய பெண்களுக்கு நட்பு வட்டம் என்பது சுருங்கிவிடும் , அவர்களின் பழய நட்பு உடைந்துவிடும்  , அந்த நட்பை  புதுப்பிப்பதும் , நடுத்தர பெண்களின் மனசில் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளும்  , அதை  நிறைவேற்றி  சந்தோசம் படுவதை தான்    சொல்லி இருக்கார் இயக்குனர் .

சரி எனக்கு ஏன் இந்த படம் பிடிக்கலைன்னா ? படம் முழுவதும் ரொம்ப செயற்கை தனமாக இருந்துச்சி , நல்ல நடிக்கும் நடிகைகள் பானுப்ரியா , சரண்யா , ஊர்வசி இருந்தாலும் , எல்லோருமே ஏதோ ரொம்ப அதிகமா நடிச்சி செயற்கையாக இருக்கு , அவங்க உணவர்வுகள் படம் பார்க்கும் மனசில் பதியவில்லை  ரொம்ப நாடகத்தனமாக இருக்கு , எனக்கு படத்தோட கொஞ்சம் கூட ஒன்ற முடியவில்லை .

படத்தில் வரும் பிளாஷ் பேக் , பள்ளி பருவங்கள் , எல்லாமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்ல , ரொம்ப சினிமாத்தனமா இருந்துச்சி , கொடுத்த காசுக்கு மேல நடிச்சா மாதிரி ஒரு எண்ணம் , படம் பல இடங்களில் ரொம்ப டாக்குமெண்ட்ரி தனமாக இருக்கு , பல டாக்குமென்டரி படங்கள் பார்த்தாலும் அது மனசில் பாதிக்கும் அளவுக்கு இருக்கும், ஆனால் இது கொஞ்சம் கூட எனக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்றவில்லை . ஒரு ஒருத்தரும் அவங்க அவங்க காதல் கதை ஒரு பாட்டில் சொல்லி இருப்பாங்க , அது ரொம்ப ரொம்ப செயற்கையாக தோணுச்சு ஏன் இபப்டி வச்சாங்கன்னு டைரக்டர் பார்த்து கேட்க்கும் போல இருந்துச்சி.

படம் full ஆகா ஜோதிகா வந்தாலும் , படத்தில் scope கம்மியா இருப்பது போல தான் எனக்கு ஒரு உணர்வு , ஊர்வசி , சரண்யா , பானுப்ரியாவுக்கு இருக்கும் அழுத்தம் கூட ஜோதிகாவுக்கு இல்ல , அவங்க ஸ்டேஜ் ஷோவில் MC போல படத்தை நடத்தி செல்கிறாங்க தவிர படத்தில் ரொம்ப முக்கியத்துவமா எனக்கு தோன்றவில்லை . ஆனால் அவங்க கண்ணாடி போட்டுக்கிட்டு bullet , கார் ஓட்டுவது பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்காங்க.

பெண்களை பற்றிய படம் என்றால் நிச்சயமாக ஆண்களுக்கு இடமில்லை , இருக்கும் ஆண்கள் நெகடிவ் ஆகா இருப்பாங்க , அது போல இங்க , லிவிங்ஸ்டன் , நாசர் வராங்க , இவங்க ரெண்டுபேருல நாசர் கேரக்டர் தான் பார்க்கும் போது கொஞ்சம் கோவம் வாரா மாதிரி நடிச்சி இருக்கார் .

எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் பார்த்தா , பானுப்ரியா மகன் மனசு மாறும் காட்சிகள் , அப்புறம் அந்த முவரும் ஒரு ராத்திரி அவங்க அவங்க மனசில் இருப்பத்தை ஒரு மூட்டையில் அடிப்பாங்க , அது நம் அனைத்து பெண்கள் மனசில் இருக்கும் குமாறல்களாக தெரிஞ்சது

என்னை பொறுத்தவரை இன்னும் அழுத்தமாக , இன்னும் இயற்கையாக இந்த படத்தை எடுத்து இருந்தா மகளிர்க்கு  மட்டுமில்லாமல்  அனைவருக்குமான படமாக அமைந்து இருக்கும் .

மொத்தத்தில் மகளிர் மட்டும் ரொம்ப நாடகமாக மட்டும்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments