இந்த படத்தில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னனா , ரொம்ப சினிமாதனம் இல்லமால் இயற்கையான விஷயங்கள் படத்தில் இருக்கு , அப்படியே யாரும் காட்டாத தொழில்களை காட்டியிருக்காரு , அதாவது ஒரு கிரெடிட் கார்டு கலெக்ஷன் சென்டர் காட்டுவது , குறிப்பா அந்த சுற்றுசூழல் , அவங்க phone பேசுவது , சாப்பிடுற இடம் , பெண்கள் பழகி கொள்ளுவது , ஜொள்ளு வழியும் customer கிட்ட பேசுவது , குறிப்பா பூஜா தேவரிய அணியும் ஆடை , அதை பார்க்கும் போதே அவங்களோட சூழல் சொல்லாமல் சொல்லுவது செம்ம , பிறகு நாசர் செய்யும் கண்ணாடி தொழில் எனக்கு தெரிஞ்சு அந்த தொழில் செய்யவது மாதிரி நம்ம தமிழ் சினிமாவுல காட்டியது இல்ல ,
படத்தோட ஹீரோ விதார்த்தும் டைரக்டர் மணிகண்டனும் தான் , பொதுவா டைரக்டர் மனசுல இருப்பது படமா ப்ரதிபலிப்பதில் கேமராமேனக்கு முக்கியமான பங்கு இருக்கு , அதுவே கேமராமேனே டைரக்டர்ஆக இருந்தா மனுஷன் பின்னியெடுத்துட்டாரு , விதார்த் ஒரு வித்தியாசமான கண் குறையுள்ளவராக வாராரு, விதார்த் அந்த குறை உள்ளவராக நடிப்பதும் , அதை நமக்கு அப்படியே உணர வச்ச கேமராமேனும் டைரக்டரும் ஆகிய மணிகண்டனுக்கு பெரிய தலைவணங்கிய வாழ்த்துகள்.குறிப்பா விதார்த் பைக் ஓட்டும் போது , ஐயோ எங்க அவருக்கு ஏதாவது ஆகிடுமோ என்று எண்ணம் வரா மாதிரி நடிச்சி இருக்காரு .
படத்தோட மைனஸ்ன்னு நான் நினைத்தது படம் கொஞ்சம் நிதானமாக போவது , மேலும் அந்த குற்றவாளி யாருன்னு ஆரம்பித்திலேயே யூகிக்க முடிஞ்சது எனக்கு , மற்றவர்களுக்கு எப்படின்னு தெரியல .
மொத்தத்தில் குற்றமே தண்டனை , படத்தில் பெரிதாக கண்டுபிடிக்க எந்த குற்றமும் இல்லை பார்ப்பதால் நமக்கு எந்த தண்டனையும் இல்லை .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments