வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

VIP2 - வேலையில்லா பட்டதாரி 2

வணக்கம் ரொம்ப நாள் கழித்து ஒரு விமர்சனம் , சிரிங்க சீரியஸ் ஆகா எடுத்துக்காதீங்க , அட ஆமாங்க யாரோ ஒருவர் ஏதோ ஒரு படம் விமர்சனம் செய்ய அதில் ஒருவரை பற்றி சொல்ல ரசிகர்கள் சண்டை பிச்சிக்கிச்சி, ஆனால் அதை பற்றி கவலை இல்ல , எவ்வளவு கழுவி ஊத்தினாலும் நாங்கள் விமர்சனம் செய்ய தான் போகிறோம் 

தனுஷ்,  தான் இந்திய அளவில் கொஞ்சம் பாப்புலர் ஆகா  இருக்கும்  ஹீரோ அதனால நாம் இந்த படத்தை தெலுங்கு , ஹிந்தின்னு பட்டய கிளப்பண்ணும் தோணிச்சி போல ,  over nightல all over இந்தியாவில் பாப்புலர் ஆகணும் நினைச்சிட்டார் போல , அதனால கஜோல் வில்லனாக போட்டு இருக்கார், சரி  அது எந்த அளவுக்கு செட் ஆகி இருக்கு ? சுத்தமா கஜோலுக்கு அது  செட் ஆகவில்லை 

படத்தோட முதல் பகுதி ஏன் போகுது , எதுக்கு போகுது எங்க போகுது யாருக்கும் தெரியல ஏதோ எங்கேயோ போகுது , சும்மா slow motion ல கஜோல் ஒரு பக்கம் கண்ணாடி போட்டுக்கிட்டு நடக்குறாங்க , தனுஷ் அவர் கிட்ட சிகெரெட் பத்தவச்சி சவால் விட்டு நடக்கிறார் , ஆனால் அந்த சவால் அடடா செம்மயா போக போகுது நினைச்சா சுத்தமா அதுவும் இல்ல , அட ஆமாங்க பல பெரிய ஹீரோ படத்தில அப்படி தான் நடக்கும் ஏன் இதுவே வேலையில்லா பட்டதாரி1 ல கூட இப்படி தான் ஆனால் அது செம்ம மாஸாக இருக்கும் , அதுக்கு அனிருத் மியூசிக் ஒரு பக்கபலமாக இருந்துச்சி ஆனால் இதில் அப்படி இல்ல அந்த மாஸ் மிஸ்ஸிங் 

சரி இரண்டாவது பாதியில் படையப்பா ரஜினி , ரம்யாகிருஷ்ணன் போல போட்டி போட போறாங்கன்னு பார்த்தா , சும்மா போகுது என்ன சொல்லறதுன்னு தெரியல கொஞ்சம் கொட்டாவி வரவைக்கற அளவுக்கு ஆக்கிட்டாங்க , ஆனா ஒன்னுங்க வேலையில்லா பட்டதாரி 1 க்கும் வேலையில்லா பட்டதாரி 2க்கும் continuity சரியாக maintain பண்ணி இருக்காங்க , அந்த வீடு , பக்கத்துக்கு வீடு , தனுஷுக்கு ஜோடி, அவரோட அப்பா , விவேக் , விவேக்கோட அஸ்ஸிடன்ட் , அந்த ஜெயபுஷ்பம் , தனுஷோட  தம்பி , அவ்வளவ்வு ஏன் அவர் தம்பி வச்சி இருக்கும் estilo கார் , அந்த காரோட கலர் கூட சரியாக maintain பண்ணி இருக்காங்க, அப்புறம் அந்த மொட்டை மாடி டென்ட் கூட போட்டு இருக்காங்க  , ஆனா தனுஷோட  முதலாளி பெண்ணாக வரும் சுரபியை மட்டும் மாற்றி விட்டாங்க , என்ன இந்த சீரியலில் போடுறா மாதிரி இவருக்கு பதிலாக இவர்ன்னு போட்டு இருக்கலாம் .அதே போல அந்த மொட்டை மாடியில் ஒரு தப்பு பண்ணிட்டாங்க வேலையில்லா பட்டதாரி1 எடுத்தது வேற மொட்டை மாடி இதில்  வேற மாடியில் எடுத்து இருப்பாங்க போல , இந்த படத்தில் மொத்தம் 5 டாடா ஸ்கை டிஷ் இருக்கு , அதுவும் அவங்க இருக்கிறது தனி வீடு அப்பார்ட்மெண்ட்ஸ் இல்ல .

அமலாபால் படத்தில் வைக்கணும் வச்சி இருக்காங்க , அவங்க ரெண்டுபேருக்கும் வரும் சண்டை , காமெடி என்கிற பேரில் வச்சி இருக்கும் காட்சிகள் எதுவும் செட் ஆகவில்லை பயங்கரமான மொக்கை சண்டை ரொம்ப செயற்க்கையாக இருந்துச்சி  , சமுத்திரக்கனி நல்லவேளை அவர் வந்து மெசேஜ் சொல்லவில்லை , விவேக் சுமார்ரகம் தான் 

கஜோல் சும்மா ஹிந்தி மார்க்கெட் கவர் பண்ணவேண்டும் என்பதிற்காக போட்டது தான் மற்றபடி எந்த ஒரு பயனும் இல்ல , அவங்க கேரக்டர் அந்த அளவுக்கு strong ஆகா இல்லங்க , எப்பொழுதும் வில்லன் கேரக்டர் strong ஆகா இருந்தா தான் ஹீரோ கேரக்டர் நல்லா இருக்கும்ன்னு சொல்லுவாங்க , அது இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங் 

தனுஷ் இந்த படத்தில் செய்த தவறுகள் என்னன்னு பார்த்தா வேலையில்லா பட்டதாரி 2  பெயர் வச்சது முதல் தப்பு , மேலும் அந்த படத்தை reference வச்சி continuity ஆகா எடுத்தது பெரிய தப்பு , மேலும் அந்த படத்தில் தீம் மியூசிக் ஹிட் அதே போல அந்த மியூசிக் வச்சி ஏதாவது செய்தால்  மக்கள் ஏற்றுப்பாக நினைத்தது மிக பெரிய தவறு , வேலையில்லா பட்டதாரி1 ஒரு சாதாரணமா கதை தான் ஆனால் சுவாரசியமான திரைக்கதை , அருமையான பாடல்கள் , இயற்கையான காமெடி எல்லாம் இருந்துச்சி , அவை அனைத்தும் இதில் இல்லை , வேலையில்லா பட்டதாரி1 எதிர்பார்த்து சென்றாலும் சரி, எதுவும் எதிர்பார்க்காமல் போனாலும் சரி இந்த படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் இல்ல நிறைய ஏமாற்றம் தான் .


இந்த second part எடுத்தாலே இப்படி தான் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்க தான் செய்யும் , எல்லாமே பாகுபலி போல second part ஹிட் கொடுக்க முடியுமா ? வேலையில்லா பட்டதாரி 2 க்கு இந்த நிலைமைன்னா அப்போ AAA பார்ட் -2 வருமே அந்த நிலைமை யோசிச்சி பாருங்க .

பவர் பாண்டி போல படத்தை இயக்கிய தனுஷ் இந்த படம் எடுத்தது கொஞ்சம்  ஏமாற்றம் தான் , சரி  சௌந்தர்யா எப்படி இந்த படத்துக்குள்ள வந்தாங்க ? இதோ ஒரு சின்ன கற்பனை 

சௌந்தர்யா : என்னங்க வேலையில்லா பட்டதாரி2 கதை வச்சி இருக்கீங்க கேள்விப்பட்டேன் , நான் வேண்டும்ன்னா டைரக்ட் பண்ணட்டுமா ?

தனுஷ் : ஏன் உங்கப்பாவை வச்சி டைரக்ட் பண்ணி நாசம் பண்ணது போதாதுன்னு என்னையும் நாசம் பண்ண பாக்குறியா ?

ரஜினி : என்னமா அங்க சத்தம் ?

தனுஷ் : சும்மா பேசிகிட்டு இருக்கோம் மாமா ,

மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி 2 arrears வச்ச பட்டதாரி தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 



5 கருத்துகள்:

Comments