ஈரம் , வல்லினம் , ஆறாவது சினம் இப்படி அறிவழகன் படம்ன்னா நிச்சயமா ஒரு தரமா அதே நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ஒரு நம்பிக்கையோட போனேன் , அந்த நம்பிக்கை வீண் போகவில்லை அதுவும் ராஜேஷ் குமார் கதை வேற, அப்போ சொல்ல வேண்டியது இல்ல, நிச்சயமா நல்லா தான் இருக்கும்ன்னு போனேன் .ராஜேஷ் குமார் கதை எல்லாம் படிச்சது இல்லை மத்தவங்க சொல்லி கேட்டு இருக்கேன்
படம் ஆரம்பிக்கும் போதே அதன் டைட்டில் backgroundல் போகும் காட்சி அமைப்பு வச்சே இதன் கதை (கரு ) எது சம்பந்தபட்டது என்று தெரியுது , மேலும் அருண்விஜயோட அவங்க குடும்பம் பற்றி காட்சி வரும் போது ,அது இன்னும் உறுதிபடுத்துடுச்சி , ஆனால் அது எதனால்? யாரால்? எப்படி நடக்குதுன்னு சொல்லமால், அதன் கதை(கரு) முடிச்சியை கடைசி வரை கொண்டு போவது அருமை .
படத்தின் பிடிச்ச விஷயங்கள் என்னனா படம் பார்க்க பிரெஷ் பீலிங் இருக்கு , படம் ஆரம்பத்தில் கதைக்குள்ள சீக்கிரம் போகுது , கொஞ்சம் கொஞ்சம் காதல் அது இது இருந்தாலும் அது படத்திற்கு பெரிய தடையா தெரியல , அருண்விஜய் ஹீரோயினை காமிஷினர் ஆபீஸ்ல detail ஆகா விசாரிப்பது நல்ல இருந்துச்சி , அருண்விஜய் ஒரு அப்பார்ட்மெண்ட்ஸ்ல் சண்டை போடும் காட்சி நல்லா இருக்கு, மஞ்சிமா நம்பியார் அளவான தேவையான ரோல் பண்ணி இருக்காங்க , இவங்கள எங்கயோ கொஞ்சம் தெரிஞ்சா மாதிரி இருக்கு ஆனா புதுசா இருக்காங்களே நினைச்சேன், கூகுளை தட்டின அப்பறம் தான் தெரியுது சாட்டை படத்தில வந்தவங்க தான் இவங்க, அடேடேய் ஆச்சரியக்குறி !!..தம்பிராமையா லைட் ஆகா சிரிக்க வைக்க ட்ரை பண்ணாரு ஆனா அந்த அளவுக்கு எடுபடல , கடைசியா அரவிந்த் ஆகாஷ் விசாரிக்கும் சீன ல நல்லா பண்ணி இருந்தார் .
படத்தில் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது சில விஷயங்கள் அது என்னனா , முன்னாடி சொன்னது போல படத்தின் கதை(கரு) என்னன்னு தெரிஞ்சாலும் அது யாரால் , எதற்காக செய்றாங்கன்னு தெரியாம வச்சி இருக்கிறது அருமையாக இருந்தாலும், படத்தின் இரண்டாவுது பாதியின் ஆரம்பத்திலே சொல்லி இருந்து அருண்விஜய் , கிருஷ்ணா வம்சி காட்சிகள் இன்னும் கொஞ்சம் வச்சி இருந்தா நல்லா இருந்து இருக்கும் , மேலும் கதையின் த்ரில்லிங் feel இருந்தாலும் அது இன்னும் கொஞ்சம் வேகமா காட்சியம்மைப்புடான் இரண்டாவுது பாதி சொல்லி இருந்தா படம் இன்னும் நல்லா இருந்து இருக்கும் , குற்றம் 23க்கு வம்சி சொல்லும் காரணம் அதுக்கு அவர் செய்யும் செயல்கள் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை , ஒருவேளை இது நாவல் கதை என்பதால் வம்சி கேரக்டர் detail ஆகா சொல்ல இந்த படம் பத்தாதுன்னு அதை கொஞ்சமாக சொன்னதால என்னமோ அது கொஞ்சம் பாதியில விட்டது போல ஒரு உணர்வு
படத்தின் பெயர் பொருத்தம் ரொம்ப அருமையாக பொருந்தியிருக்கு , நாவல் பெயரும் அதே தான் குற்றம் 23 , நான் கூட இந்த 23 என்பது சட்டத்தில் ஒரு எண் அல்லது அந்த படத்தில் நடக்கும் குற்றத்தின் எண்ணிக்கையோ நினைச்சேன் ஆனா படத்தின் கதைக்கும் விஞானமாகவும் இருக்கு அந்த 23.
மொத்தத்தில் ஓரளவு குற்றமில்லா குற்றம் 23 இது
இப்படிக்கு
சினி கிறுக்கன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments