இதுக்கு முன்னாடி சில ஹிந்தி படங்கள் பார்த்து இருந்தாலும் அதை பற்றி எழுதினது இல்ல , இந்த படம் எல்லோரும் எதிர்பார்த்த படம் அதனால எழுதுறேன், சத்தியமா ஹிந்தில தாங்க பார்த்தேன் , தமிழ் டப்பிங் பார்க்கல, ஒரளவு நல்லாவே ஹிந்தி எனக்கு புரியும், எதுக்குடா இந்த தேவை இல்லாத முன்னுரைன்னு கேட்பது தெரியுது , இருந்தாலும் சொல்லுவது என்னோட கடமை ..... !.
இந்த படத்தை பார்காதவங்க கூட இதோட கதை என்னன்னு தெரியும் , அட ஆமாப்பா ராஞ்சில் பிறந்தவர் , புட்பால் கோல் கீப்பர் , அப்புறம் கிரிக்கெட் விக்கெட் கீப்பர் , ரயில்வேயில் வேலை செய்தவர் , அப்புறம் அவரோட கிரிக்கெட் வரலாறு என்னன்னு எல்லாருக்கும் தெரியும் ,
அவரோட வரலாற்றை 190 நிமிஷம் சொல்லி இருக்கும் படம் தான் இது , படம் என்னடா ரொம்ப பெருசா இருக்கே பயந்து தான் போனேன் ஆனா எங்கேயும் படம் bore அடிக்கல .
சரி படத்தில பேச வேண்டிய விஷயங்கள் என்ன இருக்கு ? கதாபாத்திரங்கள் தேர்வு , யுவராஜ் சிங் போலவே ஒருத்தர் , ஜக்மோகன் டால்மியா போலவே ஒருத்தர் , கொஞ்சம் எ.கே.கங்குலி போலவே ஒருத்தர் , அப்புறம் ஹீரோ அப்படியே தோனியோட body language எல்லாம் நல்லா follow பண்ணி இருக்காரு , பிறகு சின்ன பையன் தோனி அந்த சின்ன பையன் போலவே அந்த சின்ன வயசு தோனியோட அக்கா, குறிப்பா அந்த மூக்கு அமைப்பு ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி இருப்பது அருமை , பிறகு அவரோட நண்பர் கதாபாத்திரங்கள் , ஹெலிகாப்டர் ஷாட் சொல்லி தரும் நண்பர்கள் எல்லாரும் சூப்பர் .
படத்தில் technical வேலை ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க , அந்த மேட்ச் நடக்கும் இடங்கள் , original மேட்ச் வீடியோ footage வச்சி இந்த ஹீரோவின் முகத்தை அந்த இடங்களில் சரியாய் பொருத்தி இருக்காங்க , ஆஸ்திரேலிய மேட்ச் , 2007 T20 world கப் , 2011 world cup finals அது மாதிரி எல்லா இன்டர்நேஷனல் மேட்ச்களின் footageல , மேட்ச் முடிஞ்சி players கட்டிப்பிடிக்கும் காட்சிகள் கூட ரொம்ப நல்லா வேலை செய்து இருக்காங்க எங்கேயும் அந்த அளவுக்கு பிசுறு தட்டவில்லை
எனக்கு படத்தில் மிகவும் பிடிச்ச பகுதி , தோனி வீட்டுக்காக ரயில்வே வேலை , தனக்காக கிரிக்கெட் , ஒரு பக்கம் profession மறுபக்கம் passion அப்படின்னு மாற்றி மாற்றி கஷ்டப்படுவது காட்சிகள் ரொம்ப அழகா ஹீரோ சுஷாந்த் சிங் நல்ல பண்ணி இருக்காரு
படத்தில ஒரே வருத்தம் என்னன்னா நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் ல ஆடின மேட்ச் போட்டு இருந்தா செம்மயா இருந்து இருக்கும், வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கையெழுத்து போடுவது போல ஒரே ஒரு காட்சி தான் வச்சி இருந்தாங்க , அதுக்கே நம்ம சென்னை பசங்க விசில் காது கிழியுது .
நாமெல்லாம் டிவில தான் மேட்ச் பார்க்கிற ஆளுங்க , நிச்சயமா இந்த படத்தை தியேட்டர்ல போயிட்டு பார்த்தா கிரிக்கெட் மேட்ச் ஸ்டேடியத்தில் போயிட்டு பார்த்தது போல feel தரும் ..
மொத்தத்தில் தோனி பக்கா ஹெலிகாப்டர் வின்னிங் ஷாட் தான் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments