சனி, 27 மே, 2017

Thondan - தொண்டன்

இந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல, நையாண்டியாக ஒரு விமர்சனம் கற்பனையாக செய்யலாம் என்று ஒரு ஐடியா அவ்ளோதான் .


(தொண்டன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்  சமுத்திரக்கனி அண்ணா தன் தம்பிகளுடன் ஒரு discussion )

சமுத்திரக்கனி அண்ணா :  டேய் தம்பிகளா என்ன பண்ணறீங்க ?

தம்பி'ஸ் குரூப் :  அண்ணா  தொண்டன் படம் கமிட் ஆகியிருக்கோம்ல அதான் நியூஸ் சேனல் எல்லாம் பார்த்துகிட்டு இருக்கோம் .

சமு .அண்ணா:   நல்லா பாருங்க டா .. நம்ம எல்லோரும் மாதிரி மசாலா படம் எடுக்க கூடாது , இந்த சமுதாயத்துக்கு நல்ல கருத்து உள்ள படமா மக்களுக்கு அறிவு கண்ணை திறக்கும் படமா இருக்கணும்டா தம்பிகளா

தம்பி'ஸ் குரூப் :   சரிங்கண்ணா , ஆனா  நிமிர்ந்து நில் படத்தில கருத்து இருந்துச்சி அதே நேரத்தில இரண்டாவது பாதியில் ஒரே தெலுங்கு படம் மசாலா மாதிரி இருந்துச்சே.


சமு .அண்ணா:   அது எல்லாம் பழசுடா , .ஜல்லிக்கட்டு போராட்டம் , அப்பா படம் அப்புறம் எவ்வளவு கருத்து உள்ள பேட்டி கொடுத்து இருக்கேன்


தம்பி'ஸ் குரூப் :   சரிங்க அண்ணே , இந்த படத்தில் என்ன சொல்ல போறோம் ?

சமு .அண்ணா:  2016ல் இருந்து -2017 வரைக்கும் , தமிழ்நாட்டுல என்ன எல்லாம் நடந்து இருக்கு சொல்லுங்க

தம்பி'ஸ் குரூப் :  விவசாய தற்கொலை

சமு .அண்ணா:  ஓகே அதுக்கு ஒரு காட்சி

தம்பி'ஸ் குரூப்:  மீத்தேன் , ஹைட்ரொ கார்பன்

சமு .அண்ணா:  ரைட் அதுக்கு ஒரு காட்சி


தம்பி'ஸ் குரூப்:  ஒரு தலை காதல் அதனால வரும் கொலை சம்பவம் , மேலும் குடியால் வரும் பிரச்னை, பெண்கள் மீது ஆசிட் வீச்சு , இப்படி ஏகப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்து இருக்கு .

சமு .அண்ணா:    சூப்பர் டா தம்பிகளா .... லேடி audience கவர் பண்ணணும் , ரொம்ப பவர் full aha இருக்கும் , அதுல நல்ல பன்ச் வசனம் வைச்சிடுவோம்

 தம்பி'ஸ் குரூப்:  அப்புறம் அமைச்சர்  வீட்டுல IT ரைட் , அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குறது , கருப்பு பணம் ஒழிப்பு , demonetization ,

சமு .அண்ணா:  செம்மடா  என் தம்பிகளா ....இப்படி எல்லாத்தையும் படத்துல கவர் பண்ணிடுவோம் .

 தம்பி'ஸ் குரூப்:  அண்ணா முக்கியமானதை மறந்துட்டோம்

சமு .அண்ணா:  என்னது டா தம்பி

தம்பி'ஸ் குரூப்:  அந்த ஜல்லிக்கட்டு போராட்டம் , அதன் பிறகு வந்த வன்முறை , வெளிநாட்டு பொருட்கள் மேல உள்ள மோகம் .

சமு .அண்ணா:  சரியா சொன்ன டா தம்பி , இதை பற்றி பக்கபக்கமா வசனம் பேசி கைதட்டு வாங்குறோம் , ஒரு 100 நாட்டு மாடு பெயர் சொல்லி கைதட்டு வாங்கிடுவோம் .

தம்பி'ஸ் குரூப்:   அண்ணா ஏதாவது ஒரு கருத்தை கதையா எடுத்து படம் பண்ணா பராவாயில்லை ,  படம் full ah  கருத்தை மட்டுமே  சொன்னா எப்படின்னே ?

சமு .அண்ணா:  அதுக்கு தான் எனக்கு சுனைனாவுடன் ஒரு love scene  வைக்கிறறோம் , விக்ராந்த் என் தங்கச்சி லவ் பண்ணுவான்  அதுக்கு ஒரு பாட்டு  , திருடனை தேடுகிற ஒரு காமெடி காட்சி , அப்பா படத்துல வர அந்த குட்டி பையனுக்கு காட்சிகள் வச்சிடுவோம் மக்கள் ரசிப்பாங்க .

தம்பி'ஸ் குரூப்:  அண்ணே இது  கொஞ்சம் மொக்கையா இருக்கிறா மாதிரி இருக்கே

சமு .அண்ணா(கோவமாக):  தம்பி என்னாடா சொன்ன?

தம்பி'ஸ் குரூப்:  இல்லண்ணே செம்ம காமெடி , மக்கள் செம்மையா ரசிப்பாங்க , அண்ணே சீமான் இப்படி தான் கருத்து படமா எடுத்து தள்ளிட்டு அரசியலுக்கு வந்துட்டாரு , அதுபோல ஏதாவது அரசியலுக்கு வர போறீங்களா ?

சமு .அண்ணா:  எல்லாம் மேல இருக்கவன் கையில இருக்கு

தம்பி'ஸ் குரூப்:  சூப்பர் ஸ்டார் மாதிரியே சொல்லுறீங்க செம்ம .

சமு .அண்ணா:  டேய் தம்பிகளா , என் அண்ணன் தம்பிராமையா , என் தம்பி சூரி , அப்பறம் நமோ நாராயணா , , முனைவர்  கு . ஞானசம்பந்தம்  அப்பறம் நாடோடிகள் , அப்பா படத்தில நடிச்சிவங்க எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிடு அவங்க எல்லாருக்கும் படத்தில் வாய்ப்பு இருக்குன்னு



(தொண்டன் படம் ரிலீஸ்க்கு பின் )


சமுத்திரக்கனி அண்ணா fans : செம்ம படம் , அண்ணா பிண்ணிட்டாரு , படம் full ah இந்த சமுதாயத்துக்கு தேவையான கருத்து , இப்போ இந்த சமுதாயத்தில் நடக்கும் அநியாய சம்பவங்களை தோலுருச்சி காட்டிட்டார் , அதுவும் அந்த ஜல்லிக்கட்டு வசனம் செம்ம, அடேங்கப்பா உடம்புஎல்லாம் புல்லரிச்சிடுச்சி 

General cinema audience : படத்துக்கு தான் வந்து இருக்கோமா ? இல்ல எதாவுது பிரச்சாரா கூட்டத்துக்கு வந்துட்டோமோ ?

சமுத்திரக்கனி அண்ணா fans:  டேய் என்ன சொன்ன ? உங்களுக்கு எல்லாம் நல்ல படங்கள் பிடிக்காதே 

General cinema audience :  ம்.ம். படம் சூப்பர் award confirm 

தமிழ் ராக்கர்ஸ் டீம் :  அப்பாடா நல்லவேளை நம்மளை பற்றி படத்தில் எதுவும் சொல்லல நாம தப்பிச்சோம்  .

மொத்தத்தில் : தொண்டன் தொண்டை தண்ணி வற்ற சமுத்திரக்கனி கூறிய கருத்துகள் .


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 19 மே, 2017

Sangali Bungili Kadhava Thorae - சங்கிலி புங்கிலி கதவ தொற

போன வருஷத்திலே ஜீவா படம்  பல வந்தாலும் , பயங்கர மொக்கையா போச்சி , நல்லவேளை நான் அதை பார்க்காம  தப்பிச்சுட்டேன் , சரி fox star studios  + அட்லீ தயாரிப்பு அதனால படம் ஒரு அளவு நல்லா போகும் நம்பி போனேன் , அந்த நம்பிக்கை ரொம்ப வீண் அடிக்கவில்லை அதே நேரத்தில் அடடே நல்லா இருக்குன்னு சொல்லவும் முடியலை .

அரைச்ச மாவு அரைச்ச பேய் கதை , வாங்க ஒரு பங்களாவுக்கு போகலாம் அதுல ஒரு பேய் இருக்கும் , அதுக்கு ஒரு பிளாஷ் பேக் வைக்கணும் , முக்கியமா சில கேரக்டர் பேய் போல effect கொடுத்து audience பயமுறுத்தணும் நினைச்சி மொக்கையா சில காட்சிகள் வைக்கணும் , பேய் படத்தோட ரூல்ஸ் லைட் அணைஞ்சி அணைஞ்சி  எரியனும் . ஒரு ball விளையாடும் காட்சி கட்டாயமா வைக்கணும் , நல்லவேளை tapல்  ரத்தம் வரும் காட்சி வைக்கலை , 

சரி படத்தில இருக்கறவங்க பற்றி பார்க்கலாம் , ஸ்ரீதிவ்யா அவங்களுக்கு அபத்தமான ஒரு காதல் கதை  , ஒரே பாட்டில் பணக்காரங்க ஆவது போல ஒரே பாட்டில் காதல் வருது, அதுவும் காதல் பாட்டு இல்ல , கலாய்க்கும் பாட்டு , தம்பிராமையா ஏதோ சவுண்ட் விட்டு build up பண்ணுறாரு ஆனா அந்த அளவுக்கு  காமெடி எடுபடவில்லை , அதுவும் தேவதர்ஷினி கூட பண்ணும் வாஷிங் மெஷின் காமெடி சிரிப்பு வந்தாலும் மனசுல நிக்கல அதுவும் ஒரு மட்டமான டபுள் மீனிங் காமெடி . கோவை சரளா ஒரே மாதிரி நடிப்பு காட்சிகள் ,எதுக்கு  சூரி அந்தமா மேல காதல் பாட்டு வைப்பது எல்லாம் செம்ம கடுப்பு .

சூரி காமெடி இந்த படத்தில் தான் கொஞ்சம் சில இடங்களில் ரசிக்கும்படி இருந்துச்சி,  குறிப்பா அவர் ஒரு பையன் கூட ball விளையாடுவது , குடிச்சிட்டு வீட்டுக்கு வெளியே பேசுவது , கடைசி காட்சிகளில் பேய்க்கு பயந்து ஓடும் காட்சிகள் .

படத்தோட கதை ரொம்ப சாதாரணமா இருப்பதும் , பிளாஷ் பேக் strong இல்லாமல் இருப்பதும் மைனஸ் , படத்தில்  ஒரு காட்சி கொஞ்சம் காமெடி , அடுத்த காட்சி பேய் காட்சி , இப்படி முதல் பாதி மாறி மாறி என்ன தான் செய்யப்போறாங்க தெரியாமல் போகுது , trailerல் பார்த்த அந்த காட்சி இன்டெர்வல் பகுதியில் வருது , சரி இரண்டாவுது பாதி நல்லா சுவாரசியமாக போகும் பார்த்தால் , கொஞ்சம் ஏமாற்றம் தான் , கௌசல்யா , ஸ்ரீதிவ்யா பிளாஷ் பேக்ல் வரும் ராதாரவி எல்லாருக்கும் முகத்தில்   தனியா அப்பி வச்சி இருக்காங்க மேக்கப் .

படத்தோட கதைன்னு திரைக்கதைன்னு  பார்த்தா எனக்கு கொஞ்சம் யாமிருக்க பயமேன் , தில்லுக்கு துட்டு போல தோணுச்சு , ஆனா படத்தோட கதைன்னு பார்த்தா  v.சேகர்  & விக்ரமன் படம் போல லா லா லா ன்னு bgm வசிப்பது போல இருக்கு , ஏன்னா குடும்பம் ஒற்றுமையோட இருக்கணும்னு ஒரு பேய் வந்து சொல்லிட்டு போகுது அடேங்கப்பா என்ன ஒரு புது சிந்தனை  , மீண்டும் அந்த bgm போடுங்க லா லா லா ன்னு, final touch அந்த எல்லோரும் படிக்கட்டுல தொங்கிகிட்டு எல்லா நாளும் எங்கள் வீட்டில் கார்த்திகைன்னு படுவது போல இருக்கு , 

மொத்தத்தில்  சங்கிலி புங்கிலி வழக்கமான க(தை)தவ தொறந்தவை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 14 மே, 2017

Yeidhavan - எய்தவன்


எய்த கதை அருமை அதுவும் 12th ரிசல்ட் சமயத்தில் , + +

முதல் பாதி திரைக்கதை எய்தவிதம் செம்ம , ++

ஒன்றோடு ஒன்று கதை connect செய்து இன்டெர்வல் வந்து நிற்பது ++

இரண்டாவது பாதி கதையை  நோக்கி போனாலும் கொஞ்சம் வளவளன்னு இருப்பது போல ஒரு உணர்வு   -  - 

கலையரசன் கொஞ்சம் வித்தியாசமான படங்கள் எடுத்து பண்ணுவது அருமை அதே கண்கள் மற்றும் எய்தவன் படங்கள் போல  ++

சட்னா டைட்டஸ் அளவா நல்லா பண்ணியிருக்காங்க ஆனா போலீஸ் வேஷம் செட் ஆகல  - - 

வில்லன் கௌதம் கண்ணாடி கழட்டினா கொஞ்சம் கண்கள் வித்தியாசமா தெரியுது அதனால தான் முக்காவாசி கண்ணாடியோட சுற்றி வரார் போல , ஒரு சில காட்சிகள் நல்லா பண்ணி இருக்கார் , சில காட்சிகள் அட போப்பா ரொம்ப கெத்து காட்டுற நீ , சொல்லுவது போல் இருந்துச்சி  + - 

டைரக்டர் சக்தி ராஜசேகரன் இப்படி ஒரு கதையை எடுத்தது  சூப்பர் , மேலும் சில விஷயங்கள் நல்லா detail ஆகா காட்டி இருக்கீங்க , காலேஜ் பீஸ் புடுங்கறது அதுக்கு ஏஜென்ட் செயல்படுவது , அப்பறம் காட்சிகள் brilliant காட்டியது , அந்த கொள்ளை அடிக்கும் காட்சி , ஒரு காலேஜ் பையனை கொலை செய்ய போகும் போது , சும்மானா அடிச்சி விடாம correct ஆகா ஒரு ஒரு ஏரியா வாட்ஸ் அப்ல் சரியாக சொல்லுவது ,  நல்லா பண்ணிருக்கார் , மெடிக்கல் காலேஜ் approval இல்ல அப்படின்னு கதை வரும் போது ஐயோ பைரவா போல இருக்கே கொஞ்சம் தோனாதான் செஞ்சது , ஆனா ஹீரோயிசம் எல்லாம் இல்லாமல் கதையை ஹீரோயிசம் ஆக்கிடீங்க அது மிக பெரிய ப்ளஸ் +++,

மொத்தத்தில் எய்தவன் நேர்மையாக சமூக அக்கறையுடன் எய்தது 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 13 மே, 2017

Saravanan Irukka Bayamaen - சரவணன் இருக்க பயமேன் ?

இந்த வருஷத்தில் வந்து இருக்கும் பல அருமையான படங்களில் இதுவும் அதில் ஒன்று , இந்த படத்தை ஒரு பொக்கிஷமாக வச்சி காப்பாத்தணும் , அப்படி ஒரு தெளிவான கதை, சுவாரசியமான திரைக்கதை , அருமையான பாடல்கள் , எதிர்பாராத திருப்பங்கள் , பல நகைச்சுவை நடிகர்களின் அருமையான , திறமையான காமெடிகளால் மனசு இலகி எல்லா மனசு கஷ்டங்களில் இருந்து விடுபட்டு வரலாம் . அப்படி ஒரு அருமையான படத்தை எழில் கொடுத்து இருக்கார் .


படத்தில ஆரமபத்தில் வரும் சூப்பர் chase சீன் அதில்  சூரி , மன்சூரலிகான் , போலீஸ் , உதயநிதி ஸ்டாலின் கலக்கும் ஒரு அருமையான காமெடி chase சீன எந்த படத்திலும் அப்படி பார்க்க முடியாது , அப்படி ஒரு சிரிப்பு , சிரிச்சி சிரிச்சி வயித்தெரிச்சல் வந்துடிச்சி, சாரி தப்பா சொல்லிட்டேன் , சிரிச்சி சிரிச்சி வயிறு புண்னாகிடுச்சி அப்படி ஒரு காமெடி , அதுவும் மன்சூரலிகான் , அவர் பையனாக வரும் சாம் , அவர் கூட இருக்கும் சில பல அல்லக்கைகள் , சூரி இவங்களோட மீசை எல்லாம் பார்த்தா,  அட டா யார்டா  அந்த அருமையான மேக்கப்மேன் இப்படி ஒரு அறிவாற்றலோட அந்த மேக்கப் போட்டது அதை அப்படியே டைரக்டர் ஓகே சொல்லி எடுத்து இருக்காரே , அனேகமாக இந்த மேக்கப்க்கு ஒரு தனி அவார்டு சன் டிவில கொடுப்பாங்க பாருங்களேன் .mark my words Mr.உதயநிதி நிச்சயமா அதுக்கு அவார்ட் confirm .


அப்புறம் முக்கியமான விஷயம் படத்தோட சுவாரசியமான விஷயம் ஒன்னு இருக்கு, அது சொல்லவேமாட்டேன் , அதாவது இந்த படம் ஒரு சாதாரணமான காமெடி படம் மட்டும் இல்ல , ஒரு பெரிய ட்விஸ்ட் என்னனா இது ஒரு பேய் கதை வேற, அது தான் முக்கியமான இன்டெர்வல் ட்விஸ்ட் , அய்யயோ இந்த முக்கியமானதை சொல்லிட்டேன் , அதை மனசுல இருந்து அழிச்சிடுங்க இல்லாட்டி படம் பார்க்கும் போது அந்த சுவாரசியம் போயிடும்.

படத்தில ஒரு நிமிஷம் கூட seatல உட்கார முடியாது , தப்பா புரிச்சிக்காதீங்க அதாவது படத்தில அப்படி ஒரு பரபரப்பு காமெடி அதுவும் அந்த பஞ்சயாத்து காட்சி  அடேங்கப்பா "வரேவா" கீழ விழுந்து விழுந்து சிரிச்சி அடிபட்டுடிச்சின்னா பார்த்துக்கோங்களே , வெறும் சிரிப்பு மட்டும் இல்ல உணர்வுபூரணமான காதல் பிளாஷ் பேக் வேற இருக்கு. எனக்கு அது பார்த்த உடனே மிஷ்கினோட பிசாசு படம் தோத்துபோச்சி டா சொல்லவச்சது , அது மட்டுமா உதயநிதி ஹீரோயின் ரெஜினாவை கமிஷனர் ஆபீஸ்க்கு கூட்டி சென்று ஒரு வீடியோ காட்டுவார் மனசு நெகிழ்ச்சியில் திளைத்தது, அப்படி ஒரு சென்டிமென்ட் புலி புலின்னு புளிச்சிட்டாங்க , சாரி செண்டிமெண்ட் புழி புழின்னு   புழிஞ்சுட்டாங்க .

உதயநிதி சார் நீங்க அடுத்து அரசியலில் வருவீங்களோ ? அதுக்கு தான் இதுல சின்ன lead கொடுத்து இருக்கீங்களோ ? Sun(Son) குடும்பத்தில் இருந்து அரசியல் வரமால் இருந்தா தான் ஆச்சரியம் .

இப்படி ஒரு  மாபெரும் படத்தோட ப்ளஸ் என்னனா அது  கிளைமஸ்க்கு  முன்னாடி வரும் ஜிகினா ஸ்ரீயின் தெய்வீக பாடலுக்கு பாரம்பரிய ஆடை போட்டு வரும் பாட்டு தான் , U certificate போட்டது இந்த படத்துக்கு சரியானது தான் தோணுச்சு 


இப்படி ஒரு சந்தோஷமான படத்தை தந்த எழில் , உதயநிதி , ரெஜினா , ஸ்ரீஷ்டி டாங்கே , மேலும் மற்ற நடிகர்கள் , டிரைவர்கள் , சாப்பாடு போட்டவர்கள் எல்லோரையும் ஒரு selfi எடுத்து சுத்தி போடுங்க , சாரி திருஷ்டி சுற்றி போடுங்க .

மொத்தத்தில் சரவணன் இருக்க எப்பொழுதும் பணமே .. மன்னிக்கவும் அதாவது சரவணன் தான்  இருக்காரே எப்பொழுதும் பயம் ஏன் ? 

குறிப்பு : இந்த படத்தை பார்த்த தமிழ் ராக்கர்ஸ் டீம் , இந்த படத்தை அவங்க websiteல் ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு  முடிவு எடுத்துட்டாங்க, ஏன்னா இப்படி ஒரு தரமான படத்தை ரிலீஸ் செய்து மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வர கூடாது என்பதால் .

இப்படிக்கு 
கிறு கிறுன்னு கிறுக்கு பிடிச்சி வெளியே வந்த சினிகிறுக்கன் 

வெள்ளி, 12 மே, 2017

Lens - லென்ஸ்

இந்த படம் பார்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் வெற்றிமாறன்  தான் , வெற்றிமாறன் வழங்கும்ன்னு போட்டதால் இந்த படம் பார்த்தேன் , அதே நேரத்தில் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றவில்லை , மேலும் இந்த படம் சென்னை , புனே , பெங்களூர் திரைப்படவிழாவில் இந்த படம் திரையிடப்பட்டது . மேலும் சில விருதுகளை வாங்கி இருக்கு இந்த படம் 

Best Debut Director --- 19th Gollapudi Srinivas National Award
Best Debut Director & Screenplay — Lonavala International Film Festival
Best Writer — Bioscope Global Film Festival
Best Direction ------- 7th Jagaran Film Festival


முதல் விஷயம் இந்த படம் இப்போ இருக்கும் இன்டர்நெட்டில் நடக்கும் பல ஆபத்துகளை வெளியப்படையக , எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் அப்பட்டமாக , இன்றைய வளையதள   சமூகத்தில் நடக்கும் விஷயத்தை, சினிமாவுக்காக  விட்டுக்கொடுக்காமல், எந்த ஒரு சினிமாத்தனத்தை சேர்க்காமல் நேர்மையான ஒரு படம்  இந்த லென்ஸ் 

இந்த படம் பார்க்க தேவையான விஷயங்கள் நீங்க பொழுதுபோக்கிற்காக படம் பார்ப்பவரா ? அப்போ இது உங்களுக்கான படம் அல்ல...  Skype மற்றும் சில appல்  வீடியோ சாட் செய்து காதல் பண்ணுபவரா ? அல்லது அதுக்கும் ஒரு படிமேல் சென்று உங்கள் காதலன் / காதலியுடன் உறவு கொள்பவரா ? அப்போ நிச்சயம் இந்த படம் உங்களுக்கு தான் , 

பொதுவா என்னோட விமர்சனத்தில் படத்தோட கதையை சொல்லமாட்டேன் , அதுவும் இந்த படத்தோட ஒரு வரி கதை கூட நான் சொல்லமாட்டேன்  ஏன்னா அதோட சுவாரசியம் போய்டும் , மேலும் இதுவரைக்கும் இந்த படம் எதை பற்றியதுன்னு மட்டும் சொல்லி இருக்கேன் , நிச்சயமாக இந்த படத்தை போயிட்டு பார்க்கவேண்டும் என்பதற்காகவே அதை சொல்லி இருக்கேன் .

துருவங்கள் 16 போல சமீபத்தில் வந்த சில படங்கள்  வித்தியாசமாக  வந்து மக்களை கவர்ந்து இருக்கு , அது போல இந்த படமும் அந்த வரிசையில் சேரும் , படத்தில் மிக பெரிய ப்ளஸ் கதை அது சொல்ல வந்து இருக்கும் மெசேஜ் , strong screenplay , எங்கேயும் bore அடிக்காம , அதே நேரத்தில் இது தான் நடக்க போகுதுன்னு easy ஆகா யூகிக்க விடாமால் , நாம் ஒன்று யூகிக்க ஆனால் இறுதியில் வேற மாதிரி  கதையோட முடிச்சிகளை அவிழ்ப்பது செம்ம . படத்தோட திரைக்கதை ஸ்பூன் feed பண்ணுவது போல audienceக்கு கொடுக்காமல் , காட்சியமைப்பு செய்தது செம்ம , குறிப்பாக flashbackம்  போலீஸ் விசாரணையும் கலந்து கலந்து காட்டி இருப்பது நல்லா இருக்கு.

தமிழ், மலையாளம் , ஆங்கிலம் என்று மூணு மொழிகளில் எடுத்து இருக்காங்க  , தமிழ்ல டப்பிங் தான் பண்ணி இருப்பாங்க போல ,அதனால பல இடங்களில் வாய் அசைப்பு கொஞ்சம் வித்தியாசமா தெரியுது தமிழ் படம் போல இல்லை , விபின் சித்தார்த் மலையாளத்திலும், ஜி.வி.பிரகாஷ் தமிழிலும் இசையமைச்சிருக்காங்க , படத்துக்கு அந்த த்ரில்லிங் ஆனா feel வந்ததற்கு ஜி.வி.பிரகாஷ்ம் ஒரு முக்கியம் பங்கு இருக்கு , படத்தில ஒரே ஒரு பாட்டு ஆனா அந்த பாட்டு உதயம் NH4ல் வரும் யாரோ இவன் மற்றும் தெறி படத்தில் வரும் என் ஜீவன் பாட்டு போல இருக்கு .

டீ கப் மாடியில் இருந்து விழுவது , A/Cக்கு கீழே புறா வாழ்வது , நண்பனோட ஹெல்மெட்டில் ஒரு கறை காட்டுவதுன்னு, ஒரு கர்ப்பம் கலைவதுன்னு  படத்தில் டைரக்டர் டச் காட்டி இருக்கார் .மேலும் சில அந்தரங்க காட்சிகள் இருப்பதால் குடும்பம் சூழ பார்ப்பதற்கு ஏற்புடையது அல்ல .

இப்படி ஒரு நல்ல படத்தை தியேட்டரில் காட்சிகளை லென்ஸ் போட்டு தான் தேடணும் போல , குறைவான காட்சிகள் தான் இருக்கு.

முகங்கள் புதுசாக இருப்பதால்,  யார் எந்த role பண்ணி இருக்காங்கன்னு சில பேருக்கு தெரியல அவங்களுக்காக 

Written & Directed        -        Jayaprakash Radhakrishnan
Aravind                          -        Jayaprakash Radakrishnan
Yogan                             -       Anandsami
Angel   (Yogan wife )    -        Aswathy Lal
Swathi  (Aravind wife)  -       Misha Goshal

மொத்தத்தில்  இந்த லென்ஸ் இன்றைய இருட்டுலக சமூகத்தை zoom போட்டு காட்டி இருக்கும் படம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன்